கருக்காத்தம்மன் கோயிலில் பால்குட ஊர்வலம்

மாமல்லபுரம் கருக்காத்தம்மன் கோயிலில் தை மாதத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சுமங்கலிப் பெண்கள் 208
பால்குட ஊர்வலத்தில் பங்கேற்ற பக்தர்கள்.
பால்குட ஊர்வலத்தில் பங்கேற்ற பக்தர்கள்.


மாமல்லபுரம் கருக்காத்தம்மன் கோயிலில் தை மாதத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சுமங்கலிப் பெண்கள் 208 பால்குடங்களை சுமந்து வந்து ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். 
முன்னதாக மாமல்லபுரம் ஓம்சக்தி பீடத்தில் இருந்து காவடி, கரகத்துடன் பால்குட ஊர்வலம் தொடங்கியது. முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற இந்த ஊர்வலத்தில் நேர்த்திக்கடனாக விரதம் இருந்த பெண்கள் மஞ்சள் ஆடை உடுத்தி பரவசத்துடன் தலையில் பால்குடம் சுமந்து ஓம்சக்தி, ஸ்ரீசக்தி என்று கோஷம் எழுப்பிபடி சென்றனர். 
பால்குட ஊர்வலம் கருக்காத்தம்மன கோயிலை அடைந்ததுடன் அங்கு கருவறையில் உள்ள அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து வணங்கினர். விழாவை முன்னிட்டு கருக்காத்தம்மனுக்கு சிறப்பு மஞ்சள்காப்பு அபிஷேகம் நடைபெற்றது. 
பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி தந்தார். விழா ஏற்பாடுகளை திருவிளக்கு பூஜைக் குழுவில் இடம்பெற்றுள்ள கமலா, பூங்குழலி, கோயில் தர்மகர்த்தா சந்திரன் மற்றும் விழாக் குழுவினர் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com