முருகன் கோயில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் நிகழ்வு

கல்புதூர் சிறுகுன்றம் முருகன் கோயில் மூலவர் மீது சூரிய உதயத்தின்போது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வை சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் செவ்வாய்க்கிழமை தரிசித்தனர்.
கல்புதூர் சிறுகுன்றம் முருகன் கோயில் மூலவர் மீது விழுந்த சூரிய ஒளி.

ராணிப்பேட்டையை அடுத்த அம்மூர் அருகே கல்புதூர் கிராமம் சிறுகுன்றத்தில் வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மூலவர் மீது ஆண்டுக்கு சில நாள்கள் சூரியனின் கதிர்கள் விழுவது வழக்கம்.
இந்நிலையில், நிகழாண்டு உத்தராயண காலத்தையொட்டி கடந்த 16ஆம் தேதி முதல் காலை காலை 6.13 மணி முதல் 6.50 மணி வரை மூலவர் மீது சூரிய ஒளி நிலைகொண்டிருந்தது. அதன் பின் சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. 
மூலவர் சிலை மீது சூரிய ஒளி விழும் நிகழ்வு 20ஆம் தேதி (புதன்கிழமை) வரை நிகழும் என பிரபு சாது சுவாமிகள் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com