செவ்வாய்க்கிழமை 20 நவம்பர் 2018

பிறப்புக்கு முன்பே பாலினம் கண்டறிதல் (பாலின தேர்வு தடைச்சட்டம் ) 1992

By வழக்கறிஞர் சி.பி. சரவணன்| DIN | Published: 09th July 2018 11:52 AM

 

கரு உருவாவதற்கு முன்போ பின்போ பாலின தேர்வை தடை செய்யவும் பிறப்பதற்கு முன்னால் பால் அறியும் தொழில் நுட்பத்தை ஒழுங்குப்படுத்தவும் பரம்பரை மாறுபாடுகள் வளர்ச்சிதை மாறுபாடுகள் குரோமோசோம்கள் மாறுபாடுகள் பிறவிலேயே உண்டாகும் குறைபாடுகள் பாலினம் சார்ந்த குறைபாடுகள் பாலறிதல் சோதனையின் தவறான உபயோகம் பெண் சிசுக்கொலை இது போன்றவையும் இவை சார்ந்தவையும் உடன் நிகழ்வாக எழும் சங்கதிகளை ஒழுங்குப்படுத்த புனையப்பட்ட சட்டம்.இந்திய குடியரான 45-வது ஆண்டில் இச்சட்டம் கீழ்வருமாறு புனையப்பட்டது.

1. குறுந்தலைப்பு, அளாவுகை, துவக்கம் :

1. இச்சட்டம் பிறப்புக்கு முன்னமே அறியும் சோதனை (பாலின தேர்வை தடை செய்தல்) சட்டம் என அழைக்கப்படும்.

2. ஜம்மு காஷ்மீர் நீங்கலாக இந்தியாவின் முழுமைக்கும் பொருந்தும்

3. இதற்கென இந்திய அரசு அரசிதழில் இது குறித்து வெளியிடும் அந்நாளில் இருந்து இது அமுலுக்கு வரும்.

2. சொற்பொருள் விளக்கம் : அவ்வேளைக்கு அவ்வாறு அவசியப்பட்டாலொழிய

a.தக்க அதிகாரக் குழு என்பது பிரிவு 17-கீழ் பணியமர்த்தப்பட்ட தக்க அதிகார குழுவை குறிக்கும்.

b.வாரியம் என்பது பிரிவு –இன் கீழ் பணியமர்த்தப்பட்ட வாரியத்தைக் குறிக்கும்.

ba.கர்ப்ப உபநேர்வு(Conceptus) என்பது கருத்தரிக்கும் வேளையில் கருச்சேர்க்கை சினைப்படுதல் காலத்திலிருந்து பிறக்கும் வரை உருவாகும் கருச்சவ்வு கருவுயிர் முதிர்கரு ஆகியவற்றை குறிக்கும்.

bc.முதிர்கரு (embryo) என்பது கருச்சினை உருவான 57வது நாளிலிருந்து பிறப்பில் முடிவடையும் கருவளர்ச்சியை குறிக்கும்.

c.மரபியல் ஆலோசனை மையம் என்பது பெற்றோர்களுக்கு மரபியல் ஆலோசனை வழங்கும் நிறுவனம் மருத்துவமனை நலம் பேணகம் என எந்தப் பெயரில் அழைக்கப்பட்டாலும் அதனை குறிக்கும்.

d.மரபியல் கிளினிக் பிறப்பதற்கு முன் பாலறியும் பரிசோதனை முறைகளைச் செய்ய உபயோகப்படுத்தும் கிளினிக் நிறுவனம், மருத்துவமனைகளைக் குறிக்கும்.

விளக்கம் : இந்த கிளைக்கூறை பொறுத்தவரை அல்ட்ரா சவுண்ட் மெஷின் அல்லது ஸ்கேனர் அல்லது மற்ற கர்ப்ப காலத்தில் பாலினமறியும் கருவிகள் பொருத்தப்பட்ட வாகனங்களையும் குறிக்கும்.

e.மரபியல் சோதனைக் கூடம் என்பது பிறப்பிற்கு முன்னால் பாலறியும் சோதனை செய்யும் வசதி செய்யப்பட்ட ஓரிடம் என்பதைக் குறிக்கும்.

விளக்கம் : இந்த கிளைக்கூற்றை பொருத்தவரை மரபியல் சோதனைக்கூடம் என்பது அல்ட்ரா சவுண்ட் மெஷின் அல்லது In aging machine அல்லது ஸ்கேனர் அல்லது பாலினமறியும் சோதனை செய்ய பயன்படுத்தப்படும் சோதனைக்கூடங்களை குறிக்கும்.

f.மகப்பேறு மருத்துவர் என்பவர் பெண் நோயியலிலும் தாய்மைப் பேறியலிலும் முதுகலை பட்டம் படித்தோரைக் குறிக்கும்.

g.மருத்துவ மரபியலாளர் என்பவர் மரபியல் பட்டம் அல்லது பட்டயம் பாலின தேர்வு அல்லது பிறப்புக்கு முன் பாலறியும் சோதனை துறையில் 2 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் உள்ளவர் அப்படி பட்டம் பட்டயம் பெறும் முன்.

i.இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட (102ஃ1956) மருத்துவ தகுதியை உடையவர்.

ii.உயிரியல் பாடத்தில் பட்ட மேற்படிப்பு படித்தவர் ஆகியோரைக் குறிக்கும்.

h.குழந்தைகள் மருத்துவர் என்பவர் குழந்தைகளை தாக்கும் நோய்க்கான மருத்துவ பட்ட மேற்படிப்பு படித்தவரைக் குறிக்கும்.

l.பிறப்புக்கு முன் பாலறியும் முறைகள் என்பது, பெண் நோயியல் அல்லது தாய்மைபேறியல் தொடர்பான Ultra Sonography, Foetoscopy amniotic fluid மாதிரி எடுத்தல் கருச்சேர்க்கைக்கு பின்பு Charionic Villi இரத்தம் இல்லது திசுக்களிலிருந்து மரபியல் சோதனைக் கூடத்திற்கு அனுப்புவதற்காக மாதிரி எடுத்தல் அல்லது பாலின தேர்விற்காக கருச்சேர்க்கைக்கு முன்பு அல்லது பின்பு பிறப்புக்கு முன் நடத்தப்படும் பாலறியும் மருத்துவ பரிசோதனைகளை குறிக்கும்.

j.பிறப்புக்கு முன்னால் கண்டறியும் தொழில்நுட்பம் என்பது பிறப்புக்கு முன்னால் பாலினமறியும் முறைகளையும் பரிசோதனைகளையும் குறிக்கும்.

k.பிறப்புக்கு முன்னால் பாலினமறியும் பரிசோதனைகள் என்பது அல்ட்ரா சோனோகிராபிக் மற்றும் அதுபோன்ற சோதனைகள் மூலமாக amniotic fluid ahorionic villi திசுக்கள் கர்ப்பிணி பெண்ணிற்கு சுரப்பவை, ரத்தம், திசு கர்ப்ப உபநேர்வுகளை கூறுபடுத்தி ஆராய்கிற வளர்சிதை மாற்றங்கள் குரோமோசோம் மாறுபாடுகள் பிறவிலேயே வரும் வழக்கத்திற்கு மாறானவை, (congenial anomalies) , haemoglobinopathi அல்லது பால் தொடர்பான குறைபாடுகளைக் கண்டுபிடிக்கச் செய்யப்படுகிற Ultra Sonography அல்லது அதுபோன்ற பரிசோதனைகளை குறிக்கும்.

l.குறித்தளித்ததென்பது இச்சட்டத்தின் விதிகளின்படி குறித்தளித்ததை குறிக்கும்.

m.பதிவு பெற்ற மருத்துவர் என்பது 2(h) இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் 1956 படி தகுதி வாய்ந்த மருத்துவ தகுதியை பெற்றிருந்து மாநில மருத்துவ பதிவேட்டில் பதிவு செய்துள்ள நபரைக் குறிக்கும்.

n.ஒழுங்குமுறைகள் என்பது வாரியத்தால் இச்சட்டத்தின்படி உருவாக்கப்பட்ட ஒழுங்குமுறைகளை குறிக்கும்.

o.பாலின தேர்வு என்பது, கரு ஒரு குறிப்பிட்ட வகை பாலினமாக இருக்க வேண்டும் என்பதற்கான நிகழ்தகவை நிச்சயப்படுத்துவதற்காக செய்யப்படும் முறைகள் தொழில்நுட்பங்கள் பரிசோதனைகள் ஆகியவற்றை குறிக்கும்.

p.Sonologist or Imaging specilalist இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் 1956 -ல் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ தகுதிகளை பெற்றவர் அல்லது சோனாலஜி மற்றும் இமேஜிங் துறையில் முதுகலை பட்டம் பெற்றவரை குறிக்கும்.

q.மாநில வாரியம் என்பது மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்திற்கு இச்சட்டப்பிரிவு 16 யு படி அமைக்கப்படுகிற கண்காணிப்பு வாரியத்தை குறிக்கும்.

r.மாநில அரசாங்கம் என்பது யூனியன் பிரதேசங்களை பொறுத்தவரை ஜனாதிபதியினால் இந்திய அரசியலமைப்பு சட்டம் தொகுதி 236-ன்படி நியமிக்கப்பட்ட அப்பிரேதசத்தின் நிர்வாகத்தினை குறிக்கும்.

அத்தியாயம் 1

மரபியல் ஆலோசனை மையம் மரபியல் ஆய்வகங்கள் மற்றும் மரபியல் கிளினிக் ஆகியவற்றை ஒழுங்குப்படுத்துதல் (REGULATION OF GENETIC COUNSELLING CENTRES, GENETIC LABORATORIES AND GENETIC CLINICS)

பிரிவு 3 : மரபியல் ஆலோசனை மையம் மரபியல் ஆய்வகங்கள் மரபியல் கிளினிக்குகளை ஒழுங்குப்படுத்துதல்

1.இச்சட்டம் செயலுக்கு வந்த நாள் முதலும் அதன் பின்னரும் இச்சட்டத்தின்படி பதிவு பெற்ற எந்த ஒரு ஆலோசனை மையமும் மரபியல் ஆய்வகங்களும் அல்லது மரபியல் ஆய்வகங்களும் அல்லது மரபியல் கிளினிக்குகளும் பிறப்பிற்கு முன்னால் பாலறியும் தொழில்நுட்பம் நடத்தவோ நடத்துவதற்கு கூட்டுச் சேரவோ உதவவோ கூடாது.

2.எந்தவொரு மரபியல் ஆலோசனை மையமும் மரபியல் ஆய்வகங்களுக்கும் கிளினிக்குகளும் இதுகுறித்து சொல்லப்பட்டவாறு மருத்துவ தகுதிகள் பெற்றவர்களை கௌரவத்தின் அடிப்படையிலோ அல்லது ஊதியம் கொடுப்பதன் மூலமாகவோ பணியமர்த்தினாலோ அவர்களின் சேவையை கோரி பெறவோ கூடாது.

3.இச்சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட இடங்களைத் தவிர பிற இடங்களில் மருத்துவ மரபியலாளர் ,பெண் நோயியலாளர் குழந்தைகள் நோய் மருத்துவர் அல்லது மற்ற எவரும் பிறப்புக்கு முன்னால் பாலறியும் சோதனையை செய்யவோ,  செய்விக்கவோ தானாக அல்லது பிறர் மூலம் செய்விக்கக்கூடாது.

3 A. (சட்டம் 14/2003-ன்படி புதிதாக ஏற்படுத்தப்பட்டது) பாலினத் தேர்வு செய்வதை தடுத்தல் மலட்டுத் தன்மை இயலில் சிறப்பு நிபுணர்கள் அல்லது சிறப்பு நிபுணர்கள் குழு எவரும் ஒரு ஆணுக்கு, பெண்ணுக்கு அல்லது இருவருக்கும் கருவுயிர் கர்ப்ப உபநேர்வு பாலணு சுரப்பிகள் ஆகியவற்றில் பாலினத் தேர்வு செய்யக் கூடாது.

3B. இச்சட்டப்படி பதிவு செய்யாத நபர்களுக்கு அல்ட்ரா சவுண்ட் மெஷின் அல்லது ஸ்கேனர் முதிர்கருவின் பாலை அறியும் திறன் பெற்ற சாதனங்கள் எவற்றையும் எந்தவொரு மரபியல் ஆலோசனை மையம் மரபியல் சோதனைக்கூடம் மரபியல் கிளினிக்குகள் விற்பனை செய்யக் கூடாது.

அத்தியாயம் 3 :

பிறப்புக்கு முன்னால் கண்டறியும் தொழில் நுட்பங்களை ஒழுங்குப்படுத்துதல்

(REGULATION OF PRE-NATAL DIAGNOSTIC TECHNIQUES)

4. பிறப்புக்கு முன்னால் பாலறியும் தொழில் நுட்பங்களை ஒழுங்குப்படுத்துதல்

இச்சட்டம் செயலுக்கு வந்த நாள் முதலாகவும் அதன் பின்னும் (2)-வது மற்றும் (3)-வது உபகூறுகளில் தெரிவிக்கப்பட்ட காரணங்கள் தவிர்த்து பிறவற்றிற்கு

1.எந்தவொரு பதிவு பெற்ற மரபியல் ஆலோசனை மையம் மரபியல் சோதனைக்கூடம் மரபியல் கிளினிக்குகள் ஆகியவற்றை எந்த ஒரு நபரும் இதன் கிளைக்கூறு (2)-ல் சொல்லப்பட்ட காரணங்களுக்கு கிளைக்கூறு (3)-ல் சொல்லப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு செய்வது தவிர மற்ற காரணங்களுக்கு பிறப்பிற்கு முன்னால் கண்டறியும் சோதனை செய்ய பயன்படுத்தக் கூடாது.

2.கீழ்காண்பவற்றைத் தவிர பிறவற்றிற்கு பிறப்புக்கு முன்னால் கண்டறியும் சோதனைக்கு செய்யக் கூடாது.

  1. குரோமோசோம்கள் மாறுபாடு

  2. மரபியல் வளர்சிதை நோய்கள்

  3. இரத்த சிகப்பணு நோய்கள்

  4. பால் தொடர்பான மரபியல் நோய்கள்

  5. பிறவியிலே வரும் மாறுபாடுகள் குறைபாடுகள்

  6. மத்திய கண்காணிப்பு வாரியம் குறிப்பிடுகிற குறைபாடுகள் மற்றும் நோய்கள்.

3) எந்தவொரு பதிவு பெற்ற மருத்துவர் எவரும் கீழ்க்கண்ட நிபந்தனைகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக எழுத்து மூலமாக எழுதப்பட கூடிய காரணங்களில் திருப்தி இருந்தாலொழிய மற்ற சந்தர்ப்பங்களில் பிறப்புக்கு முன்னால் கண்டறியும் சோதனை பயன்படுத்தவோ நடத்தவோ கூடாது. அவை:

(i)அப்பெண்ணின் வயது 35-க்கு அதிகமாக இருக்க வேண்டும்.

(ii)கர்ப்பமுற்ற அப்பெண் இரண்டு மூன்று முறை தொடர்ந்து கருக்கலைத்தல் அல்லது முதிர்கரு இழப்புக்கு உள்ளாகியிருத்தல் வேண்டும்.

(iii)மாத்திரைகள் கதிரியக்கம் நோய் தொற்று, இரசாயனங்கள் மூலம் கர்ப்பிணிப் பெண் பிறவிக்குறைபாடு ஏற்படுத்தக்கூடிய கர்ப்பத்தை உண்டாக்கியிருந்தால்

(iv)கர்ப்பிணிப் பெண்ணோ அல்லது அவரது கணவரோ மனவளர்ச்சி குறைவு ,உடல் ஊனம் போன்ற காரணங்கள் பரம்பரையாக தோன்றி வரும் குடும்ப சரித்திரம் இருந்தால் (சதை இறுக்கம் (மஸ்குலர் டிஸ்ட்ரோபி)அல்லது இது போன்ற பரம்பரை நோய்கள் வர வாய்ப்புக்கள் இருத்தல்.

(V)வாரியத்தால் பரிந்துரைக்கப்படும் மற்ற நிபந்தனைகள் :

ஒரு பெண்ணிற்கு Ultra sonography செய்யும் நபர் அது பற்றிய முழுமையான தகவல்களை ஆவணங்களாகப் பதிந்து அதை பாதுகாத்து வைக்க வேண்டும். இதில் ஏதேனும் குறைபாடுகள் துல்லியமின்மை காணப்பட்டால் அது பிரிவு 5,6 ஆகியவற்றை மீறியதாக கொள்ளப்படும். (சோதனை நடத்துபவர் அதை பொய்ப்பித்தால் ஒழிய)

4.கர்பிணி பெண்ணின் உறவினர் கணவர் உட்பட எவரும் இரண்டாவது உட்பிரிவில் சொல்லப்பட்ட காரணங்கள் தவிர பிறவற்றிற்காக பிறப்பிற்கு முன்பு கண்டறியும் சோதனை செய்வதை ஊக்குவிக்கவோ நடத்த வைக்கவோ கூடாது.

5.கர்ப்பிணிப் பெண்ணின் உறவினர்கள் கணவர் உட்பட வெறும் 2வது உட்பிரிவில் சொல்லப்பட்ட காரணங்கள் தவிர பிறவற்றிற்காக பாலினத் தேர்வு செய்வதை ஆணுக்கோ, பெண்ணுக்கோ அல்லது இருவருக்குமோ செய்வதை நடத்தவோ ஊக்குவிக்கவோ கூடாது.

5)எழுத்து மூலமாக சம்மதமோ அல்லது கருவின் பால் பற்றிய தகவலோ அளிக்காமல் இருத்தல்.

1.மூன்றாவது பிரிவு (2)வது உட்பிரின்படி எடுத்துரைக்கப்பட்ட எவரும் கீழ்கண்ட நிபந்தனைகளை நிறைவேற்றியிருந்தால் அன்றி பாலறியும் சோதனை செய்யக் கூடாது. அவையாவன :

a.அவர் கர்ப்பிணி பெண்ணின் கர்ப்பம் பற்றி தான் அறிந்தவைகள் யாவையும் அதன் செய்முறை விளைவுகளையும் அப்பெண்ணிற்கு தெரிவித்திருக்க வேண்டும்.

b.இது குறித்து தெரிவிக்கப்பட்டவாறு உள்ள படிவத்தில் கர்ப்பிணி பெண் அறிந்து கொள்ளும் மொழியில் இச்சிகிச்சைக்கென உட்பட வேண்டிய செய்முறைகள் அவருக்கு தெரிவிக்கப்பட்டு அவரது சம்மதம் பெற்றிருக்க வேண்டும்.

c.சம்மதம் பெற்ற ஆவணத்தின் நகலொன்று கர்ப்பிணிப் பெண்ணுக்கு தரப்பட்டிருக்க வேண்டும்.

2. பிறப்புக்கு முன்னால் பாலினம் கண்டறியும் சோதனை செய்த நபரோ பிறிதெவரோ கர்ப்பிணி பெண்ணுக்கு அவரது உறவினர்களுக்கு அல்லது மற்றவர்களுக்கு சொல்லால் சைகையால் அல்லது மற்ற விதத்தில் பெண்ணின் கருவின் பால் பற்றிய தகவலை தெரிவிக்க கூடாது.

6.கருவின் பாலை தீர்மானித்தல் :

a) மரபியல் ஆலோசனை மையம் அல்லது மரபியல் சோதனைக்கூடம் அல்லது மரபியல் கிளினிக் எவையும் ஒரு கருவின் பால் எது என அறிய பிறப்புக்கு முன்னால் கண்டறியும் சோதனை உட்பட அல்ட்ரா சோனோகிராபி போன்றவைகளை செய்யவோ செய்விக்கவோ கூடாது.

b).எந்த நபரும் பிறப்புக்கு முன்னால் கண்டறியும் சோதனைகளை கருவின் மேல் அதன் பாலை அறிவதற்காக செய்யவோ செய்விக்கவோ கூடாது

c)எந்த நபரும் எந்த வகையிலும் கருச் சேர்க்கைக்கு பின்பு பாலின தேர்வு செய்யவோ செய்வதை அனுமதிக்கவோ கூடாது.

அத்தியாயம் 4 :

மத்திய கண்காணிப்பு வாரியம்...

7(1) வாரியத்திற்கு இச்சட்டத்தின்படி வழங்கப்பட்ட அதிகாரங்களை செயல்படுத்துவதற்காக மத்திய அரசு மத்திய கண்காணிப்பு வாரியம் ஒன்றை அமைக்கும்.

(2) அத்தகைய வாரியத்தில்

a. குடும்ப நலவாழ்வுத்துறை அமைச்சர் அல்லது அத்துறையினர் பொறுப்பில் உள்ள அமைச்சர் அலுவலக ரீதியான தலைவராகவும்;

b. இந்திய அரசாங்கத்தின் குடும்ப நல்வாழ்வுத்துறைக்கான செயலாளர் அலுவலக ரீதியான தலைவராகவும்;

c. பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ப்புத்துறை சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்திலுள்ள சட்ட விவகாரங்கள் சட்டமன்ற துறையிலிருந்து ஒருவர் அலுவலக ரீதியாகவும் இந்திய முறை மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையிலிருந்து ஒருவர் அலுவலக ரீதியாகவும் மொத்தம் 3 உறுப்பினர்கள் மத்திய அரசை பிரிதிநிதித்துவம் படுத்துவதற்காக நியமிக்கப்படுவார்கள்.

d. மத்திய அரசின் டைரக்டர் ஜெனரல் சுகாதார சேவை அலுவலக ரீதியாகவும்

e. மத்திய அரசால் நியமிக்கப்படும் 10 உறுப்பினர்கள் கீழ்கண்ட துறைகளில் (இரண்டு இரண்டு பேராக)

i. மருத்துவ மரபியல் துறையில் சிறந்து விளங்கும் இருவர்.

ii. பெண் நோயியல் மற்றும் தாய்மைப்பேறு மருத்துவத்தில் சிறந்து விளங்கும் இருவர்.

iii.குழந்தைகள் மருத்துவத்தில் சிறந்து விளங்கும் இருவர்.

iv.சமூக விஞ்ஞானிகள் இருவர்

v.பெண்கள் நல அமைப்பின் பிரதிநிதிகள் இருவர்.

f. பாராளுமன்றத்தின் பெண் பிரதிநிதிகள் மூவர். இருவர் மக்கள் சபையில் இருந்தும் ஒருவர் ராஜ்ஜிய சபையிலிருந்தும்

g. மாநிலங்களிலிருந்தும், யூனியன் பிரதேசங்களில் இருந்தும் சுழற்சி முறையில் மத்திய அரசால் பணியில் அமர்த்தப்படும் நால்வர் அகர இறங்கு வரிசையில் இருவர் ஈற்றிலிருந்து ஏறுவரிசையில் இருவர் நியமிக்கப்படுவார்கள். இப்பிரிவில் பணியமர்த்த மாநில மற்றும் யூனியன் பிரதேசத்தின் பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

h. மத்திய அரசின் குடும்ப நலவாழ்வு துறையின் இனச் செயலாளர் பதிவுக்கு குறையாத அதிகாரி ஒருவர் அலுவலக ரீதியான உறுப்பினர் செயலாளர் ஆவர்.

உறுப்பினர்களின் பதவிக் காலம்...

8(1) அலுவலக ரீதியான உறுப்பினர்கள் தவிர ய) பிரிவு 7(2)ன் கிளைக்கூறுகள் ந) மற்றும் க)ன் படி கீழ் பணியமர்த்தப்பட்டவர்களின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும். ஓ பிரிவு 7(2) க-ன் படி பதவியில் அமர்த்தப்படும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சராகவோ மக்கள் சபையின் சபாநாயகராவோ துணை சபாநாயகராகவோ மாநில அவைகளின் துணை தலைவராகவோ அல்லது பதவிக் காலம் முடிந்த உடனேயோ இந்த பதவியும் முடிவுக்கு வந்து விடும்.

2) உறுப்பினர்களின் இறப்பு, ராஜினாமா, இயலாமை, உடல் நலக்கேடு அல்லது தகுதியின்மை ஆகியவற்றால் ஏற்படுகிற தற்செயலான காலியிடம் மத்திய அரசால் புதிய உறுப்பினர்களை பணியில் அமர்த்தப்படுவதால் நிரப்பப்படுவர். அவ்வாறு பணியிலமர்த்தப்படுபவர்கள் முந்தைய உறுப்பினரின் மீதமுள்ள பணிக்காலத்திற்கு உறுப்பினராக நீடிப்பார்.

3) உதவித் தலைவரால் ஒப்படைவு செய்யப்படுகிற அத்தகைய பணிகளை செய்து வருவார்.

4) இதற்கென குறித்து தெரிவிக்கப்பட்டவாறு உறுப்பினர்கள் தங்கள் கடமையை ஆற்றி வர வேண்டும்.

9. வாரியத்தின் கூட்டம்:

1. ஒழுங்குமுறைகளில் குறிப்பிட்டவாறு தேவையான குறைவெண் ஆஜர் தகுதியுடன் குறித்த இடத்திலும் நேரத்திலும் விதிகளின் படியும் கூட்ட நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும்.

6 மாதத்திற்கு ஒரு முறையேனும் கூட்டம் நடைபெற வேண்டும்.

2. தலைவர் மற்றும் தலைவர் இல்லாவிடில் உப தலைவர் கூட்டத்திற்கு தலைமை ஏற்க வேண்டும்.

3. இருவரும் வர இயலாத சூழ்நிலையிலும் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களின் தலைமையில் கூட்டம் நடைபெறும்.

4. கூட்டத்தின் முன்பு வரும் அத்தனை கேள்விகளுக்கும் வாக்கெடுப்பில் கலந்து கொள்வதில் அதிகப்படியான உறுப்பினர்களின் வாக்குகளின் அடிப்படையில் முடிவு செய்யப்படும். ஓட்டுகள் சமமாக இருக்கும் போது தலைவரோ அல்லது தலைவராக செயல்படுபவரையோ முடிவு செய்வதற்காக 2வது ஓட்டைப் போடலாம்.

5. அலுவலக ரீதியான உறுப்பினர்கள் தவிர மற்றவர்கள் வாரியத்தால் குறித்து ஏற்பாடு செய்துள்ளபடி செலவுத் தொகை வழங்கப்படும்.

10. காலியிடம் போன்றவைகள் வாரியத்தின் நடவடிக்கைகளை செல்லாததாக ஆக்காது :

வாரியத்தின் செயல்கள் நடவடிக்கைகள் ஆகியவை கீழ்கண்ட காரணங்களினால் செல்லாதவை ஆகாது.

a.வாரியம் அமைக்கப்பட்டதில் குறைபாடு மற்றும் உறுப்பினர்களின் காலியிடம்.

a.உறுப்பினர்களில் எவரேனும் பணியமர்த்தியதில் குறைபாடு.

c.ஒரு பிரச்சினையின் நிறைகளை பாதிக்காதவாறு வாரியத்தின் நடைமுறைகளில் உள்ள ஒழுங்கின்மை.

11. வாரியம் குறிப்பிட்ட காரியங்களுக்காக தற்காலிகமாக நபர்களிடம் கூட்டாய் இருத்தல் :

1. ஒழுங்குமுறைகளில் சொல்லப்பட்ட காரணங்களுக்காக இச்சட்டத்தின் வகைமுறைகளை செயலாற்றுவதற்காகவும் பிற நபர்களிடம் ஆலோசனை மற்றும் உதவியை பெறுவதில் கூட்டாக இருக்கலாம்.

2.அவ்வாறு கூட்டாக இருந்து செயல்படுபவர்கள் வாரியத்தில் நடைபெறும் கூட்டங்களிலும் விவாதங்களிலும் பங்கேற்கலாம். ஆனால் ஓட்டுப் போடும் உரிமையோ உறுப்பினராக இருக்கும் உரிமையோ கிடையாது.

12. அதிகாரிகள் மற்றும் பணியார்களை நியமனம் செய்தல்...

இச்சட்டத்தின் பணிகளை சிறப்புற ஆற்றுவதற்காக ஒழுங்கு முறைகளுக்கு உட்பட்டு வாரியம் அவசியப்பட்ட எண்ணிக்கையில் அதிகாரிகளையும் பணியாளர்களையும் நேரடியாகவோ அல்லது வேறு துறைகளிலிருந்து பொறுப்பு மாற்றியோ மத்திய அரசின் ஒப்புதலோடு பணியமர்த்தும், அத்தகைய நேரடி அல்லது பணி பொறுப்பு மாற்றத்தினால் பணியிலமர்த்தப்படுவர்கள். (2) வேலைவிதிகளின்படி ஒழுங்கு முறைகளில் இது குறித்து சொல்லப்பட்டவாறு ஊதியம் பெற தகுதியானவர்கள் ஆவார்கள்.

13. உத்தரவுகளையும் மற்ற முறையாவணங்களையும் அதிகாரப் பூர்வமாக்குதல்:

தலைவரோ உறுப்பினரோ அல்லது இதற்கென அதிகாரமளிக்கப்பட்ட நபரோ கையொப்பம் இடுவதன் மூலமாக வாரியத்தின் உத்தரவுகளும் முடிவுகளும் அதிகாரப் பூர்வமாக்கப்படும். மற்றவை உறுப்பினர் செயலாளர் அல்லது இதற்கென அதிகாரமளிக்கப்பட்ட மற்ற அதிகாரிகளின் கையொப்பத்தால் செயலுக்கு வரும்.

14. ஒரு உறுப்பினருக்கு தகுதியிழக்க செய்யும் குறைபாடுகள்...

ஒருவர் உறுப்பினராக பணிநியமனம் செய்ய தகுதியிழக்கச் செய்பவை கீழ்கண்டவையாகும்;

a.மத்திய அரசு ஒழுக்கக்கேடு என கருதும் குற்றம் புரிந்ததற்காக ஒருவர் குற்றவாளி என கருதப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருத்தல்.

b.விடுவிக்கப்படாத நொடிப்பு நிலையினராக அறிவிக்கப்பட்டிருத்தல்.

c.ஒரு நீதிமன்றத்தால் புத்தி பேதலித்தவர் என விளம்புகை செய்யப்பட்டவர்.

d.அரசுப்பணி அல்லது அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கார்ப்பரேசன் பணியிலிருந்து நீக்கம் அல்லது டிஸ்மிஸ் செய்யப்பட்டவர்.

e.மத்திய அரசின் கருத்தில் வாரியத்தின் நிதி தொடர்பாக அல்லது மற்ற காரணமாக இருந்து வாரியத்தின் உறுப்பினராக இருந்து செயலாற்றுவதற்கு குந்தகம் விளைவித்திடும் என கருதத்தக்க சூழ்நிலையிலும்.

f.மத்திய அரசின் கருத்தில் பாலினத் தேர்வு பாலறியும் சோதனை ஆகியவற்றிற்காக கண்டறியும் சோதனை நிகழ்த்துபவர்களோடு கூட்டாக செயல்படுபவர்கள்.

15. மீண்டும் உறுப்பினராக பணியமர்த்த தகுதி ...

ஒருவரின் உறுப்பினர் காலம் முடிந்த பின்பு இப்பணிக்கான விதிகளுக்கும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டு பதவிக் காலம் முடிந்தபின்பு அந்நபர் மீண்டும் உறுப்பினராக பணியமர்த்தப்படுவார்.

(அலுவலக ரீதியான உறுப்பினர்கள் தவிர மற்றவர்கள் மீண்டும் தொடர்ந்தாற்போல் இருமுறைக்கு மேல் பணியமர்த்தப்பட முடியாது)

16. வாரியத்தின் பணிகள் :- வாரியம் கீழ்கண்ட பணிகளை ஆற்றும் அவை :

i. பிறப்பிற்கு முன்னால் கண்டறியும் சோதனைகள் பாலின தேர்வு அவற்றை பயன்படுத்துவது தவறாக பயன்படுத்துவது தொடர்பாக அரசுக்கு கொள்கை முடிவெடுக்க ஆலோசனை வழங்கும்.

ii. இச்சட்டம் அதற்கான விதிகள் செயல்படுத்துவதை மறு ஆய்வு மற்றும் கண்காணிப்பு செய்து மத்திய அரசுக்கு சட்டத்தையும் விதியையும் மாற்றுவதற்கு பரிந்துரை செய்யவும்.

iii.பெண் சிசுக்கொலையில் முடியும் சிகிச்சைக்கு முன் கூட்டிய பாலின தேர்வு பிறப்புக்கு முன் பாலினத்தை முடிவு செய்யும் சோதனைகளை பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும்.

iv.மரபியல் ஆலோசனை மையம் மரபியல் சோதனைக் கூடம் மரபியல் கிளினிக்குகளில் பணியாற்றும் நபர்களுக்கான நன்னெறிக் கோட்பாடுகளை நிரல்படுத்தும்.

v.இச்சட்டத்தின்படி பணியமர்த்தப்பட்ட பல்வேறு அங்கங்களின் செயல்பாடுகளை கண்காணித்து அதன் சரியான மற்றும் விரும்பும் விளைவை ஏற்படுத்தும் வகையில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கும்.

vi.சட்டத்தில் இது குறித்து வகை செய்யப்பட்ட இதர பணிகள்.

16 A) மாநில கண்காணிப்பு வாரியம் யூனியன் பிரதேச கண்காணிப்பு வாரியம் அமைத்தல்

சட்டசபை அமைப்புள்ள ஒவ்வொரு மாநிலமும் யூனியன் பிரதேசமும் மாநில கண்காணிப்பு வாரியத்தை அமைக்கும் அவ்வாரியம் கீழ்கண்ட பணிகளை செய்யும்.

i.கருச்சேர்க்கைக்கு முன்பு பாலின தேர்வு பிறப்புக்கு முன்பு பாலினத்தை முடிவு செய்தல் போன்ற பெண்சிசுக்கொலையில் முடியும் செயல்முறைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

ii.அதிகாரமளிக்கப்பட்ட அமைப்புகளின் செயல்பாட்டை மறு ஆய்வு செய்து அவற்றின் மீதான நடவடிக்கைகளை மாநில அரசுக்கு பரிந்துரைகளை செய்யும்.

iii.இச்சட்டம் மற்றும் அதன் விதிகள் செயல்படுத்தப்படுவதை கண்காணித்து பொருத்தமான பரிந்துரைகளை வாரியத்திற்கு அளிக்கும்.

iv.மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வகையான செயல்பாடுகளின் ஒட்டு மொத்தமாக்கப்பட்ட அறிக்கைகளை வாரியத்திற்கும் மத்திய அரசுக்கும் அனுப்பும்.

v.இச்சட்டத்தின்படி குறிக்கப்பட்ட மற்ற பணிகளை செய்யும்.

மாநில வாரியம் கீழ்கண்ட உறுப்பினர்களைக் கொண்டது :

a.குடும்ப நல அமைச்சகத்தின் அமைச்சர் பொறுப்பிலுள்ள அமைச்சர் அலுவலக ரீதியான தலைவர் ஆவார்.

b.சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் செயலாளர் அலுவலக ரீதியான துணைத்தலைவர் ஆவார்.

c.பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சித்துறையில் செயலாளர் அல்லது கமிஷனர்கள் மற்றும் சமூக நலத்துறை சட்டம் மற்றும் இந்திய முறை மருத்துவம் ஹோமியோபதி மருத்துவத் துறையின் பிரதிநிதிகள் அலுவலக ரீதியான உறுப்பினர்கள் ஆவார்கள்.

d.குடும்ப நலம் மற்றும் சுகாதாரத் துறையின் இயக்குநர் அல்லது இந்திய முறை மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறை இயக்குநர் அலுவலக ரீதியான உறுப்பினர்கள் ஆவார்கள்

e.சட்டசபையின் அல்லது மேல்சபையின் 3 பெண் உறுப்பினர்கள்.

f.மாநில அரசால் பணியமர்த்தப்படும் 10 உறுப்பினர்கள் கீழ்கண்ட வகைகளுக்கு இருவராக.

i.சட்டநிபுணர்கள் அல்லது சமூக விஞ்ஞானிகள்

ii.தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் தீவிர பெண்ணியல் செயல்பாடுகளில் ஆர்வலர்கள்.

iii.மகப்பேறு தாய்மைப்பேறு மருத்துவத்தில் சிறப்பு நிபுணத்துவம் பெற்றவர்கள்.

iv.குழந்தை மருத்துவம் அல்லது மருத்துவ பரம்பரையியலில் நிபுணத்துவம் பெற்றவர்கள்.

v.கதிரியக்க ஒலி அலை கற்றவர் சோனாலாஜிஸ்ட்களில் நிபுணர்.

4. அலுவலக ரீதியான உறுப்பினர்கள் தவிர மற்ற உறுப்பினர்கள் பதவிக்காலம் 3 ஆண்டுகளாகும்.

5. அப்பதவிகளில் ஏற்படும் காலி இடங்கள் புதிய பணியமர்த்தல் மூலமாக நிரப்பப்படும்.

6. மாநில வாரியத்தில் உறுப்பினராக உள்ள சட்டசபை உறுப்பினர்கள் எவரேனும் அமைச்சராகவோ சபாநாயகராகவோ துணைச் சபாநாயகராகவோ பேரவைத் தலைவராகவோ உபதலைவராகவோ பதவியமர்த்தப்பட்டால் அவர் வாரிய உறுப்பினர் பதவியை இழந்துவிடுவார்.

7. மாநில வாரியத்தின் கூட்டம் நடத்த குறைவெண் 3-ல் 1 பகுதி உறுப்பினர்களாவார்.

8. மாநில வாரியத்தின் மூன்றில் ஒரு பங்கு வரையான உறுப்பினர்களை கூட்டு விருப்பத்தின் பேரில் தேவைப்படும்போது உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளலாம்.

9. அப்படிப்பட்ட கூட்டுறவு உறுப்பினர்கள் வாக்களிக்கும் உரிமையை தவிர உறுப்பினர்களின் மற்ற பணிகளை விதிகளுக்கும் ஒழுங்குமுறைக்கும் கட்டுப்பட்டு செய்வார்கள்.

10. மத்திய வாரியத்திற்கு சொல்லப்பட்ட முறைகளும் நிபந்தனைகளும் இதில் குறிப்பிடாத விசயங்களுக்கு மாநில வாரியத்திற்கும் பொருந்தும்.

அத்தியாயம் 5 :

தக்க அதிகாரக்குழு மற்றும் ஆலோசனை கமிட்டி :

17 (1) மத்திய அரசு அரசிதழில் செய்யும் அறிக்கையின் மூலமாக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அதிகார குழுக்களை ஒவ்வொரு யூனியன் பிரதேசத்திற்கும் இச்சட்டத்தின் பயன்பாட்டிற்காக அளிக்கும்.

(2) இச்சட்டத்தின் பயன்பாட்டிற்காக மாநில அரசு மாநில முழுமைக்கும் அல்லது மாநிலத்தின் பகுதிகளுக்கென ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தக்க அதிகார குழுக்களை அரசிதழில் அறிவிப்பதன் மூலமாக பிறப்பிற்கு முன்னால் பால் நிர்ணயம் சோதனையின் மூலம் பெண்சிசுக் கொலை பிரச்சினையின் தீவிரத்தை பொறுத்து அமைக்கும்.

(3) (1)வது (2)வது உட்பிரிவுகளின் கீழ் தக்க அதிகாரக் குழுவில் இடம்பெற வேண்டிய அதிகாரிகள்.

மாநில முழுமைக்கும் அல்லது யூனியன் பிரதேச முழுமைக்கும் பணியமர்த்தப்படுவதாயின்.

i.சுகாதாரம் மற்றும் குடும்ப நல துறையின் இணை இயக்குநர் பதவிக்கு குறையாத நபர் தலைவராகவும்

ii.பெண்கள் அமைப்புகளை பிரதிநிதித்துவம் செய்ய அத்துறையில் நிபுணத்துவம் பெற்ற பெண் ஒருவரும்.

iii.மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தின் சட்டத்துறையின் அதிகாரி ஒருவரும்

பிறப்புக்கு முன்னால் கண்டறியும் தொழில்நுட்பம் (ஒழுங்குப்படுத்துதல் தவறாக நடத்தப்படுவதை தடை செய்தல்) சட்டம் 2002-ன்படி ஒவ்வொரு மாநிலமும் யூனியன் பிரதேசமும் பல உறுப்பினர்களைக் கொண்ட தக்க அதிகார குழுவை அமைப்பது அதன் கடமையாகும். அதில் ஏற்படும் உறுப்பினர் காலி இடங்களை மூன்று மாதத்தில் நிரப்பப்பட வேண்டும்.

b) ஒரு மாநிலத்தின் அல்லது யூனியன் பிரதேசத்தின் பகுதிகளுக்கென அதிகாரக்குழு அமைக்கப்பட்டால் மாநில அரசு அல்லது யூனியன் பிரதேசன் தக்கதெனக்கருதும் அத்தகுதியுள்ள அதிகாரிகளை நியமிக்கலாம்.

4. தக்க அதிகார குழுவின் பணிகள் :

a. மரபியல் ஆலோசனை மையங்கள் மரபியல் சோதனைக் கூடங்கள் மரபியல் கிளினிக்குகளுக்கு அனுமதித்தலில் இடை நீக்கம் செய்தல், இரத்து செய்தல் ஆகியவை.

b. மரபியல் ஆலோசனை மையங்கள் மரபியல் சோதனைக் கூடங்கள் மரபியல் கிளினிக்குகளுக்கான தரத்தை வலியுறுத்தல்.

c. இச்சட்டத்தின் வகைமுறைகளை விதிகளை மீறுவதற்கான புகார்களை புலன் விசாரணை செய்து உடனடி நடவடிக்கை எடுத்தல்.

d. பின்வரும் உட்பிரிவு (5)-ன் படி அமைக்கப்படும் ஆலோசனை கமிட்டியின் ஆலோசனைகளை பதிவு செய்யும் விண்ணப்பம் இடைநீக்கம் மற்றும் இரத்து செய்வதற்கான புகார் போன்றவற்றை பெறுதல்.

e. யாரேனும் பாலின தேர்வு தொழில் நுட்பத்தை எவ்விடத்திலும் செய்தால் தன்னிச்சையாக அவர் மீது தனிப்பட்ட புலன் விசாரணை செய்து தக்க நடவடிக்கை எடுத்தல்.

f. பிறப்புக்கு முன் பாலின தேர்வு பாலின நிர்ணயம் போன்றவற்றிற்கெதிராக பொது மக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துதல்.

இச்சட்டம் விதிகள் செயல்படுத்தப்படுவதை கண்காணித்தல்.

g.தொழில்நுட்பத்தில் ஏற்படும் மாறுதல்கள் சமூக சூழ்நிலைக்கேற்ப மத்திய மாநில வாரியங்களுக்கு மாறுதல்களை பரிந்துரைத்தல்.

h.இடைநீக்கம் இரத்து மற்றும் பதிவு செய்தல் தொடர்பாக புலன் விசாரணை செய்து ஆலோசனைக்குழு அளிக்கும் புகாரின் மீது நடவடிக்கை எடுத்தல்.

5. மத்திய மாநில அரசுகள் ஒவ்வொரு அதிகார குழுவிற்கும் ஆலோசனை கமிட்டிகளை அமைத்து அக்குழுவிற்கு ஆலோசனையும் செயல்பட உதவியும் வழங்க வேண்டும். ஆலோசனை குழுவின் ஒரு உறுப்பினர் அதன் தலைவராக இருப்பார்.

6. ஆலோசனை கமிட்டியில்

aய. மகப்பேறு, தாய்மைப்பேறு மருத்துவம் குழந்தைகள் மருத்துவம் மற்றும் மருத்துவ மரபியல் துறையில் வல்லுநர் மூவர்.

b. ஒரு சட்டத்துறை வல்லுநர்

c. மாநில யூனியன் பிரதேச அரசின் செய்தி மற்றும் விளம்பரத் துறையின் அதிகாரி ஒருவர்.

d. சமூக சேவகர்களில் மூவர் (அதில் ஒருவரேனும் பெண் அமைப்பைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்)

7. பாலினம் தீர்மானித்தல் பாலினத் தேர்வுக்கு பிறக்கும் முன் கண்டறியும் சோதனையை உபயோகிப்பவர் அதற்கு ஆதரவாக செயல்படுபவர் எவரும் ஆலோசனை கமிட்டியின் உறுப்பினராக பணி நியமிக்கக் கூடாது.

8. ஆலோசனைக்குழு தனக்கு எப்போதெல்லாம் அவசியமாகப்படுகிறதோ அப்போதும் அல்லது தக்க அதிகாரக் குழு பதிவு இரத்து இடைநீக்கம் போன்றவற்றிற்கான புகார்களின் மீது விசாரித்து ஆலோசனை கேட்கும்போதும் கூடும். அப்படி நடத்தப்படும் கூட்டங்களின் கால இடைவெளி குறித்த காலத்திற்கு அதிகமாக இருக்கக் கூடாது.

9. ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக ஒருவர் பணிநியமனம் செய்வதற்கும்

அவர்கள் எம்முறைகளை கையாள வேண்டும் என்பதற்கான நிபந்தனைகளும் கருத்துவிளக்கமும் அதற்கென குறிப்பிட்டவாறு இருக்க வேண்டும்.

17A) தக்க அதிகார குழுவின் அதிகாரங்கள்

தக்க அதிகாரக் குழுவிற்கு கீழ்கண்ட அதிகாரம் தரப்பட்டுள்ளது.

a.இச்சட்டத்தின் விதிமுறைகளை எவரேனும் மீறியதற்கான தகவல்களை தன்வசம் வைத்துள்ளதால் அவருக்கு அழைப்பாணை அனுப்புதல்

b.கிளைக் கூறு (ய) தொடர்பான ஆவணங்கள் பொருட்கள் எவையேனும் வைத்திருந்தால் அவற்றை ஆஜர்படுத்த சொல்லலாம்.

c.எவ்விடங்களில் பாலின தேர்வு பாலின தீர்மானித்தல் போன்றவை நடைபெறுவதாக அறியப்பட்டால் அந்த இடங்களில் தேடுதல் ஆணை பிறப்பிக்கவும்.

d.இது சம்பந்தமாக குறித்தளிக்கப்பட்ட மற்ற விசயங்களுக்கும்

அத்தியாயம் VI :

மரபியல் ஆலோசனை மையம் மரபியல் சோதனைக்கூடம் மரபியல் கிளினிக்குகளை பதிவு செய்தல் :

18(1) இச்சட்டப்படி பதிவு செய்யப்பட்டாலன்றி வேறெவரும் மரபியல் ஆலோசனை மையம் மரபியல் சோதனைக் கூடம் அல்லது அல்ட்ரா சவுண்ட் அல்லது இமேஜிங் மெஷின் அல்லது ஸ்கேனர் அல்லது போன்றவைகளைக் கொண்ட பரிசோதனைக்கூடம் அல்லது மையங்களை பிறப்புக்கு முன்னால் கண்டறியும் (ஒழுங்குமுறை மற்றும் தவறாக பயன்படுத்துவதை தடுத்தல் சட்டம்) 2002 நடைமுறைக்கு வந்த பின்பு பாலினத் தேர்வு மற்றும் பாலின தீர்மானம் செய்யும் பரிசோதனை செய்கிற நோக்கத்தில் திறக்கக் கூடாது.

2) இதற்கென செய்யப்படும் ஒவ்வொரு விண்ணப்பமும் தக்க அதிகாரம் பெற்ற குழுவிற்கு இதற்கென குறித்தவாறும் குறித்த விதத்திலும் அதற்கென குறிப்பிட்ட கட்டணத்துடனும் அளிக்கப்பட வேண்டும்.

3)இச்சட்டம் நடைமுறைக்கு முன்பாக இருந்து வந்த ஒவ்வொரு மரபியல் ஆலோசனை மைய மரபியல் பரிசோதனைக் கூடங்கள் மரபியல் கிளினிக்குகள் ஆகியவை பகுதி நேரமாகவோ அல்லது முழு நேரமும் மரபியல் ஆலோசனை பிறப்புக்கு முன்பு கண்டறியும் சோதனை பிரிவு 4-ல் சொல்லப்பட்ட காரணங்களுக்காக அத்தகைய சோதனைகளைச் செய்து வந்தால் இச்சட்டம் நடைமுறைக்கு வந்த 6 மாதங்களுக்குள் பதிவு செய்து கொள்ள விண்ணப்பிக்க வேண்டும்.

4) பிரிவு 6-ன் வகைமுறைகளுக்கு கட்டுப்பட்டு ஒவ்வொரு மரபியல் ஆலோசனை மையம் மரபியல் சோதனைக்கூடம் மரபியல் கிளினிக் ஆகியவவை இச்சட்டம் அமுலுக்கு வந்த 6 மாதங்களுக்கு பின் அப்படிப்பட்ட சோதனைகள் நடத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் அப்படிப்பட்ட மையம் பரிசோதனைக்கூடம் கிளினிக்குள் பதிவு செய்ய விண்ணப்பத்திருந்தாலோ அப்படி பதியும் வரை தனியாகவோ பிறவற்றுடன் இணைந்து பதிவு செய்திருந்தாலோ இதில் எது முன்னமோ அந்நிலையில் அம்மையங்கள் தன் பணியை நிறுத்த வேண்டியதில்லை.

19. பதிவு செய்தமைக்கான சான்றிதழ் :

1. தக்க அதிகாரம் பெற்ற அமைப்பு தன்னிச்சையாக அல்லது புகாரின் பேரில் மரபியல் ஆலோசனை மையம் பரிசோதனைக்கூடம் கிளினிக்குகள் என அதற்களிக்கப்பட்டு;ள்ள பதிவு சான்றை ஏன் இரத்து செய்யக் கூடாது இடைநீக்கம் செய்யக் கூடா என்ற காரணங்களை காட்டி அறிவிக்கை அனுப்பலாம்.

2. விசாரித்த பின்பு மனுதாரர்களுக்கு தங்கள் பக்க நியாயத்தை எடுத்துரைக்க வாய்ப்பளித்தும் ஆலோசனை கமிட்டியின் ஆலோசனைக் கேட்டும் இச்சட்டத்தின்படியும் விதிகளின் படியும் விண்ணப்பத்தாரர் கேட்கப்பட்டவைகளுக்கு கீழ்படிந்து நடப்பதால் தான் திருப்தி அடையவில்லை என கருதும் போது அந்த விண்ணப்பத்தை தள்ளுபடி செய்யலாம்

3. இதற்கென குறிப்பிடப்பட்ட கட்டணத்தை செலுத்தி அப்படிப்பட்ட பதிவுகளை புதுப்பித்துக் கொள்ளலாம்.

4. இந்த பதிவு சான்றிதழ்கள் மரபியல் ஆலோசனை மையம் பரிசோதனைக்கூடம் மற்றும் கிளினிக்குகளில் காணும்படி தொழில்புரியும் இடத்தில் வைக்கப்பட வேண்டும்.

20. இரத்து மற்றும் இடைநீக்கம் செய்தல்

1. தக்க அதிகாரம் பெற்ற அமைப்பு தன்னிச்சையாக அல்லது புகாரின் பேரில் மரபியல் ஆலோசனை மையம் பரிசோனைக் கூடம் கிளினிக்குகள் என அதற்களிக்கப்பட்டுள்ள பதிவு சான்றை ஏன் இரத்து செய்யக் கூடாது இடைநீக்கம் செய்யக் கூடாது என்ற காரணங்களை காட்டி அறிவிக்கை அனுப்பலாம்.

2. தக்க அவகாசம் கொடுத்த பின்னர் அவர்களது விளக்கத்தை பெற்று ஆலோசனை கமிட்டியின் ஆலோசனையை பெற்று பரிசோதனை மையம் பரிசோதனைக் கூடம் கிளினிக் ஆகியவை இச்சட்டத்தின் விதியின் வகைமுறைகளை அவர்கள் மீறியுள்ளார்கள் என்பதில் திருப்தி அடைந்தால் அதற்காக எடுக்கப்படும் குற்றவியல் நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்காதவாறு அம்மையம் பரிசோதனைக் கூடம் கிளினிக் ஆகியவற்றின் பதிவை இடைநீக்கம் அல்லது இரத்து செய்யலாம்.

21. மேல்முறையீடு :

மரபியல் ஆலோசனை மையம் பரிசோதனைக் கூடம் கிளினிக் ஆகியவை அத்தகைய இடைநீக்கம் இரத்து செய்யப்பட்ட உத்தரவுகள் எவையேனும் பிரிவு 20-ன் கீழ் இடப்பட்டிருந்தால் அவற்றை பெற்று 30 தினங்களுக்குள்

1. அந்த உத்தரவு மாநில அதிகாரக் குழுவினதாய் இருந்தால் மாநில அரசுக்கும் குறித்த விதத்தில் மேல்முறையீடு செய்யலாம்.

அத்தியாயம் VII :

22. குற்றங்களும் தண்டனைகளும் :

கருச்சேர்க்கைக்கும் பிறப்பிற்கு முன்னால் பாலினத்தை தீர்மானித்தல் குறித்து விளம்பரப்படுத்த தடையும் அதனை மீறுவதற்கு தண்டனையும் மரபியல் ஆலோசனை மையம் அமைப்புகள் மரபயில் சோதனைக் கூடங்கள் மரபியல் கிளினிக் ஆகியவையும் அல்ட்ராசவுண்ட் மெஷின் அல்லது ஸ்கேனர் அல்லது பாலினத்தை தீர்மானிக்கும் தொழில் நுட்பத்தைக் கொண்ட மையங்கள் பரிசோதனைக் கூடங்கள் கிளினிக்குகள் எவையும் வெளியீடு, பரவலாக விநியோகித்தல், தொடர்புடைய விதமாக விளம்பரப்படுத்துதல் அல்லது வெளியிடக் காரணமாயிருத்தல் இண்டர்நெட் போன்றவற்றில் எந்த வடிவத்திலும் கருச்சேர்க்கைக்கு முன் பாலினத் தேர்வு அல்லது பாலினத்தை தீர்மானித்தலும் அது தொடர்பாக எவ்வித விளம்பரங்களும் செய்யக் கூடாது.

2. மரபியல் ஆலோசனை மையம் மரபியல் சோதனைக்கூடம் அல்லது மரபியல் கிளினிக் ஆகியவை உட்பட எந்த அமைப்பும் அறிவியல் ரீதியாகவோ மற்றவிதத்திலோ வழங்குதல், வெளியிடல், விநியோகித்தல், தொடர்புபடுத்துதல் வேறு எந்த விதத்திலும் பிறப்புக்கு முன்னால் தீர்மானித்தல் அல்லது கருசேர்க்கைக்கு முன்பு பாலின தேர்வு ஆகியவறை;றை செய்யக் கூடாது.

3. உட்பிரிவு (1)(2) ஆகியவற்றில் சொல்லப்பட்டவைகளை மீறுபவர்கள் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் 1000 வரை அதிகரித்தக்தக்க அபராதம் விதித்து தண்டிக்கலாம்.

விளக்கம் :

இப்பிரிவின் பயன்பாட்டிற்காக விளம்பரம் என்பது அறிவிக்கை சுற்றறிக்கை வில்லைகள் சுற்றும் காகிதம் மற்ற எல்லா விதத்திலும் விளம்பரப்படுத்துவதை மின்னணு ஊடகம் உட்பட்ட தட்டிகள் சுவற்றில் வரையும் படங்கள் சமிக்ஞைகள் வெளிச்சங்ள் ஒளிக்கற்றைகள் சப்தம் புகை வாயு ஆகியவற்றின் மூலமாக விளம்பரப்படுத்துவதை குறிக்கும்.

23. தண்டனைகளும் அபராதங்களும் :

எந்தவெரு மருத்துவ மரபியலாளர்கள் பெண் நோயியலாளர்கள் பதிவு பெற்ற மருத்துவர் ஆகியோர் எவரேனும் மரபியல் ஆலோசனை மையம் பரிசோதனைக் கூடம் மற்றும் கிளினிக்குகள் ஆகியவற்றின் உரிமையாளராகவோ இருந்து அல்லது கௌரவத்திற்காக அல்லது வேறுவிதத்திலோ அத்தகைய மையங்களுக்கு தனது தொழில்நுட்ப சேவையை வழங்குபவராகவும் இருந்து இச்சட்டத்தின் வகைமுறைகளை மீறுவார்களாயின் 3 ஆண்டுகள் வரை நீடிக்கத்தக்க மற்றும் 10 ஆயிரம் ரூபாய் வரை அதிகரிக்கத்தக்க அபராதம் விதித்து தண்டிக்கப்படலாம். அவரே மீண்டும் இச்சட்டத்தின்படி தண்டிக்கப்பட வேண்டிய நேர்வுகளின் 5 ஆண்டுகள் வரை நீடிக்கத்தக்க மற்றும் ரூ.50,000 வரை அதிகரிக்கத்தக்க தண்டனை விதிக்கப்படலாம்.

2. இதற்கான அதிகாரக்குழு மாநில மருத்துவ கவுன்சிலுக்கு அறிக்கை தாக்கல் செய்யலாம். நீதிமன்றத்தால் குற்றச்சாட்டு வினையப்பட்டிருந்தால் அவரது பதிவை இடைநீக்கம் செய்தல் போன்ற நடவடிக்கையையும் வழக்கு முடிவில் தண்டிக்கப்பட்டால் நிரந்தரமாகவோ பதிவு நீக்கம் செய்வது போன்ற நடவடிக்கை எடுக்கலாம்.

3. அதே போன்று எந்நபரேனும் மரபியல் ஆலோசனை மையம் மரபியல் பரிசோதனைக் கூடம் மரபியல் கிளனிக்குகள் அல்லது பதிவு பெற்ற மருத்துவர் எவரையோ மருத்துவ மரபியலாளர் மகப்பேறு மருத்துவர் அல்லது பதிவு பெற்ற மருத்துவர் ஆகியோரை பாலின தேர்வு அல்லது பிறப்புக்கு முன்பு கண்டறியும் சோதனை ஆகியவை செய்வதற்கு பிரிவு 4 உட்பிரிவு (2)-ன் கீழ் விதிவிலக்களிக்கப்பட்ட காரணங்களுக்காக அன்றி வேறு காரணங்களுக்காக அணுகினால் 3 ஆண்டுகள் வரை நீடிக்கத்தக்க 50,000 வரை அதிகரிக்கத்தக்க அபராதத்தை முதலாவது முறை தண்டிக்கப்பட்டால் வழங்கலாம். அதே நபர் மீண்டும் அக்குற்றத்திற்காக தண்டிக்கப்படும் போது 5 ஆண்டுகள் வரை நீடிக்கத்தக்க சிறைதண்டனை மற்றும் 1 லட்ச ரூபாய் வரை அதிகரிக்கத்தக்க அபராதம் விதித்து தண்டிக்கப்படலாம்.

4.இப்பிரிவில் சந்தேகங்களை நீக்குவதற்காக மேலே (3) வது பிரிவில் கூறப்பட்ட வகைமுறை எதுவும் பிறப்புக்கு முன்னால் கண்டறியும் சோதனைக்கு வற்புறுத்தலால் உள்ளாக்கப்பட்ட பெண்களுக்கு பொருந்தாது.

24) பிறப்புக்கு முன்னால் கண்டறியும் சோதனை செய்யப்பட்டால் நீதிமன்றத்தின் அனுமானம்

இந்திய சாட்சிய சட்டம் 1872 (1ஃ1872)-ல் சொல்லப்பட்டவைகளுக்கு முரண்படாத வகையில் ஒரு பிறப்புக்கு முன்னால் கண்டறியும் சோதனை நடைபெற்றிருந்தால் அக்கர்ப்பிணி பெண்ணின் கணவர் அல்லது உறவினர்கள் பிறப்புக்கு முன்னால் கண்டறியும் சோதனைக்கு வற்புறுத்தப்பட்டாதாக கொள்ளப்பட்டு கணவர் அல்லது உறவினர்கள் பிரிவு 23 உட்பிரிவு (3)-ன்படி குற்றம் புரிய தூண்டியவர்களாக அனுமானிக்கப்படுவார்கள். பிரிவு 4 உட்பிரிவு (2)-ல் சொல்லப்பட்ட காரணங்களுக்காகவோ அல்லது மேலே சொன்னவாறு வற்புறுத்தவில்லை என்பதை நிரூபித்தால் அப்படி கருதப்படமாட்டார்கள்.

25) இச்சட்டத்தின் வகைமுறைகளையோ விதிகளையோ மீறுபவர்களுக்கு அதற்கென தண்டனை குறிப்பிடப்படாத போது தண்டித்தல் :

இச்சட்டத்தின் வகைமுறைகளையும் விதிகளையும் எவரேனும் மீறுவாராயின் இச்சட்டத்தில் அதற்கென தனியே தண்டனை குறிப்பிடப்படாத நிலையில் அவர் 3 மாதம் வரை நீடிக்கத்தக்க சிறைத் தண்டனை அல்லது 1000 ரூபாய் வரை அதிகரிக்கத்தக்க அபராதம் விதித்து தண்டிக்கப்படலாம். தொடர்ந்து ஒருவர் இச்சட்ட விதிகளை மீறும் போது அவ்வாறு மீறும் ஒவ்வொரு நபருக்கும் முதலாவது தடவை தண்டிக்கப்பட்ட நாளிலிருந்து ரூபாய் 500 அபராதம் விதித்து தண்டிக்கப்படலாம்.

26) குழுமங்களால் செய்யப்படும் குற்றங்களுக்கு தண்டனைகள் :

1. இச்சட்டத்தின்படி தண்டிக்கப்படக் கூடிய குற்றங்களை ஏதாவது ஒரு குழுமத்தினர் செய்திருப்பாராயின் அக்குழுமத்தின் வணிக நடவடிக்கைக்கு பொறுப்பானவர்கள் கூடுதல் பொறுப்பேற்றவர்கள் மற்றும் அக்குழுமம் குற்றம் புரிந்ததாக கொள்ளப்பட்டு நடவடிக்கை தொடரப்பட்டு அதன்படி தண்டிக்கப்படுவார்கள்.

ஆனால் அப்படிப்பட்ட பொறுப்பிலுள்ள நபர்கள் தங்கள் அறிவிற்கப்பாற்பட்ட வகையில் அத்தகைய குற்றம் நடைபெற்றதாகவோ அல்லது அக்குற்றம் நடைபெறாது தடுக்க தங்கள் அறவிற்கெட்டிய எல்லாவித நடவடிக்கைகளும் எடுத்திருந்ததாக நிரூபித்தால் அப்படி தண்டிக்கப்பட வேண்டியதில்லை.

2. அக்குழுமத்தின் நிர்வாக இயக்குநர், மேலாளர், செயலாளர் அல்லது குழுமத்தின் அதிகாரி எவரின் இசைவினுடன் அல்லது கண்டும் காணாதது போல் இருப்பதன் மூலமாகவோ கவனக் குறைவின் இயல்பாகவோ அதன் விளைவாகவோ நடைபெற்றது என நிரூபிக்கப்பட்டால் அந்த இயக்குநர் மேலாளர் செயலாளர் அதிகாரி ஆகியோரும் குற்றம் புரிந்ததாக கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்.

விளக்கம் :

இச்சட்டத்தின் பயன்பாட்டிற்காக;

a.குழுமம் என்பது இணைக்கப்பட்ட வணிக நிறுவனங்கள் அல்லது தனிநபர்களின் கூட்டமைப்பை குறிக்கும்.

b.இயக்குநர் என்பது வணிக நிறுவத்தைப் பொறுத்தவரை அதன் பங்குதாரரையும் குறிக்கும்.

2. குற்றங்கள் புலன்கொள்ளக்கூடிய பிணையில் விடத்தகாத ஒத்திசைவு செய்ய முடியாத குற்றங்கள் ஆகும்.

இச்சட்டத்தின் படி புரியப்பட்ட குற்றங்கள் யாவும் பிணையில் விடத்தகாத புலன் கொள்ளக்கூடிய ஒத்திசைவு செய்ய முடியாத குற்றங்கள் ஆகும்.

28) குற்றங்களை புலன் கொள்ளுதல்

i. எந்த நீதிமன்றமும் இச்சட்டத்தின்படியான குற்றங்களை கீழே சொல்லப்பட்ட நபர்களின் புகாரின் பேரிலன்றி புலன் கொள்ளக் கூடாது.

ii. அதிகாரமளிக்கப்பட்ட குழு அல்லது மத்திய மாநில அரசினால் இதற்கென அதிகாரமளிக்கப்பட்ட குழு அதிகாரம் பெற்ற குழுவிற்கு குற்றம் தொடர்பாக குறிப்பிட்ட வகையில் புகார் அளித்தப் பின் நீதிமன்றத்தில் புகார் அளிக்க கருதுவாராயின் அவர் புகார் அளிக்கும் சூழ்நிலையில் நீதிமன்றம் புகாரை புலன் கொள்ளலாம்.

விளக்கம் :

இப்பிரிவின் பயன்பாட்டிற்காக நபர் என்பது சமூக நல அமைப்புகளையும் குறிக்கும்.

2) இச்சட்டத்தின்படி செய்யப்பட்ட குற்றங்களை பெருநகர குற்றவியல் நடுவர் அல்லது முதல்வகுப்பு குற்றவியல் நடுவர் ஒருவரே விசாரணை செய்ய வேண்டும்.

இப்பிரிவின் உட்பிரிவு 1 கிளைக் கூறு 3-ன் படி தனியார் எவரேனும் நீதிமன்றத்தை இத சம்பந்தமான ஆவணங்களை தனக்களிக்கும்படி வேண்டினால் நீதிமன்றம் அதிகாரம் பெற்ற குழுவை அத்தகைய ஆவணங்களை அவரது கைவசம் அளிக்க வழி செய்ய வேண்டும்.

அத்தியாயம் VIII

பல்வகை :

29) ஆவணங்களை பராமரித்தல் : இந்த சட்டம் மற்றும் விதிகளின் படி பராமரிக்கப்பட வேண்டிய அனைத்து ஆவணங்களையும் தகவல் சித்திரங்களையும், படிவங்களையும் அறிக்கைகளையும் இரண்டாண்டுகளுக்கு அல்லது இதற்கென குறித்துபடியான அந்த காலகட்டத்திற்கு பாதுகாத்து வைக்க வேண்டும்.

மரபியல் ஆலோசனை மையம் பரிசோதனைக் கூடம் கிளினிக் ஆகியவைகளுக்கெதிராக குற்ற வழக்கு ஏதேனும் தொடரப்பட்டால் அவ்வழக்குகள் தொடர்பான ஆவணங்களை பாதுகாத்து வைக்க வேண்டும்.

2) அந்த ஆவணங்களை அதற்கென அதிகாரம் பெற்ற குழு அல்லது அவரது ஆதரவு பெற்றவர்கள் எப்போது ஆய்வு செய்ய வேண்டும் என்று கருதினாலும் ஏற்புக்குரிய காலகட்டத்தின் அந்த ஆய்வுக்கு அந்த ஆவணங்கள் கிடைத்திட வழி செய்ய வேண்டும்.

30) ஆவணங்களை தேடுதல் சோதனை அல்லது கைப்பற்றுதல் செய்யும் அதிகாரம்

i. அதிகாரக் குழுவிற்கு இச்சட்டத்தின்படி ஒரு குற்றம் நடைபெற்றிருக்கிறது என்பதற்கான ஏற்புடைய காரணங்கள் இருக்குமானால் அதிகாரக் குழுவோ அல்லது அதிகாரக்குழுவின் ஆதரவு பெற்றவர்களோ அந்த குற்றம் நடைபெற்ற மரபியல் ஆய்வுக்கூடம் பரிசோதனைக் கூடம் கிளினிக் அல்லது அது தொடர்பான மற்ற இடங்கள் ஆகியவற்றில் இதற்கென விதிகளின்படி தெரிவிக்கப்பட்டபடி பதிவுக்குறிப்பு பதிவேடு புத்தகங்கள், கையேடுகள், விளம்பரங்கள் பெர்ருட்கள் ஆகியவற்றை ஏற்ற காலங்களில் தேவைப்படும் பாதுகாப்புடன் சென்று தான் தக்கதென கருதினாலும் அவை இச்சட்டப்படியான குற்றங்கள் புரிந்ததை மெய்ப்பிக்கப்படும் சாட்சியமாகக் கருதினாலும் அதனை கைப்பற்றி மூடி முத்திரையிடலாம்.

ii. குற்ற விசாரணை முறைச்சட்டம் 1973 (2ஃ1974)-ன் படி தேடுதலுக்கும் கைப்பற்றுதலுக்கும் சொல்லப்பட்ட வகைமுறைகள் யாவும் இச்சட்டப்படி செய்யப்படும் தேடுதலுக்கும் கைப்பற்றுதலுக்கும் பொருந்தும்.

31) நன்னம்பிக்கையின் அடிப்படையில் செய்யப்படும் செயல்களுக்கு பாதுகாப்பு :

மத்திய அரசு அல்லது மாநில அரசு அல்லது அதிகார குழு அல்லது இதற்கென மத்திய மாநில அரசுகள் அதிகாரமளித்துள்ள வேறு குழுக்கள் மீது இச்சட்டத்தின்படியாக நன்னம்பிக்கையில் செய்யப்படும் செயல்களுக்கு சிவில் கிரிமினல் சட்ட வழக்குகள் நடவடிக்கைகள் எடுக்க முடியாது.

31 யு) சிரமங்களை நீக்குதல்

1. பிறப்பிற்கு முன்னால் கண்டறிதல் ஒழுங்குமுறை மற்றும் தவறாக பயன்படுத்துவதை தடுத்தல் சட்டம் 2002-ன்படி நடைமுறைப்படுத்துவதில் சிரமங்கள் ஏற்படுமாயின் இச்சட்டத்தில் ஏற்கனவே சொல்லப்பட்டவைகளுக்கு முரண்படாத வகையில் அத்தகைய மாற்றங்களை அரசிதழில் வெளியிடுவதன் மூலமாக அச்சிரமங்களை நீக்க அவசியமான திருத்தங்களை கொண்டு வரலாம்.

ஆனால் பிறப்பதற்கு முன்னால் கண்டறிதல் (ஒழுங்குமுறை மற்றும் தவறாக பயன்படுத்துவதை தடுத்தல்) சட்டம் 2002 நடைமுறைக்கு வந்து 3 ஆண்டுகளுக்கு பின்பு மாறுதல் எதுவும் செய்ய முடியாது.

2. இந்த விதியின் படி செய்யப்படுகிற மாறுதல்கள் யாவும் அவை உருவாக்கப்பட்டவுடன் மத்திய அரசின் இரு சபைகளின் ஒப்புதலுக்கு வைக்கப்பட வேண்டும்.

32) விதிகளை உருவாக்கும் அதிகாரம் :

1. இச்சட்டத்தின் வகைமுறைகளை செயல்படுத்தும் விதமாக தேவையான விதிகளை மத்திய அரசு உருவாக்கும்.

2.மேலே சொல்லப்பட்ட அதிகாரத்திற்கு குந்தகம் விளைவிக்காத வகையில் அவ்விதிகள் கீழ்கண்டவைகளுக்காக வகைமுறை செய்யப்படும்.

i. பிரிவு 3(2)-ன் படி பதிவு செய்யப்பட்ட மரபியல் ஆலோசனை மையம் சோதனைக் கூடம் கிளினிக்கில் பணிபுரியும் நபர்களின் குறைந்தப்பட்ச கல்வித் தகுதி.

ii. பிரிவு 4(3)ன்படி கர்ப்பிணி பெண்ணுக்கு ஸ்கேன் செய்யப்பட்டால் அது எவ்விதத்தில் செய்யப்பட்டது என்பது பற்றிய ஆவணங்களை பாதுகாப்பில் வைத்திருப்பது தொடர்பாக.

ii ய) பிரிவு 5-ன்படி கர்ப்பிணிப் பெண்ணின் சம்மதம் பெற்றதற்கான படிவம்.

iii) பிரிவு 8 உட்பிரிவு (4)-ன் படி மத்திய கண்காணிப்பு வாரியம் தக்க பணிகளை செய்யும் முறைகள்

iv) அலுவலக ரீதியான உறுப்பினர்களுக்கு அனுமதிக்கப்பட்ட ஊதியம் தொடர்பாக.

iv a) மரபியல் ஆலோசனை மையம், சோதனைக் கூடம், கிளினிக் ஆகியவற்றில் பணிபுரிபவர்கள் கடைபிடிக்க வேண்டிய மத்திய கண்காணிப்பு வாரியம் பிரிவு 16 (i)ன் கீழ் உருவாக்கிய நன்னெறிக் கோட்பாடுகள்.

iv b) பிரிவு 16(1) கிளைக்கூறு (ஐஏ)-ன்படி மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு விதமான செயல்பாடுகளை மாநில அரசு அல்லது யூனியன் பிரதேச கண்காணிப்ப வாரியங்கள் மத்திய வாரியத்திற்கு மத்திய அரசாங்கத்திற்கு எந்தவிதமான படிவத்தில் அனுப்ப வேண்டும் என்பது பற்றி.

iv c) பிரிவு 17 ய உட்கூறு ன-ன்படி அதிகாரக்குழுவிற்கு மற்ற விசயங்களுக்கு அதிகாரம் அளித்தல்

v) பிரிவு 17(8)ன் படி ஆலோசனைக் குழுவின் இரண்டு கூட்டங்களுக்கு இடைப்பட்ட காலத்தை நிர்ணயம் செய்தல்.

vi) பிரிவு 17(9)ன் படி ஒருவர் ஆலோசனைக் குழு உறுப்பினராக பணியமர்த்த கால நீட்சி மற்றும் நிபந்தனைகள் எவை என்பது பற்றி.

vii) பிரிவு 18(2)ன் படி பதிவு செய்வதற்கான விண்ணப்பப்படிவம்

viii) பிரிவு 18(5)-ன் படி மரபியல் ஆலோசனை மையம் பரிசோதனைக் கூடம் கிளினிக்குகளில் செய்து தர வேண்டிய வசதிகள் சாதனங்கள் மற்ற தரங்கள்

ix) பிரிவு 19(3)-ன் படி எவ்விதமான படிவத்தில் பதிவு சான்றிதழ் வழங்க வேண்டும் என்பது பற்றி.

x) பிரிவு 19(3)-ன்படி பதிவுசான்றிதழ் எவ்வாறு புதுப்பிக்கப்பட வேண்டும் அதற்கான கட்டணம் எவ்வாறு என்பது பற்றி.

xi) பிரிவு 21-ன்படியான மேல்முறையீடுகள் எவ்வாறு செய்யப்படும் என்பது பற்றி.

xii) பிரிவு 29(1)-ன் படி பதிவு குறிப்பு, தகவல் சித்திரம் எவ்வளவு காலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது பற்றி.

xiii) பிரிவு 30(1)-ன் படி எவ்விதத்தில் ஆவணங்கள் பதிவு குறிப்பு பொருட்கள் கைப்பற்றப்பட வேண்டும். கைப்பற்றப்பட பொருட்களின் பட்யடில் அவ்வாறு தயாரிக்கப்பட வேண்டும் யாரிடம் ஒப்படைக்கப்பட்டது என்பது பற்றிய விவரம் கைப்பற்றப்பட்டது என்ற விபரங்கள் தொடர்பாகவும்.

xiv. தேவைப்படும் மற்ற விபங்களுக்காகவும்.

33) ஒழுங்குமுறைகளை ஏற்படுத்தும் அதிகாரம்

இச்சட்டத்தின் வகைமுறைகளை மற்றும் விதிகளுக்கு முரண்படாதவாறு வாரியம் அரசிதழில் வெளியிடுதல் மூலமாகவும் அதற்கு முன்பாக மத்திய அரசின் ஒப்புதல் பெற்றும் ஒழுங்குமுறைகளை கீழ்கண்டவற்றிற்காக உருவாகும்.

a)பிரிவு 9(1)ன் படி வாரியக் கூட்டம் நடைபெறும் இடங்கள் நேரம் அதில் கலந்து கொள்ளும் உறுப்பினர்களின் குறைவெண் பற்றிய விவரங்கள் தொடர்பாகவும்

b)பிரிவு 11(1)-ன்படி நபர்கள் தற்காலிகமாக வாரியத்துடன் சேர்ந்து செயல்படும் விதம் பற்றியும்.

c)பிரிவு 12-ன்படி வாரியத்தின் பணியாளர்களை தேர்ந்தெடுக்கும் வழிமுறைகள் பற்றியும் பணி நிபந்தனைகள் ஊதிய விகிதம் சலுகைகள் பற்றியும்.

c)பொதுவாக வாரியத்தின் அலுவல்களை திறம்பட நடத்துவது பற்றியும்

34) அவ்வாறு செய்யப்பட்ட விதிகளும் ஒழுங்குமுறைகளும் பாராளுமன்றத்தின் முன்னால் வைக்கப்பட வேண்டும் :

ஒரு பாராளுமன்ற கூட்டம் 30 நாட்கள் ஒரு அமர்வாக நடைபெற்றுக் கொண்டிருந்தாலோ அதற்கு மேற்பட்ட அமர்வுகள் கூட்டம் நடைபெற்றால் இச்சட்டத்தின்படி செய்யப்பட்ட விதிகள் மற்றும் ஒழுங்குமுறை ஆகியவை அக்கூட்டத்திலோ அல்லது அதனைத் தொடர்ந்து அடுத்து கூட்டத்திலோ வைக்கப்பட வேண்டும். பாராளுமன்ற சபைகள் அவ்விதிகள் ஒழுங்குமுறைகள் மாற்றப்பட வேண்டும் என்று கூறினால் மாற்றப்பட்ட விதத்தில் மாற்றம் தேவையில்லை என கருதினால் மாற்றப்படாமலும் நடைமுறைக்கு வரும். ஆனால் அவ்விதி மற்றும் ஒழுங்குமுறையில் ஏற்கனவே உருவாக்கப்பட்டவைகளின் செல்லுந்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்தக் கூடாது.

 

 

Tags : பாலினம் கண்டறிதல் (பாலின தேர்வு தடைச்சட்டம் ) 1992 PROHIBITION OF SEX SELECTION) ACT 1994 சட்டமணி

More from the section

மன நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தல், அவசர கால சிகிச்சை பற்றி சட்டம் சொல்வதென்ன?
அரசுப் பணியாளர்கள் சொத்து வாங்கும் போது கடைபிடிக்க வேண்டிய விதிகள்!
சர்கார் திரைப்படமும் 49P விதியும்...
சிபிஐ பற்றி தெரிந்து கொள்வோம்...
பட்டாசுத் தடை - உச்ச நீதிமன்ற இடைக்காலத் தீர்ப்பில் அலசப்பட்ட பாதிப்புகள்!