தீபாவளி மலர் 2018: கோபுர தரிசனம் - பக்.364; ரூ.150

ஓவியர் ராஜாவின் கைவண்ணத்தில் உருவான மீரா கிருஷ்ணின் எழில் கொஞ்சும் அட்டைப்பட ஓவியம் இதழின் உள்ளே நம்மை பிரவேசிக்கத் தூண்டுகிறது.
தீபாவளி மலர் 2018: கோபுர தரிசனம் - பக்.364; ரூ.150

ஓவியர் ராஜாவின் கைவண்ணத்தில் உருவான மீரா கிருஷ்ணின் எழில் கொஞ்சும் அட்டைப்பட ஓவியம் இதழின் உள்ளே நம்மை பிரவேசிக்கத் தூண்டுகிறது.
 "விக்னங்களைத் தீர்க்கும் விக்னேஸ்வரர்' கட்டுரையில் தொடங்கி ஸ்ரீவேளுக்குடி கிருஷ்ணனின் "குழந்தைக் கண்ணன் குதூகலிக்கிறான்', சுதாசேஷைய்யனின் "வாத்ஸல்ய பக்தி' போன்ற ஆன்மிக கட்டுரைகள் அனைத்தும் பொக்கிஷங்கள்.
 கண்ணதாசன், வாலி, பா.விஜய் போன்ற கவிஞர்களின் கவிதைகள் இதம். டஆத எழுதிய "எர்க் ஈங்ப்ஹஹ்ள்ப் சங்ஸ்ங்ழ் ஈங்ய்ண்ங்ள்ப்' சிறுகதை மனதை நெகிழ வைக்கிறது. புகைப்படக் கலைஞர் கலைமாமணி யோகாவின் "பர்மா என்கிற மியான்மர்' பயணக்கட்டுரை பர்மாவின் சிறப்புகளை எடுத்துரைக்கிறது.
 "இசை உலகில் அன்று முதல் இன்றுவரை: "அன்று தில்ரூபா, இன்று கீ போர்ட்' கட்டுரை இசைக்கருவிகளின் பெருமையை பறை சாற்றுகிறது. ஆர்.எஸ்.எம்மின் "அபூர்வ எழுத்தாளர் சா.கந்தசாமி'யை பற்றிய குறிப்பும், நேர்காணலும் சிறப்பு. சமூகம், அறிவியல், இசை, தமிழ், ஆன்மிகம், கதைகள், பயணக் கட்டுரைகள், ஆலய தரிசனம் என மணம் கமழும் கதம்ப மாலையாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது இந்த தீபாவளி மலர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com