2018-லும் ஆயிரம் ரன்கள் குவித்த விராட் கோலியின் அடுக்கடுக்கான சாதனைகள்!

மே.இ.தீவுகளுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 37-ஆவது சதத்தை பதிவு செய்தார்.
2018-லும் ஆயிரம் ரன்கள் குவித்த விராட் கோலியின் அடுக்கடுக்கான சாதனைகள்!

மே.இ.தீவுகளுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 37-ஆவது சதத்தை பதிவு செய்தது மட்டுமல்லாமல், 10 ஆயிரம் ரன்களை வேகமாகக் கடந்த வீரர் எனும் புதிய உலக சாதனைகளைப் படைத்துள்ளார்.

மொத்தம் 129 பந்துகளில் 13 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களுடன் 157 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். இதன்மூலம் நடப்பாண்டில் 1,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் ஆனார். இதையடுத்து பல்வேறு சாதனைகளையும் தன்வசப்படுத்தியுள்ளார். அவற்றின் விவரம் பின்வருமாறு:

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக கடைசி 3 ஒருநாள் போட்டிகளிலும் ஹாட்ரிக் சதம் பதிவு செய்துள்ளார்.

111(115)*, கிங்ஸ்டன், 2017
140(107), குவாஹட்டி, 2018
129(157*), விசாகப்பட்டினம், 2018

ஒருநாள் போட்டிகளில் ஒரே அணிக்கு எதிராக ஹாட்ரிக் சதமடித்த பேட்ஸ்மேன்கள்:

ஜாகிர் அப்பாஸ் v இந்தியா, 1982-83
டெஸ்மன்ட் ஹெய்ன்ஸ் v ஆஸ்திரேலியா, 1984-85
சயீத் அன்வர் v இலங்கை, 1993
சச்சின் டெண்டுல்கர் v ஆஸ்திரேலியா, 1998
சௌரவ் கங்குலி v கென்யா, 2001-03
ஷாரியார் நஃபீஸ் v ஜிம்பாப்வே, 2006
நசீர் ஜெம்ஷத் v இந்தியா, 2012-13
விராட் கோலி v இலங்கை, 2012
குயின்டன் டி காக் v இந்தியா, 2013
பாபர் அசாம் v மேற்கிந்திய தீவுகள், 2016
விராட் கோலி v மேற்கிந்திய தீவுகள், 2017-18

ஒருநாள் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக அதிக சதமடித்த பேட்ஸ்மேன்கள்:

6 - விராட் கோலி
5 - ஹெர்ஷெல் கிப்ஸ்/ ஹசிம் ஆம்லா/ ஏபி டி வில்லியர்ஸ்
4 - சச்சின் டெண்டுல்கர்/ ஜாக்குஸ் கலீஸ்/ பாபர் அசாம்


ஒரே மைதானத்தில் விராட் கோலியால் எடுக்கப்பட்ட அதிகபட்ச சதங்கள்:

மிர்பூர் -4 சதங்கள் (13 இன்னிங்ஸ்)
கொழும்பு பிரேமதாஸா - 3 சதங்கள் (8 இன்னிங்ஸ்)
விசாகப்பட்டினம் - 3 சதங்கள் (5 இன்னிங்ஸ்)

ஒரு ஆண்டில் குறைந்த இன்னிங்ஸ்களில் ஆயிரம் ரன்களைக் கடந்தவர்கள்:

11 - விராட் கோலி (2018)
15 - ஹசிம் ஆம்லா (2010)/ விராட் கோலி (2012)
17 - டேவிட் கோவர் (1983)/ ஷேன் வாட்சன் (2011)/ குமார சங்ககாரா (2013)/ ஏபி டி வில்லியர்ஸ் (2015)

2018-ல் விராட் கோலி இதுவரை:

112(119)
46(50)*
160(159)*
75(83)
36(54)
129(96)*
75(82)
45(56)
71(72)
140(107)
134(118)*

ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த இந்திய பேட்ஸ்மேன்கள்:

219 - வீரேந்திர சேவாக், இந்தூர், 2011
152* - ரோஹித் ஷர்மா, குவாஹட்டி, 2018
142* - விராட் கோலி, விசாகப்பட்டினம், 2018
141* - சச்சின் டெண்டுல்கர், சிங்கப்பூர், 2006 
140 - விராட் கோலி, குவாஹட்டி, 2018

ஒருநாள் போட்டிகளில் அதிகமுறை 150 ரன்களைக் கடந்தவர்கள்:

ரோஹித் ஷர்மா - 6 முறை
சச்சின் டெண்டுல்கர்/ டேவிட் வார்னர் - 5 முறை
சனத் ஜெயசூர்யா/ கிறிஸ் கெயில்/ ஹசிம் ஆம்லா/ விராட் கோலி - 4 முறை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com