மதுரை மீனாட்சிசுந்தரேசுவரர் கோயிலில் ஆடிமுளைக் கொட்டு விழா கொடியேற்றம்

மதுரை மீனாட்சிசுந்தரேசுவரர் கோயிலின் ஆடி முளைக்கொட்டு திருவிழா கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆடி முளைக்கொட்டு விழா கொடியேற்றம். (உள்படம்) சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த மீனாட்சியம்மன்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆடி முளைக்கொட்டு விழா கொடியேற்றம். (உள்படம்) சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த மீனாட்சியம்மன்.

மதுரை மீனாட்சிசுந்தரேசுவரர் கோயிலின் ஆடி முளைக்கொட்டு திருவிழா கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி அம்மன் சன்னதியில் உள்ள தங்கக் கொடி மரத்தில் கொடியேற்ற பூஜைகள் காலை 10 மணிக்குத் தொடங்கின. அம்மன் பல்லக்கில் எழுந்தருளிய நிலையில், காலை 10.40 மணிக்கு கொடியேற்றப்பட்டது. இதில் கோயில் இணை ஆணையர் என்.நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கொடியேற்றத்தைத் தொடர்ந்து அம்மன், விழா நடைபெறும் 10 நாள்களும், தினமும் காலையிலும், மாலையிலும் பஞ்சமூர்த்திகளுடன் கோயில் வளாகத்தில் ஆடி வீதிகளில் வலம் வந்து அருள்பாலிக்கிறார். அப்போது சிறப்பு நாதஸ்வரம் மற்றும் தவில் வித்வான்களின் வரவேற்பு நடைபெறும். கொட்டு மேளம் எனும் சிறப்பு இன்னிசை மீட்டி அம்மன் இருப்பிடம் சேர்த்தியாவார்.
விழாவின் ஏழாம் நாளன்று இரவு அம்மன் வீதி உலா நிறைவடைந்ததும், உற்சவர் சன்னதியில் மாலை மாற்றும் பூஜைகள் நடைபெறும். ஆடி முளைக்கொட்டு உற்சவத்தின் மூலம் விவசாயம் செழிக்கும் என பக்தர்கள் நம்புவதால், அதனடிப்படையில் பூஜைகள் அனைத்தும் நடைபெறும். அம்மனுக்கு என ஆடி முளைக்கொட்டு விழா தவிர, ஐப்பசி கோலாட்டம், நவராத்திரி கலை விழா, மார்கழி எண்ணெய் காப்பு ஆகியவையும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 
ஆடிமுளைக்கொட்டு உற்சவத்தை முன்னிட்டு வரும் 24 ஆம் தேதி வரை கோயிலில் உபய, திருக்கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com