குற்றாலம் பேரருவி, ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு: 2-ஆவது நாளாக குளிக்கத் தடை

திருநெல்வேலி மாவட்டம், குற்றாலம் பகுதியில் தொடர் மழை காரணமாக பேரருவி, ஐந்தருவியில் தொடர்ந்து 2ஆவது நாளாக சனிக்கிழமையும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.
ஐந்தருவியின் அனைத்துக் கிளைகளிலும் ஆர்ப்பரித்த வெள்ளம்.
ஐந்தருவியின் அனைத்துக் கிளைகளிலும் ஆர்ப்பரித்த வெள்ளம்.

திருநெல்வேலி மாவட்டம், குற்றாலம் பகுதியில் தொடர் மழை காரணமாக பேரருவி, ஐந்தருவியில் தொடர்ந்து 2ஆவது நாளாக சனிக்கிழமையும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.
குற்றாலம் பகுதியில் சனிக்கிழமையும் காலைமுதல் விட்டுவிட்டு சாரல் பெய்தது. இதனால், அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்துக்கொண்டிருந்தது. இதையடுத்து, பேரருவியில் 2ஆவது நாளாக குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டது.
ஐந்தருவியிலும் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியதால் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. பிற்பகலில் தண்ணீரின் சீற்றம் தணிந்ததால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். சிறிது நேரத்தில் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியதால் குளிப்பதற்கு மீண்டும் தடைவிதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள், பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளுக்குச் சென்று குளித்தனர். காலைமுதல் குளிர்ந்த காற்று, இதமான சாரல், அவ்வப்போது மிதமான வெயில் என, நாள் முழுதும் காலநிலை மிகவும் ரம்மியமாக இருந்ததால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com