கஜா புயல் இதுவரை 3 முறை திசை மாறியுள்ளது: அமைச்சர் உதயகுமார் பேட்டி

வங்கக் கடலில் உருவாகியுள்ள கஜா புயல் இதுவரை 3 முறை திசை மாறியுள்ளது என்று தமிழக அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.
கஜா புயல் இதுவரை 3 முறை திசை மாறியுள்ளது: அமைச்சர் உதயகுமார் பேட்டி


சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள கஜா புயல் இதுவரை 3 முறை திசை மாறியுள்ளது என்று தமிழக அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.

கஜா புயல் தொடர்பாக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் உதயகுமார் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, கஜா புயலின் திசை அடிக்கடி மாறி வருகிறது. இதுவரை கஜா புயல் 3 முறை தனது பாதையை மாற்றிக் கொண்டுள்ளது. தற்போது மணிக்கு 5 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.

கஜா புயல் நகர்வைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். கஜா புயல் தொடர்பான வதந்திகளை மக்கள் யாரும் நம்ப வேண்டாம். அரசு கொடுக்கும் அறிவிப்புகளை மட்டுமே மக்கள் நம்ப வேண்டும். பின்பற்ற வேண்டும். புயல் காலங்களில் பொதுமக்கள் வாகனங்களில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

மருத்துவக் குழு, பால் விநியோகக் குழுக்கள் போன்றவை தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் பாதிக்கப்படக் கூடிய 2559 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. 

புயலால் சேதமடையும் மரங்களை அப்புறப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. கஜா புயல் தொடர்பாக மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com