பாலியல் வன்கொடுமையால் மாணவி உயிரிழப்பு: இளைஞர் கைது

அரூர் அருகே பாலியல் வன்கொடுமையால் மாணவி உயிரிழந்த சம்பவத்தில் சதீஷ் என்ற இளைஞரை கோட்டப்பட்டி போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

அரூர் அருகே பாலியல் வன்கொடுமையால் மாணவி உயிரிழந்த சம்பவத்தில் சதீஷ் என்ற இளைஞரை கோட்டப்பட்டி போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
 தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், சிட்லிங் மலை கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின பிளஸ் 2 மாணவியை, அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். இது குறித்து கோட்டப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து, சிட்லிங் கிராமத்தைச் சேர்ந்த சாமிக்கண்ணு மகன் சதீஷ் (22) என்பவரைக் கைது செய்தனர். முன்னதாக, பள்ளி மாணவியை இளைஞர்கள் இருவரும் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது, அந்த வழக்கு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 விசாரணை அதிகாரி மாற்றம்: இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்த கோட்டப்பட்டி காவல் ஆய்வாளர் முத்து கிருஷ்ணன் மீது பல்வேறு புகார்கள் எழுந்தது. இதையடுத்து, வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்த காவல் ஆய்வாளர் முத்து கிருஷ்ணன் அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, அரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் லட்சுமி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com