புயலுக்கு பின் அல்ல நடுவிலும் ஒரு அமைதி வரும்: கஜா கரையைக் கடந்ததை கண்டுபிடிப்பது எப்படி? 

நாகை உள்ளிட்ட மாவட்டங்களை அச்சுறுத்தி வரும் கஜா புயல் இன்னும் சில  மணி நேரங்களில் கரையைக் கடக்கவிருக்கிறது.
புயலுக்கு பின் அல்ல நடுவிலும் ஒரு அமைதி வரும்: கஜா கரையைக் கடந்ததை கண்டுபிடிப்பது எப்படி? 


நாகை உள்ளிட்ட மாவட்டங்களை அச்சுறுத்தி வரும் கஜா புயல் இன்னும் சில  மணி நேரங்களில் கரையைக் கடக்கவிருக்கிறது.

புயல் கரையைக் கடக்கும் போது, குறிப்பிட்ட 6 மாவட்டங்களிலும் தொலைத் தொடர்பு, மின்சாரம் துண்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இரவு கஜா புயல் கரையைக் கடக்கவிருக்கிறது. புயல் சின்னம் முழுவதுமாக கரையைக் கடக்கும் நிகழ்வானது நாளை அதிகாலை வரையிலும் தொடரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், புயல் சின்னம் கரையைக் கடந்து, வானிலை சீரடைந்தது என்பதை பொதுமக்கள் எப்படி அறிந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

அதில், கஜா புயல் இன்று இரவு அல்லது நள்ளிரவில் கரையைக் கடக்க ஆரம்பித்து சுமார் 4 மணி நேரம் வரை கரையைக் கடக்கும் நிகழ்வானது தொடரும். முதலில் திருவாரூர் மாவட்டத்தில் காற்று வடமேற்கு - கிழக்கு திசையில் வீசும். பிறகு, புயல் சின்னத்தின் மையப் பகுதி (அது ஒரு கண் போன்ற அமைப்பு) கரையைக் கடக்கத் தொடங்கிய பிறகு புயலின் அடுத்த பின்பகுதி கரையைக் கடக்கும். அப்போது தென்கிழக்கு திசையில் காற்று வீசக் கூடும். இதற்கு நடுவில் அதாவது புயல் சின்னத்தின் முதல் பகுதி கரையைக் கடந்த பிறகு கண் போன்ற அமைப்பு கரையைக் கடக்கும் போது ஒரு அமைதியான நிலைமை உருவாகும். அப்போது புயல் கரையைக் கடந்து விட்டதாக எண்ணி வெளியே செல்ல வேண்டாம். வீட்டின் அருகே உள்ள மரங்கள் தென் கிழக்கு திசையில் சாய்வதைப் பார்த்த பிறகு ஏற்படும் அமைதியான சூழ்நிலை தான் புயல் முழுவதுமாக கரையைக் கடந்து விட்டதை உணர்த்தும் என்று தெரிவித்துள்ளார்.

முதலில் வடமேற்கு - கிழக்கு திசையில் காற்று வீசும். பிறகு ஒரு அமைதி நிலவும். பிறகு காற்றின் திசையில் மாற்றம் ஏற்பட்டு தென்கிழக்கு திசையில் காற்று வீசும். இதுதான் புயல் கரையைக் கடப்பதற்கான முழு வட்டம். இதனை புரிந்து கொண்டால் வானிலையை ஓரளவுக்கு உங்களால் கணித்துக் கொள்ள முடியும் என்று நம்புகிறோம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com