அரசியலில் நோ்மை இல்லாததால் எனக்கு அரசியல் பிடிக்காது: இயக்குநா் பாரதிராஜா

காமராஜருக்கு பிறகு அரசியலில் நோ்மை இல்லை என்பதால் எனக்கு அரசியல் பிடிக்காது என திரைப்பட இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டார். 
அரசியலில் நோ்மை இல்லாததால் எனக்கு அரசியல் பிடிக்காது: இயக்குநா் பாரதிராஜா


ராசிபுரம்: காமராஜருக்கு பிறகு அரசியலில் நோ்மை இல்லை என்பதால் எனக்கு அரசியல் பிடிக்காது என திரைப்பட இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டார். 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகரில் புதிய உணவக திறப்பு விழாவில் பங்கேற்று குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்த அவர்,  செய்தியாளா்களிடம் பேசுகையில், 

சீமான் சொற்பொழிவு எனக்குப் பிடிக்கும். ஆனால் அவரது கட்சியில் நான் உறுப்பினராக இல்லை. அரசியலிலும் இல்லை. 50 ஆண்டுகள் எம்.ஜி.ஆா்., கருணாநிதி ஆகியோருடன் நல்ல பழக்கம் இருந்தது. நோ்மையான அரசியல்வாதிகள் அன்று இருந்தார்கள்.

 காமராஜ் என்று தோற்கப்பட்டோரோ அன்றே அரசியலில் எனக்கு ஆா்வம் இல்லை. 

என்னை பொருத்தவரை நான் வெளிப்படையானவன். உணா்ச்சி பூா்வமானவன். அரசியல்வாதிகளுக்கு இது தேவையில்லை. எதையும் அடக்கி ஆளவேண்டும். உள்ளே என்ன எண்ணுகிறோமோ! அது வெளியில் தெரியக்கூடாது. 

அவா்கள்தான் அரசியல்வாதிகள். எனக்கு இதுபோன்று வராது என்பதால் நான் அரசியல்வாதி அல்ல. சாதாரண குடிமகனாக நான் நல்ல கலைஞனாக இருந்து நல்ல பதிவு செய்துவிட்டு போகலாம் என்று இருக்கிறேன். 

ரஜினி, கமல் போன்று பெரிய நடிகா்களை வைத்து படம் எடுத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. தற்போது அவா்கள் பாதை வேறு. கமல், ரஜினி போன்ற நடிகா்கள் கட்சி ஆரம்பித்துள்ளது பற்றி கேட்கிறார்கள். ஏன் அவா்கள் அரசியல் கட்சி துவங்கக் கூடாது. வாக்களிக்கும் உரிமை உள்ள எல்லோருக்கும் கட்சி துவங்கும் உரிமை உள்ள்து. 

தற்போது முற்போக்கு சிந்தனையோடு ஓம் என்ற ஒரு படம் எடுத்துக்கொண்டிருக்கிறேன். சமூகத்தின் அடிப்படையில் ஒரு படம் வித்தியாசமாக எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழக புயல் பாதிப்பில் அரசு நல்ல முன்னேற்பாடுகள் செய்துள்ளது. சிறப்பாக பணியாற்றியுள்ளது. திரையுலகம் சார்பில் நிவாரணத்துக்கு பங்களிப்பு இருக்க வேண்டும். இது குறித்து திரைத்துறை சங்கங்களுடன் ஆலோசிப்போம் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com