சபரிமலை நடை திறப்பு: ரயில்கள் செங்கனூரில் தற்காலிகமாக நின்று செல்லும்

சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக 4 ரயில்கள் செங்கனூர் ரயில் நிலையத்தில் தற்காலிகமாக நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெற்கு


சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக 4 ரயில்கள் செங்கனூர் ரயில் நிலையத்தில் தற்காலிகமாக நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை-திருவனந்தபுரம் இடையே இயக்கப்படும் வாராந்திர விரைவு ரயில் வரும் 25-ஆம் தேதி முதல் 2019 ஜனவரி 20-ஆம் தேதி வரை செங்கனூரில் தற்காலிகமாக நின்று செல்லும். இந்த ரயில் செங்கனூர் ரயில் நிலையத்துக்கு அதிகாலை 3.48 மணிக்கு சென்றடையும். 3.50 மணிக்கு புறப்படும்.
மறுமார்க்கத்தில் திருவனந்தபுரம்-சென்னைக்கு இடையே இயக்கப்படும் வாராந்திர விரைவு ரயில் வரும் 24-ஆம் தேதி முதல் 2019 ஜனவரி 19-ஆம் தேதி வரை தற்காலிகமாக நின்று செல்லும். இந்த ரயில் செங்கனூர் ரயில் நிலையத்தை இரவு 10.23 மணிக்கு வந்தடைந்து, 10.25 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்.
திருவனந்தபுரம்-நிஜாமுதீன் இடையே இயக்கப்படும் வாராந்திர விரைவு ரயில் வரும் 24-ஆம் தேதி முதல் 2019 ஜனவரி 19-ஆம் தேதி வரை தற்காலிகமாக நின்று செல்லும். இந்த ரயில் செங்கனூர் ரயில் நிலையத்தில் அதிகாலை 2.28 மணிக்கு வந்து, மீண்டும் அதிகாலை 2.30 மணிக்கு புறப்படும்.
மறுமார்க்கமாக நிஜாமுதீன்-திருவனந்தபுரம் இடையே இயக்கப்படும் வாராந்திர விரைவு ரயில் வரும் 26-ஆம் தேதி முதல் 2019 ஜனவரி 21வரை செங்கனூரில் தற்காலிகமாக நின்று செல்லும். இந்த ரயில் செங்கனூரில் முற்பகல் 11.18 மணிக்கு வந்து, 11.20 மணிக்கு புறப்பட்டு செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com