காற்றாலை மின்உற்பத்தியில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை: அமைச்சர் தங்கமணி

காற்றாலை மின்உற்பத்தியில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
காற்றாலை மின்உற்பத்தியில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை: அமைச்சர் தங்கமணி

காற்றாலை மின்உற்பத்தியில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்ளுக்கு அளித்த பேட்டியில், 
காற்றாலை மின்உற்பத்தியில் முறைகேடு நடைபெற்றதாக ஸ்டாலின் கூறுவது தவறானது. தமிழக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஸ்டாலின் செயல்படுகிறார். ஸ்டாலின் தொடர்ந்து தவறான செய்திகளை வெளியிட்டால், நீதிமன்றத்தை நாடுவோம். 

அக்டோபர், நவம்பரில் காற்றாலை மின் உற்பத்தி குறைவாக இருக்கும் என்பது ஸ்டாலினுக்கு தெரியாதா?. மின்சார வாரியம் எந்த நிறுவனத்துக்கும் பணம் கொடுக்கவில்லை. காற்றாலை மின் உற்பத்தியில் முறைகேடு நடந்துள்ளது கண்டறியப்பட்டு 3 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டார். 

தமிழகத்தில் நிலக்கரி தட்டுப்பாடு இல்லை. ஒடிசாவில் பெய்த கனமழை காரணமாக எல்லா மாநிலங்களுக்கும் நிலக்கரி கிடைப்பததில் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com