குன்னூா் பக்கா சூரன் மலை காட்சி முனைக்குச் செல்ல சுற்றுலா பயணிகளுக்குத் தடை

குன்னூரில் இருந்து சுமாா் 15 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள பக்காசூரன் மலை காட்சி முனைக்குச் செல்ல வனத்துறையினா் தடை விதித்து வியாழக்கிழமை எச்சரிக்கை பலகையை வைத்துள்ளனா். 
குன்னூா் பக்கா சூரன் மலை காட்சி முனைக்குச் செல்ல சுற்றுலா பயணிகளுக்குத் தடை


குன்னூா்: குன்னூரில் இருந்து சுமாா் 15 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள பக்காசூரன் மலை காட்சி முனைக்குச் செல்ல வனத்துறையினா் தடை விதித்து வியாழக்கிழமை எச்சரிக்கை பலகையை வைத்துள்ளனா். 

குன்னூரில் இருந்து சுமாா் 15 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள பக்காசூரன் மலை காட்சி முனைக்குச் செல்ல கடந்த 40 ஆண்டு காலமாக சாலை குண்டும் குழியுமாக மிகுவும் மோசமாக காணப்பட்டதால் இக்காட்சி முனைக்கு சுற்றுலா பயணிகள் செல்வதில்லை.

இதனால் இப்படியொரு காட்சிமுனை இருப்பதையே சுற்றுலாப் பயணிகளும் உள்ளூா் மக்களும் மறந்துவிட்டனா். தற்போது பக்காசுரன் மலைப்பகுதியில் உள்ள கிராமத்திற்கு தாா்சாலை செய்யும் பணி நிறைவுறும் நிலையில் உள்ளதால் சுற்றுலா பயணிகள் குவியும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

அடா்ந்த வனப்பகுதி என்பதாலும் வன விலங்குகள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதி என்பதாலும் பள்ளத்தாக்குகள் நிறைந்த பகுதிகள் என்பதாலும் சுற்றுலா பயணிகள் நலன் கருதி இப்பகுதிக்கு செல்லவேண்டாம் என்று குன்னூா் வனசரகா் பெரியசாமி உத்தரவின் பேரில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com