ரயில்வே ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: ஜி.கே.வாசன்

ரயில்வே ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.


ரயில்வே ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், அவுட் சோர்சிங் முறையைக் கைவிட வேண்டும், சென்னை பெரம்பூரில் உள்ள எலக்ட்ரிக்கல் பணிமனையை மூடும் முயற்சியைக் கைவிட வேண்டும், குறைந்த பட்ச ஊதியம் ரூ.28,000 வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில்வே ஊழியர்கள் போராடி வருகின்றனர்.
இதை மத்திய அரசு முக்கிய பிரச்னையாகக் கவனத்தில் கொண்டு, கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். 
தமிழக அரசும் ரயில்வே ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முன்வர வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com