தானமாகப் பெறப்படும் கல்லீரலை பாதுகாக்கும் அதிநவீன கருவி: அப்பல்லோவில் அறிமுகம்

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யும் வரை, தானமாகப் பெறப்படும் கல்லீரலின் திசுக்களைப் பாதுகாக்கும் அதிநவீன கருவியை அப்பல்லோ மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது.


உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யும் வரை, தானமாகப் பெறப்படும் கல்லீரலின் திசுக்களைப் பாதுகாக்கும் அதிநவீன கருவியை அப்பல்லோ மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, அப்பல்லோ மருத்துவமனையின் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அனில் வைத்யா சென்னையில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது: மூளைச் சாவு, உறுப்புகள் தானமாக வழங்கும் தகுதியுடைய விபத்தில் உயிரிழந்தவர்களிடம் இருந்து தானமாகப் பெறப்படும் கல்லீரல், ஐஸ் கட்டி அல்லது குளிர்பதனம் செய்யப்பட்ட கருவி மூலம் பாதுகாக்கப்பட்டு, பின்னர் தேவைப்படுவோருக்கு அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்படுகிறது. இந்த முறை மூலம் ஒருவரிடம் இருந்து தானமாகப் பெறப்படும் கல்லீரலை 8 முதல் 10 மணி நேரம் வரை மட்டுமே பாதுகாக்க முடியும். அது மட்டுமில்லாமல் இந்த முறையைப் பின்பற்றும்போது, கல்லீரலின் திசுக்களும் பாதிக்கப்படுகின்றன.
அதி நவீன கருவி: இதனை கருத்தில் கொண்டு, தானமாகப் பெறப்படும் கல்லீரலை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வரை 14 முதல் 24 மணி நேரம் வரை பாதுகாக்கும் ஆர்கனேக்ஸ் மெட்ரோ' என்ற அதிநவீன கருவியை அப்பல்லோ மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தக் கருவி மூலம் தானமாகப் பெறப்படும் கல்லீரலை சாதாரண உடல் வெப்பநிலையிலேயே வைத்திருக்க முடியும். மேலும், திசுக்கள் பாதிப்பு தவிர்க்கப்படுவதுடன், தானமாகப் பெறப்படும் கல்லீரலை நீண்ட தூரம் எடுத்துச் செல்லவும் முடியும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com