அக்.2 வரை பள்ளிகளுக்கு விடுமுறை: காலாண்டுத் தேர்வு இன்றுடன் நிறைவு

தமிழக பள்ளிகளில் காலாண்டு தேர்வு சனிக்கிழமையுடன் நிறைவுபெறுவதைத் தொடர்ந்து அக்டோபர் 2-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


தமிழக பள்ளிகளில் காலாண்டு தேர்வு சனிக்கிழமையுடன் நிறைவுபெறுவதைத் தொடர்ந்து அக்டோபர் 2-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பாடம் நடத்தப்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் காலாண்டு தேர்வுகள் கடந்த 10 -ஆம் தேதி (செப்.10) தொடங்கி நடைபெற்று வருகின்றன. 
மொஹரம் பண்டிகை என்பதால் வெள்ளிக்கிழமை பள்ளிகளுக்கு அரசு விடுமுறை நாளாகும். இதன் காரணமாக சனிக்கிழமை பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகள் முடிவடைகின்றன. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை (செப். 23) முதல் அக்டோபர் 2 -ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்படவுள்ளது. இதைத்தொடர்ந்து அக்டோபர் 3 -ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com