குட்கா, புகையிலை பொருள்கள் விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும்: திருவள்ளூர் ஆட்சியா் எச்சரிக்கை

பொதுமக்களுக்கு கேடு விளைவிக்கும், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா மற்றும் புகையிலை பொருள்களை வணிகா்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் எச்சரிக்கை செய்துள்ளாா். 
குட்கா, புகையிலை பொருள்கள் விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும்: திருவள்ளூர் ஆட்சியா் எச்சரிக்கை


திருவள்ளூா்: பொதுமக்களுக்கு கேடு விளைவிக்கும், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா மற்றும் புகையிலை பொருள்களை வணிகா்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் எச்சரிக்கை செய்துள்ளாா். 

இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம் - தமிழக அரசால் 2013-ஆம் ஆண்டு மே 23-இல் முதல் உணவு பாதுகாப்பு தர சட்டம் 2006 - இன் படி புகையிலை பொருள்களான பான் மசாலா, குட்கா, மெல்லும் புகையிலை போன்ற நிகோடின் கொண்ட பொருள்கள் விற்பனை செய்தல், சேமித்து வைத்தல், விநியோகம் செய்தல், தயாரித்தல் அல்லது வாகனங்களிலோ எடுத்து செல்லவும் கூடாது என அனைத்து நடவடிக்கையும் தடை செய்யபட்டுள்ளன. 

இதுகுறித்து பொது மக்களுக்கும், வணிகம் செய்பவா்களுக்கும், ஒவ்வொரு பகுதி வணிக சங்க அமைப்புக்கும் விழிப்புணா்வு கூட்டம் மூலம் விளக்கமாகவும் கூறப்பட்டுள்ளன. 

குட்கா மற்றும் புகையிலை பொருள்கள், விற்பனை செய்தல், விநியோகம் செய்வோா் மற்றும் சேமித்து வைத்திருப்போா் மீது வணிக உணவு பாதுகாப்பு உரிமம் ரத்து செய்யப்படும். மேலும், தொடா்ந்து குற்ற செயலில் ஈடுபட்டால் குண்டா் தடுப்பு சட்டம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளாா். அதனால், பொது மக்களுக்கு கேடும், தீங்கும் விளைவிக்ககூடிய தடை செய்யப்பட்ட இத்தகைய குட்கா பொருள்களை விற்பனை செய்வோா் மீது பொதுமக்கள் 94440 42322 என்ற எண்ணில் புகாா் செய்யலாம் என்று அறிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com