கடலில் கடத்தல் சம்பவங்களை தடுக்க இந்தியா - இலங்கை இணைந்து கூட்டு ரோந்து: கடற்படை அதிகாரி தகவல்

சர்வதேச கடல் எல்லை வழியாக சட்டவிரோத கடத்தல் சம்பவங்களை தடுக்க இந்தியா - இலங்கை நாடுகள் இணைந்து, கூட்டு ரோந்துப் பணியில் ஈடுபட வாய்ப்புள்ளதாக இந்திய
ராமேசுவரம் கடற்படை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய கடற்படை அதிகாரி வினியீட்.
ராமேசுவரம் கடற்படை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய கடற்படை அதிகாரி வினியீட்.


சர்வதேச கடல் எல்லை வழியாக சட்டவிரோத கடத்தல் சம்பவங்களை தடுக்க இந்தியா - இலங்கை நாடுகள் இணைந்து, கூட்டு ரோந்துப் பணியில் ஈடுபட வாய்ப்புள்ளதாக இந்திய கடற்படை அதிகாரி வினியீட் தெரிவித்தார்.
இந்திய கடற்பகுதியில் கடத்தல் சம்பவங்களை தடுக்கும் பொருட்டு, கடலோரக் காவல்படை, மீன்வளத்துறையினர், மத்திய - மாநில அரசு உளவுத்துறையினர், மீனவ சங்கத் தலைவர்கள் மற்றும் மீனவர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து, கடற்படை அதிகாரி வினியீட் பேசியதாவது:
ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில் சமீப காலமாக சர்வதேச கடல் எல்லை வழியாக சட்டவிரோத கடத்தல் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. 
இதனை தடுக்க இந்தியா, இலங்கை நாட்டு அதிகாரிகள் உயர் மட்ட அளவில் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதன்படி, இரு நாடுகள் இணைந்து விரைவில் கூட்டு ரோந்துப் பணியில் ஈடுபட வாய்ப்புள்ளது. 
தேசிய பாதுகாப்புப் படையின் ஆலோசனைப் படி, முதல் கட்டமாக தமிழகம், குஜராத் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள படகுகளில் டிரான்ஸ்போடர் கருவி பெருத்தப்பட்டு வருகிறது. 
இதன் மூலம் மீனவர்களுக்கு நடுக்கடலில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து, உடனடியாக ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ள கடற்படை, கடலோர காவல்படை அதிகாரிகளை எளிதில் தொடர்புகொண்டு உதவிகளை பெற முடியும். 
மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் கட்டாயம் பயோமெட்ரிக் அடையாள அட்டைகள் வைத்திருக்க வேண்டும். 
கடந்த ஆண்டு இலங்கை கடற்படையால் 350-க்கும் மேற்பட்ட மீனவாகள் சிறைபிடிக்கப்பட்டனர். அதில் 300 பேருக்கு அடையாள அட்டை இல்லை. 
இதனால் மீனவர்கள் யார்?, சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது. கடலில் அடையாளம் தெரியாத நபர்கள் தென்பட்டால், உடனே கடற்படை, கடலோரக் காவல்படை, காவல்துறைக்கு மீனவர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும். கடல் எல்லை பாதுகாப்புக்கு மீனவர்கள் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்றார்.
இக்கூட்டத்தில், மீனவ சங்கத் தலைவர்கள் ஜேசுராஜ், சகாயம் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் மீனவர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com