சுப்பிரமணியன் குடும்பத்துக்கு கிருஷ்ணசாமி ரூ.20,000 நிதியுதவி

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் அனைவருக்கும் மத்திய அரசு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை கிருஷ்ணசாமி வைத்தார். 
சுப்பிரமணியன் குடும்பத்துக்கு கிருஷ்ணசாமி ரூ.20,000 நிதியுதவி


புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் அனைவருக்கும் மத்திய அரசு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை கிருஷ்ணசாமி வைத்தார். 

காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இதில், தமிழகத்தைச் சேர்ந்த சிவசந்திரன், சுப்பிரமணியன் ஆகியோரும் உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் முழு அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க அவர்களது சொந்த கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் குடும்பத்தை புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர், தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி சந்தித்தார். அப்போது, சுப்பிரமணியன் குடும்பத்துக்கு அவர் ரூ.20,000 நிதியுதவி வழங்கினார். இதையடுத்து, சுப்பிரமணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 

அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்கள் அனைவருக்கும் மத்திய அரசு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com