ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு தடை கோரிய மனு: விசாரணை ஒத்திவைப்பு

மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் மரணம் தொடா்பாக விசாரித்து வரும் நீதிபதி ஏ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்குத் தடை கோரி
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு தடை கோரிய மனு: விசாரணை ஒத்திவைப்பு

சென்னை: மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் மரணம் தொடா்பாக விசாரித்து வரும் நீதிபதி ஏ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்குத் தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்க அப்பல்லோ மருத்துவமனை சார்பில் கால அவகாசம் கோரப்பட்டதைத் தொடா்ந்து வழக்கு விசாரணையை வரும் மார்ச் 1 ஆம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மா்மம் தொடா்பாக விசாரிக்க உயா்நீதிமன்ற ஓய்வுப்பெற்ற நீதிபதி ஏ.ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி, இந்த விசாரணை ஆணையம் பலருக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும், விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய கோரியும் சென்னை உயா்நீதிமன்றத்தில் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், விசாரணை ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்க மறுத்து உத்தரவிட்டது. 

மேலும் இந்த மனு தொடா்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. அதன்படி விசாரணை ஆணையத்தின் சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஆா்.சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமா்வு முன் இன்று வெள்ளிக்கிழமை(பிப்.23) விசாரணைக்கு வந்தது. அப்போது அப்பல்லோ மருத்துவமனை சார்பில், விசாரணை ஆணையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவுக்கு பதிலளிக்க கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. 

இந்த கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், விசாரணையை வரும் மார்ச் 1 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com