டாப்சிலிப், முதுமலையில் யானைகளுக்குப் புத்துணர்வு முகாம் தொடக்கம்

டாப்சிலிப், முதுமலையில் உள்ள வளர்ப்பு யானைகளுக்குப் புத்துணர்வு முகாம் சனிக்கிழமை தொடங்கியது. 
யானைகளுக்கு  உணவு  வழங்கி  புத்துணர்வு  முகாமை  தொடங்கி வைக்கிறார் வால்பாறை  சட்டப் பேரவை உறுப்பினர் கஸ்தூரி வாசு.
யானைகளுக்கு  உணவு  வழங்கி  புத்துணர்வு  முகாமை  தொடங்கி வைக்கிறார் வால்பாறை  சட்டப் பேரவை உறுப்பினர் கஸ்தூரி வாசு.

டாப்சிலிப், முதுமலையில் உள்ள வளர்ப்பு யானைகளுக்குப் புத்துணர்வு முகாம் சனிக்கிழமை தொடங்கியது. 
கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப்பில் யானைகள் முகாம் உள்ளது. இங்கு 7 கும்கி யானைகள் உள்பட 25 யானைகள் உள்ளன. வனப் பகுதிக்குள் இருந்து விவசாயப் பகுதிகளுக்குள் வந்து சேதம் செய்யும் காட்டு யானைகளைக் கட்டுப்படுத்துவது, மீண்டும் வனப் பகுதிக்குள் விரட்டுவது, காட்டு யானைகளைப் பிடிப்பது என பல்வேறு பணிகளில் கும்கி யானைகள் ஈடுபடுத்தப்படுகின்றன. 
கும்கி யானைகள் தவிர சுற்றுலாப் பயணிகள் சவாரி செய்வதற்கும் வளர்ப்பு யானைகள் உள்ளன. இந்த வளர்ப்பு யானைகளுக்கான புத்துணர்வு முகாம் டாப்சிலிப்பில் சனிக்கிழமை தொடங்கியது. வால்பாறை சட்டப் பேரவை உறுப்பினர் கஸ்தூரி வாசு முகாமை தொடக்கிவைத்தார். உடன், ஆனைமலை புலிகள் காப்பக தலைமை வனப் பாதுகாவலர் கணேசன், மாவட்ட வன அலுவலர் மாரிமுத்து, வனச் சரக அலுவலர்கள் நவீன்குமார், காசிலிங்கம், மணிகண்டன், வனவர் முனியாண்டி உள்பட பலர் இருந்தனர். இந்த புத்துணர்வு முகாம் தொடர்ந்து 48 நாள்களுக்கு நடைபெறும். 
முகாமில் யானைகள் தினசரி குளிப்பாட்டப்பட்டு அவற்றுக்குப் பிடித்தமான உணவான கரும்பு, வெல்லம், பழம், சத்துணவான ராகி களி, கொள் உருண்டை, அரிசி சாதம், சத்து மாத்திரைகள் என யானைகளின் உடல் எடைக்கு தகுந்தாற்போல் வழங்கப்படும். இதுதவிர பசுந்தீவனங்களும் வழங்கப்படும். 
கூண்டில் அடைக்கப்பட்டுள்ள சின்னத்தம்பி யானையையும் புத்துணர்வு முகாம் கணக்கில் சேர்த்து அதற்கும் மற்ற யானைகளுக்கு வழங்கப்படுவதுபோல் சத்தான உணவு வழங்கப்படவுள்ளது. அதேபோல், தேனி மாவட்டத்தில் வளர்க்கப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி  அனுப்பப்பட்டு ஆனைமலை வனத் துறை அலுவலகத்தில் உள்ள ரோகிணி யானையையும் புத்துணர்வு முகாமில் பங்கேற்க வைப்பதற்காக டாப்சிலிப் பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை  கொண்டு செல்லப்படவுள்ளது. 

முதுமலை தெப்பக்காடு முகாமில் நடைபெற்ற புத்துணர்வு முகாம் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற வனத் துறை அதிகாரிகள்.

டாக்டர் இல்லாமல் புத்துணர்வு முகாம்: முதுமலையில் புத்துணர்வு முகாம் நடந்தபோது, கால்நடை மருத்துவர் யானைகளை தினசரி பரிசோதித்து யானைகளின் உடல் நிலையைப் பொறுத்து உணவு வழங்குவர். ஆனால், டாப்சிலிப்பில் கால்நடை மருத்துவர் இல்லாமலேயே புத்துணர்வு முகாம் தொடங்கியுள்ளது. மேலும், முதுமலை யானைகள் வளர்ப்பு முகாமுக்கு என தனியாக கால்நடை மருத்துவர் பணியிடம் உள்ளதுபோல் டாப்சிலிப்புக்கு என தனியாக கால்நடை மருத்துவர் பணியிடம் இல்லை. ஏதாவது ஒரு கால்நடை மருத்துவர் எப்போதாவதுதான் டாப்சிலிப் வளர்ப்பு யானைகளின் உடல்நிலை குறித்து பரிசோதிக்கும் நிலை உள்ளது. 
முதுமலை புலிகள் காப்பகத்தில்...: நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் வளர்ப்பு யானைகளுக்கான புத்துணர்வு முகாம் சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com