புகழ்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது

புகழ்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று தொடங்கியது. சுமார் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
புகழ்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது

புகழ்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று தொடங்கியது. 

ஜல்லிக்கட்டை மதுரை ஆட்சியர் நடராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதையடுத்து வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.  

போட்டியில் 988 காளைகளும், 846 வீரர்களும் பங்கேற்கின்றனர். மாடுபிடி வீரர்கள் 9 பேருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. 9 வீரர்களும் மருத்துவ சோதனையில் தேர்வாகததாதல் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. 

முன்னதாக ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள், மருத்துவக்குழு பணி உள்ளிட்டவை குறித்து மத்திய கண்காணிப்புக்குழு உறுப்பினர் எஸ்.கே.மிட்டல், ஆட்சியர் நடராஜன் ஆய்வு நடத்தினர்.

ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி பாலமேட்டில் சுமார் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com