புதிய தொழில் - புத்தாக்கக் கொள்கை: தமிழக அரசு வெளியிட்டது

தமிழகத்தில் புதிய தொழில்கள் மற்றும் புத்தாக்கத்துக்கான கொள்கையை மாநில அரசு வெளியிட்டுள்ளது. இந்தக் கொள்கையின்படி, உலகளாவிய புத்தாக்க மையமாகவும், புதிய தொழில் முனைவோர்களுக்கான மிகச்சிறந்த
புதிய தொழில் - புத்தாக்கக் கொள்கை: தமிழக அரசு வெளியிட்டது

தமிழகத்தில் புதிய தொழில்கள் மற்றும் புத்தாக்கத்துக்கான கொள்கையை மாநில அரசு வெளியிட்டுள்ளது. இந்தக் கொள்கையின்படி, உலகளாவிய புத்தாக்க மையமாகவும், புதிய தொழில் முனைவோர்களுக்கான மிகச்சிறந்த தேர் விடமாகவும் தமிழகத்தை வரும் 2023-ஆம் ஆண்டுக்குள் உருவாக்குவதும் இலக்காகும்.

தமிழகத்தில்   ஒவ்வொரு தொழிலின் வளர்ச்சிக்கும் தனித்தனியாக கொள்கைகள் உருவாக்கப்பட்டு மாநில அரசால் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தொழில் கொள்கை, தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கொள்கை, உயிரி தொழில்நுட்பக் கொள்கை, ஆட்டோமொபைல் மற்றும் ஆட்டோ உதிரிபாகங்கள் கொள்கை, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் கொள்கை, சிறப்பு பொருளாதார மண்டலக் கொள்கை போன்ற பல்வேறு கொள்கைகள் தமிழக அரசால் இதுவரை வெளியிடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தொழில் துறையில் புதிய தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கவும், புதிய தொழில்கள் உருவாக்கத்தை உற்சாகப்படுத்தவும் புதிய தொழில் மற்றும் புத்தாக்கக் கொள்கையை தமிழக அரசு  சனிக்கிழமை வெளியிட்டது. 

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்ட இந்தக் கொள்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:-

தமிழகத்தை உலகளாவிய புத்தாக்க மையமாகவும், புதிய தொழில் முனைவோர்களுக்கான மிகச்சிறந்த தேர்விடமாகவும் 2023-ஆம் ஆண்டுக்குள் உருவாக்க வேண்டும் என்பது புதிய தொழில் மற்றும் புத்தாக்கக் கொள்கையின் தொலைநோக்கு இலக்கு ஆகும். தமிழகத்தில் துடிப்பான புதிய தொழில் சார்ந்த சூழலை உருவாக்குவதன் மூலம் குறைந்தபட்சம் 5 ஆயிரம் புதிய தொழில்களும், 10 உலகளாவிய உயர் வளர்ச்சி புதிய தொழில்கள் உள்பட பல்வேறு தொழில் அம்சங்கள் வளம்பெறும்.

கொள்கையின் குறிக்கோள்கள்:

தமிழகத்தில் குறைந்தபட்சம் 5 ஆயிரம் தொழில்நுட்பம் சார்ந்த புதிய தொழில்களை உருவாக்கிட தேவையான ஊக்கமும், ஆக்கமும் அளிப்பது புத்தாக்கக் கொள்கையின் குறிக்கோளாகும்.

மேலும், போக்குவரத்து மற்றும் தளவாடங்கள், மின் மற்றும் மின்னணு, சுகாதாரம், உயிரி தொழில்நுட்பம், விவசாயம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பருவநிலை மாற்றம், நிதிநுட்பம், ஜவுளித்துறை, தகவல் தொடர்பு, செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல், மென்பொருள் சார்ந்த சேவைப் பணிகள் போன்ற துறைகள் முன்னுரிமைத் துறைகளாக கண்டறியப்படும். தொழிலாளர் விதி, மாசுக்கட்டுப்பாடு மற்றும் கட்டட வரையறை, புதிய தொழிலுக்கான வரிகள் போன்ற நடைமுறையில் உள்ள கட்டுப்பாட்டுச் சுமைகள் குறைக்கப்படும். தொடக்க நிலையில் உள்ள புதிய தொழில்களுக்குத் தேவைப்படும் சிறப்பு உதவிகள் மூலமாக அவை தரமான புதிய தொழில்களாக வளர்க்க ஆதரவு அளிக்கப்படும்.

சென்னை, கோவை, திருச்சி-தஞ்சாவூர், சேலம்-ஈரோடு, திருநெல்வேலி போன்ற பகுதிகள் மாபெரும் புதிய தொழில் மையங்களாக முத்திரைப்படுத்தப்பட்டு அங்கு அதிக முதலீடுகள் பெற ஊக்குவிக்கப்படும் என்று புதிய தொழில்களுக்கான கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com