அரசு விழாக்களில் எம்.எல்.ஏ.க்களை அழைக்க வேண்டும்: பேரவைத் தலைவர்

அரசு விழாக்களில் கலந்துகொள்வதற்கு தொகுதி எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டுமென அதிகாரிகளை அறிவுறுத்தியிருப்பதாக பேரவைத் தலைவர் பி.தனபால் தெரிவித்தார்.
அரசு விழாக்களில் எம்.எல்.ஏ.க்களை அழைக்க வேண்டும்: பேரவைத் தலைவர்

அரசு விழாக்களில் கலந்துகொள்வதற்கு தொகுதி எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டுமென அதிகாரிகளை அறிவுறுத்தியிருப்பதாக பேரவைத் தலைவர் பி.தனபால் தெரிவித்தார்.

சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு இதுகுறித்த பிரச்னையை திமுக உறுப்பினர் ஆஸ்டின் எழுப்ப முயன்றார். இதற்கு பேரவைத் தலைவர் பி.தனபால் அனுமதி மறுத்தார்.

ஆஸ்டின் சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்னை எழுப்பினார். ஆஸ்டினின் தொகுதியில் நடந்த விழாவில் அவரது பெயரைப் போடாமல் தில்லி சிறப்புப் பிரதிநிதி பெயரைப் போட்டுள்ளதாக ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

இதைத் தொடர்ந்து நடந்த விவாதங்களில் அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் தங்கமணி உள்ளிட்டோர் பதிலளித்தனர். தங்களது தொகுதிகளில் நடந்த நிகழ்ச்சிகளில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகத் தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், சில மாவட்டங்களில் திட்டமிட்டு அழைப்பதில்லை எனவும், தொகுதிக்கு தொடர்பில்லாதவர்கள் அழைக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவரின் புகாரைத்  தொடர்ந்து பேசிய பேரவைத் தலைவர் பி.தனபால், சட்டப் பேரவைத் தொகுதிகளில் நடைபெறும் அரசு விழாக்களில் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் முறையான அழைப்பை அனுப்பி விழாக்களில் கலந்து கொள்ள ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமென அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருப்பதாகத் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com