அனைத்து தரப்பு மக்களுக்கும் வேண்டியது இடம்பெற்றிருக்கிறது: திமுக தேர்தல் அறிக்கை குறித்து காதர் மொகிதீன் 

தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் என்ன வேண்டுமோ அது இடம்பெற்றிருக்கிறது என்று திமுக தேர்தல் அறிக்கை குறித்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர்  காதர் மொகிதீன்..
அனைத்து தரப்பு மக்களுக்கும் வேண்டியது இடம்பெற்றிருக்கிறது: திமுக தேர்தல் அறிக்கை குறித்து காதர் மொகிதீன் 

சென்னை: தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் என்ன வேண்டுமோ அது இடம்பெற்றிருக்கிறது என்று திமுக தேர்தல் அறிக்கை குறித்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர்  காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா  அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை செவ்வாயன்று வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கலந்து கொண்டார். பின்னர்,  பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் மு.க.ஸ்டாலினை சந்தித்து தேர்தல் அறிக்கையை பிரமாதமாக தயாரித்து வெளியிட்டமைக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

பின்னர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தமிழகத்திற்கு என்னென்ன தேவையோ அனைத்தும் இடம் பெற்றிருக்கிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் உணர்வுகள், கனவுகள், விருப்பங்கள், எண்ணங்களையெல்லாம் ஒருமுகப்படுத்தி அருமையான தேர்தல் அறிக்கையாக அமைந்திருக்கிறது. இதை தயாரித்து வெளியிட்ட மு.க.ஸ்டாலின் மற்றும் தேர்தல் அறிக்கை தயாரித்த அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

தளபதி மு.க. ஸ்டாலின் கூறியது போல் தேர்தல் அறிக்கை கதாநாயகனாகவும், கதாநாயகியாகவும் இருந்து இந்த தேர்தல் அறிக்கை தேர்தலில் ஆளுமை செலுத்தும் வகையில் ஒளிர்கிறது. இந்த தேர்தல் அறிக்கை எல்லா தரப்பு மக்களின் விருப்பம் போல் அமைந்துள்ளது.

தி.மு.க. தேர்தல்அறிக்கை இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேர்தல் அறிக்கையாகவே அமைந்திருக்கிறது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனியாக தேர்தல் அறிக்கை வெளியிட வேண்டியதில்லை. தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தேர்தல்  அறிக்கையாகவே இது அமைந்திருக்கிறது.

தமிழகத்தில் உள்ள 6 கோடி வாக்காளர்கள் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றத்தை உருவாக்க நினைக்கிறார்கள். புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் கூட்டணி அமோக வெற்றி பெறும். இந்த தேர்தல் அறிக்கை தூண்டுகோலாகவும், கலங்கரை விளக்கமாகவும் ஒளிவீசும் என்பதில் சந்தேகமில்லை.இந்த தேர்தல் அறிக்கையில் சிறுபான்மை, பெரும்பான்மை மக்களுக்கும், தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் என்ன வேண்டுமோ அது இடம்பெற்றிருக்கிறது. தி.மு.க. தேர்தல் அறிக்கை தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களின் அனைத்து தேவைகளையும் உணர்ந்து தயாரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com