திமுக சார்பில் 3ஆவது முறையாக களம் காணும் ஆ.ராசா

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆ. ராசா (56). பிஎஸ்சி., எம்எல். படித்து வழக்குரைஞராகப் பணியாற்றி வந்தார்.
திமுக சார்பில் 3ஆவது முறையாக களம் காணும் ஆ.ராசா

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆ. ராசா (56). பிஎஸ்சி., எம்எல். படித்து வழக்குரைஞராகப் பணியாற்றி வந்தார்.

மனைவி பரமேஸ்வரி, மகள் மயூரி.  ஆ.ராசா, கடந்த 1996, 1999, 2004 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தோல்வியைத் தழுவினார். 

நீலகிரி மக்களவைத் தொகுதி தனித் தொகுதியாக அறிவிக்கப்பட்ட பின், கடந்த 2009 ஆம் ஆண்டில் இத் தொகுதியில் முதன்முறையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.  கடந்த 2014ம் ஆண்டு நீலகிரி தொகுதியில், அதிமுக வேட்பாளர் சி.கோபாலகிருஷ்ணனிடம் 1,04,940 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

தற்போது 3-ஆவது முறையாக நீலகிரி தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மத்திய அரசில் ஊரக தொழில் துறை இணை அமைச்சர் மற்றும் சுகாதாரத் துறை, சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை, தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளின் அமைச்சர் பதவிகளை வகித்துள்ளார்.  

2009 இல் மக்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட ஆ.ராசா, மீண்டும் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக சில மாதங்கள் பதவி வகித்தார். ஆனால், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு விவகாரத்தில், தனது பதவியை ராஜிநாமா செய்ய நேர்ந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com