முதல் நாளில் 22 பேர் வேட்பு மனு தாக்கல்

மக்களவை, 18 பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் போட்டியிட முதல் நாளான செவ்வாய்க்கிழமை 22 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்
முதல் நாளில் 22 பேர் வேட்பு மனு தாக்கல்


மக்களவை, 18 பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் போட்டியிட முதல் நாளான செவ்வாய்க்கிழமை 22 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அவர்கள் சுயேச்சைகள் மற்றும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள். 
இதுகுறித்து, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட தகவல்:-
மக்களவை, 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. மக்களவைத் தேர்தலில் போட்டியிட 20 பேரும், பேரவை இடைத் தேர்தலில் போட்டியிட 2 பேரும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். அதிகபட்சமாக வடசென்னை  மக்களவைத் தொகுதியில் நான்கு பேரும், தென் சென்னை  தொகுதியில் மூன்று பேரும் மனுதாக்கல் செய்தனர்.
சுயேச்சைகள் 13 பேரும், அகிம்ஷா சோசலிஸ்ட் கட்சி,  பீப்பில்ஸ் பார்டி ஆப் இந்தியா, ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் சார்பில் தலா ஒருவரும், சோசலிஸ்ட் யூனிட் சென்டர் ஆப் இந்தியா கட்சி சார்பில் நால்வர் என மொத்தம் 20 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். 
இடைத் தேர்தல் நடைபெறவுள்ள பெரம்பூர், திருவாரூர் தொகுதிகளில் தலா ஒருவர் வீதம் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சத்யபிரத சாகு தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com