வயலூரில் கிளிமூக்கு, விசிறி வால் சேவல்கள் கண்காட்சி

 திருச்சி மாவட்டம், வயலூரில் கிளிமூக்கு, விசிறிவால் உடைய சேவல்கள் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
வயலூரில் கிளிமூக்கு, விசிறி வால் சேவல்கள் கண்காட்சி

திருச்சி மாவட்டம், வயலூரில் கிளிமூக்கு, விசிறிவால் உடைய சேவல்கள் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
ராக்போர்ட் சேவல் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட இக்கண்காட்சியில் மாநிலம் முழுவதுமிருந்தும் 250 -க்கும் மேற்பட்ட சேவல்கள் பங்கேற்றன. சேவல்களின் கொண்டை, கிளி மூக்கு, நிறம், விசிறிவால் ஆகிய சேவல்கள்  சிறந்தவையாகத் தேர்வு செய்யப்பட்டன.
திண்டுக்கல் பிரபாகர், திருவெறும்பூர் சேகர், வடமதுரை செந்தில், உடுமலைப்பேட்டை பொன்னுவேல் ஆகியோர் நடுவர்களாக இருந்து, சிறந்த சேவல்களைத் தேர்வு செய்தனர். இதன் அடிப்படையில் சென்னை ஜஹாங்கீர், பழனி சோமப்பட்டி சின்னப்பன், நத்தம் காந்தி ஆகியோரது சேவல்கள் முதல் பரிசை வென்றன. இவர்களுக்கு எல்.இ.டி. தொலைக்காட்சி பரிசாக வழங்கப்பட்டது.
இரண்டாவது பரிசாக 7 பேருக்கு 2 கிராம் தங்கக்காசு,  மூன்றாவது பரிசாக 15 பேருக்கு ஒரு கிராம் தங்கக்காசு, நான்காவது பரிசாக 50 பேருக்கு பித்தளைக் குடம் பரிசாக வழங்கப்பட்டது.  கிளிமூக்கு,சிவப்புக் கொண்டை, விசிறிவால் இவை மூன்றும் ஒருங்கே அமைந்துள்ள சேவல் இனம். இவை அழிந்து  போகாமல் தடுக்கவும்,இச்சேவல்களை வளர்ப்பவர்களை  ஊக்கப்படுத்தும் வகையிலும் இக்கண்காட்சி நடத்தப்பட்டதாக ராக்போர்ட் சேவல் சங்கத் தலைவர் கே.லோகநாதன் தெரிவித்தார்.
ரூ. 2 லட்சம் வரை விற்பனையாகும் சேவல்கள்:  17 வயதிலிருந்தே கிளிமூக்கு சேவல்களை வளர்த்து வருகிறேன். பல்வேறு கண்காட்சிகளில் பங்கேற்ற எனது சேவல்கள் பரிசையும் பெற்றுள்ளன.
 இந்த சேவல்கள் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை விற்பனையாகும். விசிறி வால் சேவல் குறைந்தபட்சம் மூன்றரை அடி வரை வளரும். சேவல்களுக்கு  மழைக்காலத்தில் சளி பிடித்தால் காப்பாற்றுவது எளிது. 
ஆனால் வெயில் காலத்தில்  சளி பிடித்தால்  இந்த சேவல்களைக் காப்பாற்றுவதில் மிகவும்  கவனம் செலுத்த வேண்டும். உணவாக கம்பு, வேர்க்கடலை அதிக அளவில் பயன்படுகிறது.இவ்வகையான சேவல் குஞ்சுகள் ஒரு ஜோடி ரூ.20 ஆயிரம் முதல்  ரூ.50 ஆயிரம் வரை விற்பனையாகிறது.இச்சேவல்களை வளர்ப்போர் பிறரை உணவு கொடுக்கவோ, தொட்டுப் பார்க்கவோ அனுமதிக்கக்கூடாது என்றார். 
கண்காட்சியில் பங்கேற்ற தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தைச் சேர்ந்த விவசாயி சுப்பிரமணியன்.  ஏற்பாடுகளை ராக்போர்ட் சேவல் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com