ஏற்றுமதி சலுகைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்: மறைமுக வரி ஆலோசகர் வலியுறுத்தல்

பொருளையோ, சேவையையோ ஏற்றுமதி செய்யும்போது  கிடைக்கும் சலுகைகளை ஏற்றுமதியாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆந்திர வர்த்தக சபையின் மறைமுக வரி ஆலோசகர் வி.வி.சம்பத்குமார் தெரிவித்தார்.
ஏற்றுமதி சலுகைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்: மறைமுக வரி ஆலோசகர் வலியுறுத்தல்

பொருளையோ, சேவையையோ ஏற்றுமதி செய்யும்போது  கிடைக்கும் சலுகைகளை ஏற்றுமதியாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆந்திர வர்த்தக சபையின் மறைமுக வரி ஆலோசகர் வி.வி.சம்பத்குமார் தெரிவித்தார்.
ஆந்திர வர்த்தக சபை சார்பில், பொருளையோ, சேவையோ ஏற்றுமதி செய்யும்போது இருக்கும் சலுகைகள் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. 
நிகழ்ச்சியில் மறைமுக வரி தொடர்பாக ஆலோசகர் வி.வி.சம்பத்குமார் பேசியது: ஒரு பொருளை,சேவையை ஏற்றுமதி செய்யும் போது மத்திய அரசு அளிக்கும் சலுகை பலருக்கு தெரிவது இல்லை. இதை ஏற்றுமதியாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இதை சரியாக செய்தால் 3 சதவீதம்  முதல் 5 சதவீதம் வரை சலுகை பெற வாய்ப்பு உள்ளது. முறையான விண்ணப்பம் கொடுத்தால், 4 நாள்களில் அரசிடம் இருந்து பதில் வந்துவிடும். சரக்கு, சேவையை ஏற்றுமதி செய்யும்போது, திரும்பப் பெறும் தொகையை பெறுவதில் தாமதம் முன்பு இருந்தது.  இப்போது, விரைவில் பெறும் முறை செயல்படுத்தப்பட்டுள்ளது.  
உள்ளீடு வரைவு வரி திரும்பப் பெறுவதில் இருந்த  சிக்கல்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இருப்பினும், அதிகாரிகளைத் தொடர்பு கொண்டால் மட்டுமே உள்ளீடு வரைவு வரிக்கு  தீர்வு காணும் நிலை இருந்தது. இப்போது, அதிகாரிகளை தொடர்பு கொள்ளாமல், தீர்வு காண கணினியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த முறை ஜூனில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம், சேவையை துரிதமாகப் பெற முடியும். இதுதவிர,  மருத்துவ சுற்றுலாவில் சில விவரங்களை கொடுத்து வரி சலுகை பெற முடியும் என்றார் அவர்.
 ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பாக ஆலோசகர் ஆர்.ஆர்.பத்மநாபன்  பேசியது: பொருளையோ, சேவையோ ஏற்றுமதி செய்யும்போது, 3 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை பலன் பெற வாய்ப்பு உள்ளது. இது பற்றி பெரும்பாலானவர்களுக்கு தெரிவது இல்லை. வெளிநாடுகளில் இருந்து  இயந்திரத்தை இறக்குமதி செய்யும்போது, வரி செலுத்தாமல் பெறலாம். அந்த இயந்திரத்தின் மூலமாக உற்பத்தி செய்யும் பொருள்களை ஏற்றுமதி செய்து, வரியை  ஈடு செய்ய முடியும். இதுபோல பல சலுகைகளை அரசு வழங்கியுள்ளது என்றார் அவர்.
நிகழ்ச்சியில் சபையின்  பொது செயலாளர் ஆர்.விஜயலட்சுமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com