வீட்டுக்குள் அழுகிய நிலையில் தம்பதி சடலம்

சென்னையில் வீட்டுக்குள் அழுகிய நிலையில் கிடந்த தம்பதி சடலங்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சென்னையில் வீட்டுக்குள் அழுகிய நிலையில் கிடந்த தம்பதி சடலங்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
வடபழனி பஜனை கோயில் தெருவில் வசிப்பவர் முகமது யூசுப் (80). இவரது மனைவி விஜயா (65). யூசுப், அதே பகுதியில்  பெட்டிக் கடை நடத்தி வந்தார். இந்நிலையில் இவர்களின் வீடு கடந்த 3 நாள்களாக பூட்டியே கிடந்துள்ளது.
இந்நிலையில் அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இது குறித்து அப் பகுதி பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் அசோக்நகர்  போலீஸார்  வந்து, வீட்டின் கதவு பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு யூசுப்பும், விஜயாவும் அழுகிய நிலையில் இறந்து கிடந்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
 நோயாளிடம் திருட்டு: பெண் கைது
சென்னை சென்ட்ரலில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் காஞ்சிபுரம் நாகமுத்து மந்தைவெளி தெருவைச் சேர்ந்த ஆ.வசந்தா (40) சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த 10-ஆம் தேதி வசந்தா வைத்திருந்த ரூ.10 ஆயிரம், இரண்டு பவுன் தங்கநகைத் திருடு போனது. இது தொடர்பாக அரசு பொதுமருத்துவமனை போலீஸார் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில் ஜோலார்பேட்டை புதுமனை பால்வாடித் தெருவைச் சேர்ந்த அ.காமாட்சி (25) என்பவர் திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவர், சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
மனைவி தற்கொலை: பொறியாளர் கைது
சென்னை சிட்லப்பாக்கம் ஹஸ்தினாபுரம் அருகே உள்ள வெங்கட்ராமன் நகரைச் சேர்ந்தவர் கோ.அருண்குமார் (30), மென்பொருள் பொறியாளர். இவரது மனைவி திவ்யா (27). இவர்களுக்கு திருமணமாகி இரண்டரை மாதமாகிறது. இந்நிலையில் திவ்யா, கடந்த 22-ஆம் தேதி இரவு வீட்டின் சமையலறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து சிட்லப்பாக்கம் போலீஸார் நடத்திய விசாரணையில், கூடுதல் வரதட்சிணைக் கேட்டு, அருண்குமாரும், அவரது குடும்பத்தினரும் சித்ரவதை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அருண்குமாரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் அருண்குமாரின் தந்தை கோவிந்தன், தாய் ராதாம்மாள் ஆகியோரை தேடி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com