பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

மிகுந்த பலசாலியோடு சண்டையிடத்தான் வேண்டும் என்பது சட்டம் இல்லை. யானையோடு மனிதன் சண்டை போட்டால் மனிதன்தான் இறப்பான். 
பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

* தாறுமாறான எண்ணங்கள் கொள்ளுதல்; தானத்தினால் என்ன பயன்?, யக்ஞம் செய்தவர்கள் என்ன கண்டார்கள்?, புண்ணியமாவது, பாபமாவது, இந்த உலகத்திலும் தர்மம் ஒன்றுமில்லை, பரலோகமும் கிடையாது என்றெல்லாம் நினைப்பது தவறாகும்.
- பெளத்த மதம்

* நமது மனம் மதம் பிடித்த யானையைப் போன்று உலகப் பந்த பாசங்களினாலும் மரணத்தினால் ஏற்படும் அச்சத்தினாலும் அலைந்து திரிகிறது. அதற்கு அடைக்கலம் தருவதற்கு, குரு ஒருவர் தேவை. எல்லாவிதமான சம்பிரதாயங்களையும் மறந்து ராம நாமத்தை ஜபம் செய்.
- குரு நானக்

* ஒருவன் எத்தகைய கீழ்ஜாதியில் பிறந்தவனானாலும் சரி, அவனுக்குப் பக்தி ஒன்று மட்டும் இருந்தால் அந்த ஒரு காரணத்திற்காகவே நான் அவன் பாதத்தை ஆயிரம் தடவை வணங்குவேன்.
- ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர்

* நீரில் தோன்றும் நீர்குமிழியைப் போன்றது இளமைப் பருவம். 
- குமரகுருபரர் 

* உழைக்க உறுதி பூண்டவன் எதிலும் வெற்றி பெறுகிறான். பொது வாழ்க்கையிலும் தனி மனித வாழ்க்கையிலும் உழைப்பே உயர்வு தரும். உழைக்க எண்ணாமல் இருப்பவனை அந்தச் சோம்பல் நரகத்திற்குக் கொண்டுபோய்ச் சேர்க்கும்.
- வள்ளுவர்

* பாரததேசத்தில் ஒவ்வொருவருக்கும் தற்காலத்தில் நல்ல தியானம் உணவைக் காட்டிலும் இன்றியமையாதது. ஒரு தனி இடத்தில் போய் இருந்து, உயர்ந்த சிந்தனைகள், அமைதி கொடுக்கக் கூடிய சிந்தனைகள் ஆகியவற்றால் அறிவை நிரப்பிக்கொண்டு தியானம் செய்வதை ஒரு நாளேனும் தவறவிடாதே!
- பாரதியார்

* மிகுந்த பலசாலியோடு சண்டையிடத்தான் வேண்டும் என்பது சட்டம் இல்லை. யானையோடு மனிதன் சண்டை போட்டால் மனிதன்தான் இறப்பான். 
- ஹிதோபதேசம்

* தங்கத்திலிருந்து என்னவெல்லாமோ செய்கிறார்கள். ஒரு தரம் செய்ததை அழித்து மற்றொன்று செய்கிறார்கள். அதை உருக்கி அடித்து வேறாக மாற்றி வடிக்கிறார்கள். ஆக இப்படி என்ன செய்தாலும் தங்கம் தங்கம்தானே!

* தங்கத்திலிருந்து ஆனதாக இருந்தால் அதில் தங்கத்தன்மை என்றும் தங்கியிருக்கும். அது போல, பரம்பொருளின் அம்சமான அனைத்திலும் பரம்பொருளின் தன்மை பொதிந்து இருக்கத்தானே செய்யும்? 
-அபரோக்ஷôனுபூதி

* தூரத்தில் இருக்கும்போது ஆபத்துக்குப் பயப்படுவதும், ஆபத்து நெருங்கிவிட்டால் வீரத்துடன் போரில் இறங்குவதும் பெரியோர் இயல்பு.
- ஹிதோபதேசம்

* இளமை, பொருட்செல்வம், பதவி, அவிவேகம் ஆகிய இந்த நான்கிலும் எந்த ஒவ்வொன்றாலும் அழிவு ஏற்படும். அப்படி இருக்கும்போது எந்த மனிதனிடம் இந்த நான்கும் ஒன்று சேர்ந்திருக்கின்றனவோ, அவனுக்கு என்னதான் நடக்காது?
- சனக மகாமுனிவர்

* விடியற்காலையில் எழுந்ததும் அன்னையையும் பிதாவையும் நமஸ்கரிக்க வேண்டும். பிறகு குருவையும் மற்ற பெரியோர்களையும் வணங்க வேண்டும். 
இதனால் ஆயுள் விருத்தியாகிறது. 
- பீஷ்மர் 

* வெறுப்பைக் காட்டுவது அரக்கர் குணம், மன்னிப்பது மனித இயல்பு, அன்பு செலுத்துவது தெய்வப் பண்பு.
- பர்த்ருஹரி

* அறியும் திறன் உள்ளவர்களுக்கு அழுத்தமாகக் கூறுகிறேன்: பசு ருத்திரர்களின் தாய்; பசு தேவதைகளின் பெண்; அதிதி புத்திரர்களின் சகோதரி. அவள் இறவாத் தன்மைகொண்டவள். ஆதலின் வேண்டுகிறேன்; அவளைக் கொல்லாதீர்கள். குற்றமற்ற அவள் கொல்லத் 
தக்கவளல்ல. 
- ரிக் வேதம் 

* பொறுமையிலும் உயர்ந்த தவம் இல்லை; திருப்தியிலும் உயர்ந்த பெரிய இன்பம் இல்லை; ஆசையிலும் தீமை இல்லை; கருணையிலும் பெரிய அறம் இல்லை; மன்னிப்பதைவிட ஆற்றல் மிக்க ஆயுதம் இல்லை.
- குருநானக்

* உன் விடுதலைக்கு வழி மற்றவர்கள் வசத்தில் இல்லை; அது உன் வசமே இருக்கிறது.
- புத்தர் 

* தனக்குத் துன்பம் செய்பவர்களுக்கும் துன்பம் செய்யாதிருப்பதே சிறந்த அறம். - திருவள்ளுவர்

* புண்ணியம் இன்பத்தையும், பாவம் துன்பத்தையும் உண்டு பண்ணும்.
- நல்வழி 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com