இலங்கை நாடாளுமன்றத்தில் ரணில், ராஜபக்ச ஆதரவாளர்கள் இடையே கைகலப்பு

இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் ராஜபக்சவின் ஆதரவு எம்.பி.க்கள் இடையே  கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தில் ரணில், ராஜபக்ச ஆதரவாளர்கள் இடையே கைகலப்பு


கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் ராஜபக்சவின் ஆதரவு எம்.பி.க்கள் இடையே  கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கை நாடாளுமன்ற சபாநாயகரை முற்றுகையிட்டு எம்.பி.க்கள் ரகளையில் ஈடுபட்டதால் அவையில் பதற்றம் நிலவியது.

நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்க முடியாது என்று ராஜபக்ச பேசியதை எதிர்த்து ரணில் விக்ரமசிங்கே ஆதரவாளர்கள் கண்டித்தனர்.

இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சவுக்கு பெரும்பான்மை இல்லை என்பது நிரூபணமான நிலையில், அதனை ஏற்க ஆதரவு எம்பிக்கள் மறுத்து சபாநாயகர் கரு ஜெயசூர்யாவை சூழ்ந்து கொண்டு குரல் எழுப்பினர்.

அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் கைகலப்பாக மாறியது. நிலைமையை கட்டுப்படுத்த முடியாததால், சபாநாயகர் கரு ஜெயசூர்யா அவையில் இருந்து வெளியேறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com