மாலத்தீவு புதிய அதிபருடன் இணைந்து பணியாற்றுவதை இந்தியா எதிர்நோக்கி உள்ளது: பிரதமர் மோடி

இருநாட்டு உறவை வலுப்படுத்தும் வகையில், மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சோலியுடன் இணைந்து பணியாற்றுவதை இந்தியா எதிர்நோக்கி இருப்பதாக பிரதமர் மோடி இன்று (சனிக்கிழமை) தெரிவித்தார்.
மாலத்தீவு புதிய அதிபருடன் இணைந்து பணியாற்றுவதை இந்தியா எதிர்நோக்கி உள்ளது: பிரதமர் மோடி

இருநாட்டு உறவை வலுப்படுத்தும் வகையில், மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சோலியுடன் இணைந்து பணியாற்றுவதை இந்தியா எதிர்நோக்கி இருப்பதாக பிரதமர் மோடி இன்று (சனிக்கிழமை) தெரிவித்தார். 

கடந்த செப்டம்பர் 23-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில், எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சி வேட்பாளர் இப்ராஹிம் முகமது சோலி வலிமையான அப்துல்லா யாமீனை தோற்கடித்து வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து, புதிய அதிபராக இப்ராஹிம் முகமது இன்று பதவியேற்றார். இந்த பதவியேற்பு விழாவில் மாலத்தீவு முன்னாள் அதிபர்கள் முகமது நஷீத் மற்றும் அப்துல் கயூன், இந்திய பிரதமர் மோடி, இலங்கை முன்னாள் அதிபர் சந்த்ரிகா குமாரதுங்கா ஆகியோர் பங்கேற்றார். இந்த பதவியேற்பு விழாவின் போது பிரதமர் மோடி மாலத்தீவு தலைவர்கள் மற்றும் பிறநாட்டு தலைவர்களுடனும் உரையாடினார். 

மாலத்தீவு அதிபராக இப்ராஹிம் முகமது பொறுப்பேற்றதை அடுத்து, பிரதமர் மோடி அவருடனும் பேசினார். இந்த சந்திப்பின் போது, இந்தியப் பெருங்கடலில் அமைதியை நிலைநாட்டுவதற்கான முக்கியத்துவத்துக்கு இருவரும் ஒப்புக்கொண்டனர்.  

இதுதொடர்பாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் டிவிட்டர் பக்கத்தில் பதிவிடுகையில், 

"மாலத்தீவு அதிபர் சோலி அந்நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை: இந்தியாவுடன் இருக்கும் ஒப்பந்தங்களை பலப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்வோம். இந்தியப் பெருங்கடலில் நிலவி வரும் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை நிலைநாட்டுவதில் மாலத்தீவின் பங்கு இனிமேல் உயர்த்தி பிடிக்கப்படும்" என்றார். 

முன்னதாக, பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் அதிபராக பதவியேற்ற இப்ராஹிம் முகமதுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்ட பதிவில், "இருநாட்டு உறவை வலுப்படுத்தும் வகையில், மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சோலியுடன் இணைந்து பணியாற்றுவதை இந்தியா எதிர்நோக்கி உள்ளது" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com