இம்ரானுடன் கூட்டு சதி: ஊழல் தடுப்பு அமைப்பு மீது ஷாபாஸ் குற்றச்சாட்டு ஊழல் தடுப்பு அமைப்பு மீது ஷாபாஸ் குற்றச்சாட்டு

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் அந்த நாட்டு ஊழல் தடுப்பு அமைப்பு கூட்டணி அமைத்து சதி செய்வதாக
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் ஷாபாஸ் ஷெரீஃப்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் ஷாபாஸ் ஷெரீஃப்.


பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் அந்த நாட்டு ஊழல் தடுப்பு அமைப்பு கூட்டணி அமைத்து சதி செய்வதாக எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் சகோதரருமான ஷாபாஸ் ஷெரீஃப் குற்றம் சாட்டியுள்ளார்.
வீட்டு வசதித் திட்ட முறைகேடு வழக்கில் ஊழல் தடுப்பு அமைப்பால் கைது செய்யப்பட்டுள்ள ஷாபாஸ் ஷெரீஃபை, நாடாளுமன்றத்தில் பேச அனுமதிக்க வேண்டும் என்று அவரது தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதனை ஏற்ற அவைத் தலைவர் ஆசாத் காய்ùஸர், ஷாபாஸை நாடாளுமன்றத்துக்கு அழைத்து வருமாறு ஊழல் தடுப்பு அதிகாரிகளிடம் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, நாடாளுமன்றத்துக்கு புதன்கிழமை அழைத்து வரப்பட்ட ஷாபாஸ், அங்கு பேசியதாவது:
நான் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் எனக்கு ஆதரவளித்த எனது முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியினர் மட்டுமின்றி, பிலாவல் புட்டோவின் தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரதமர் இம்ரான் கானுடன் கூட்டு சேர்ந்துகொண்டு, ஊழல் தடுப்பு ஆணையம் தவறான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பாகிஸ்தான் வரலாற்றில், எந்தக் குற்றச்சாட்டையும் முறைப்படி பதிவு செய்யாமல் எதிர்க்கட்சித் தலைவர் கைது செய்து சிறையில் அடைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும் என்றார் ஷாபாஸ் ஷெரீஃப்.
மூன்று முறை பஞ்சாப் மாகாண முதல்வராக இருந்த ஷாபாஸ் ஷெரீஃப், தனது பதவிக் காலத்தின்போது குடியிருப்பு திட்டங்களையும், குடிநீர் வசதி திட்டங்களையும் அறிமுகப்படுத்தினார்.
அந்த திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை அவர் விதிமுறைகளை மீறி வழங்கியதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இதன் காரணமாக, வீட்டு வசதித் திட்டத்தில் ரூ.1,400 கோடியும், குடிநீர் திட்டத்தில் ரூ.400 கோடியும் முறைகேடு நடந்ததாகக் கூறப்படுகிறது.
இது முறைகேட்டில், ஷாபாஸின் மருமகன் அலி இம்ரான் யூசுஃபுக்கும் தொடர்புள்ளதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
இந்தச் சூழலில், குடியிருப்பு திட்ட முறைகேடு வழக்கு தொடர்பாக ஷாபாஸ் ஷெரீஃபை ஊழல் தடுப்பு அதிகாரிகள் கைது செய்தனர். அவரை 10 நாள் காவலில் வைத்து விசாரிக்க ஊழல் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், ஷாபாஸ் ஷெரீஃபை அந்த நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்திய அதிகாரிகள், விசாரணைக்காக அவரது சிறைக் காவலை மேலும் நீட்டிக்க உத்தரவிட்டனர்.
அதையடுத்து, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஷாபாஸை மேலும் 14 நாள்களுக்கு காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டனர்.
ஏற்கெனவே, பனாமா ஆவண ஊழல் வழக்கில் ஷாபாஸ் ஷெரீஃபின் சகோதரரும், முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீஃபுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com