பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஆப்கானிஸ்தானில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது

தலிபான் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் மத்தியில் ஆப்கானிஸ்தானில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (சனிக்கிழமை) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. 
பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஆப்கானிஸ்தானில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது

தலிபான் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் மத்தியில் ஆப்கானிஸ்தானில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (சனிக்கிழமை) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. 

ஆப்கானிஸ்தானில் 249 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு அந்நாடு முழுவதும் 21,000 வாக்குச்சாவடிகளில் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கானி காலையிலேயே தனது வாக்கை பதவிட்டார். 

இதைத்தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் நடைபெறும் தேர்தலுக்காக அந்நாட்டு மக்களுக்கு அதிபர் கானி தனது வாழ்த்துகளை தெரிவித்தார். பாதுகாப்பு படையினர், குறிப்பாக ஆப்கானிஸ்தானின் தொலைதூர பகுதிகளுக்கு வாக்குச்சீட்டுகளை கொண்டு சேர்த்த விமானப் படை வீரர்களை அவர் வெகுவாக பாராட்டினார். மேலும், இந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தான் நாடாளுமன்றத்துக்குச் சென்று மக்களுக்கு சேவை செய்வார்கள் மற்றும் அவர்கள் தான் சட்டத்தை உறுதிபடுத்துவார்கள் என்பதையும் அவர் மக்களுக்கு நினைவுபடுத்தினார்.    

ஆப்கானிஸ்தானில் மொத்தம் 88 லட்ச வாக்காளர்களை தேர்தல் ஆணையம் பதிவுசெய்துள்ளது. இதில், 50 லட்ச மக்கள் வாக்குப்பதிவு செய்தால் அதை வெற்றியாக கருத முடியும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர். 

தலிபான் அச்சுறுத்தல்:

தேர்தல் வாக்குப்பதிவுக்காக பள்ளிகளை அனுமதிக்கக் கூடாது என்றும், வாக்குப்பதிவில் இருந்து ஆசிரியர்களும், குழந்தைகளும் விலகியே இருங்கள் என்றும் தலிபான் பயங்கரவாதிகள் அச்சுறுத்தியிருந்தனர். இதனால், நாடு முழுவதும் 50,000 பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

ஏற்கனவே, தேர்தல் பிரசாரங்களின் போது 3 முறை நடைபெற்ற குண்டுவெடிப்பு தாக்குதலில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதுமட்டுமின்றி, மொத்தமுள்ள 400 மாவட்டங்களுள் 11 மாவட்டங்களில் போதிய பாதுகாப்பு இல்லாத காரணத்தால் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இருப்பினும், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆப்கன் மக்கள் தங்களது வாக்குப்பதிவு மூலம் அந்நாட்டு எதிர்காலத்தை தீர்மானிப்பர் என்று அந்நாட்டு அதிகாரிகள் எதிர்பார்கின்றனர். 

இதன் முடிவுகள் நவம்பர் மாதம் வெளியிடப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com