இந்தியாவுடனான உறவில் பாதிப்பு? பிரான்ஸ் அச்சம்

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹொலாந்த் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்தால் இந்தியாவுடனான உறவில் பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் எழுந்ததாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹொலாந்த் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்தால் இந்தியாவுடனான உறவில் பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் எழுந்ததாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.
 பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36 ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்க மத்திய பாஜக அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது. முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலும் இத்தகைய ஒப்பந்தம் மேற்கொண்டபோதிலும், அதை விடுத்து புதிய விலையில் போர் விமானங்களை கொள்முதல் செய்ய பாஜக அரசு முடிவு செய்தது.
 இந்நிலையில் தற்போதைய போர் விமானக் கொள்முதல் நடவடிக்கைகளில் உரிய விதிகள் பின்பற்றப்படவில்லை என்றும் அதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனிடையே, ரஃபேல் விமானங்களின் உதிரி பாகங்கள் தயாரிப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
 இது பல்வேறு விமர்சனங்களுக்கு வித்திட்டது. பிரதமருக்கு நெருக்கமான தொழிலதிபர்களில் ஒருவரான அனில் அம்பானிக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் லாபம் கிடைப்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
 இந்நிலையில், பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹொலாந்த், பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளுமாறு இந்தியாதான் பரிந்துரைத்தது' என்றார்.
 இந்த விவகாரம் இந்திய அரசியல் அரங்கில் கடும் புயலை கிளப்பியது.
 இந்தச் சூழலில், பிரான்ஸ் வெளியுறவுத் துறை இணையமைச்சர் ஜீன் பாப்டிஸ்ட் லெமொய்ன் பாரீஸில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
 வெளிநாடுகளைப் பற்றி அவசியமற்ற கருத்தைத் தெரிவிப்பது எந்த வகையிலும் பயனளிக்காது. பதவியில் இல்லாத நபரின் சர்ச்சைக்குரிய பேச்சால் இந்தியா- பிரான்ஸ் உறவில் சிக்கல் எழுமோ என்ற அச்சம் எங்களுக்கு ஏற்பட்டது என்றார் அவர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com