பிரேசில் கோழி இறைச்சி இறக்குமதிக்கு பொருள் குவிப்பு தடுப்பு வரி: சீனா

பிரேசில் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கோழி இறைச்சி இறக்குமதிக்கு சீனா பொருள் குவிப்பு தடுப்பு வரியை விதித்துள்ளது.
பிரேசில் கோழி இறைச்சி இறக்குமதிக்கு பொருள் குவிப்பு தடுப்பு வரி: சீனா


பிரேசில் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கோழி இறைச்சி இறக்குமதிக்கு சீனா பொருள் குவிப்பு தடுப்பு வரியை விதித்துள்ளது.
இதுகுறித்து சீன வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: பிரேசில் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கோழி இறைச்சியால் உள்நாட்டு பிராய்லர் வர்த்தகம் கணிசமான பாதிப்பை சந்தித்துள்ளது. இதையடுத்து, உள்நாட்டு பிராய்லர் தொழிலை பாதுகாக்கும் வகையில் பிரேசில் நாட்டு கோழி இறைச்சி மீது பொருள் குவிப்பு தடுப்பு வரி விதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. 
அதன்படி தற்போது 17.8 சதவீதமாக உள்ள பிரேசில் கோழி இறைச்சி மீதான வரியை 32.4 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 17-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ள இந்த வரி  உயர்வு ஐந்தாண்டுகளுக்கு அமலில் இருக்கும்.
ஒப்புக் கொள்ளப்பட்ட குறைந்தபட்ச விலையைக் காட்டிலும் குறைவான விலையில் இறக்குமதி செய்யமாட்டோம் என்று உறுதியளித்துள்ள சில நிறுவனங்களுக்கு மட்டும் இந்த வரி விதிப்பிலிருந்து விலக்களிக்கப்படும் என்று சீன வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
சீனாவில் பதப்படுத்தப்பட்ட கோழி இறைச்சி விற்பனையில் பிரேசில் பங்களிப்பு மிக முக்கியமானதாகும். 2017-இல் மொத்த கோழி இறைச்சி இறக்குமதியில் பிரேசிலின் பங்களிப்பு 85 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் வேளாண் மற்றும் கோழி வளர்ப்பு சந்தையில் அமெரிக்காவுக்கு முக்கியத்துவம் தரப்படவேண்டும் என்று தற்போதைய பேச்சுவார்த்தையின்போது வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில் சீனா பிரேசில் கோழி இறைச்சி இறக்குமதிக்கு வரி விதிப்பை அதிகரித்துள்ளது கவனிக்கத்தக்கது. அமெரிக்காவில் பறவை காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து அந்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கோழிப் பண்ணை பொருள்களுக்கு சீனா  கடந்த 2015-ஆம் ஆண்டிலிருந்து  தடைவிதித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com