பொருளாதாரப் போர் தொடுத்துள்ளது அமெரிக்கா: ஈரான் தாக்கு

அமெரிக்கா பொருளாதார ரீதியிலான  போரை தொடுத்திருப்பதாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.
பொருளாதாரப் போர் தொடுத்துள்ளது அமெரிக்கா: ஈரான் தாக்கு


அமெரிக்கா பொருளாதார ரீதியிலான  போரை தொடுத்திருப்பதாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.
ஈரானின் பந்தார் அப்பாஸ் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை அந்நாட்டு அதிபர் ஹசன் ரௌஹானி திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
ஈரான் மீது அமெரிக்கா, பொருளாதார ரீதியிலான போரைத் தொடுத்துள்ளது. ராணுவம்  நடத்தும் போரைக் காட்டிலும், பொருளாதார ரீதியிலான போர் மிகவும் கடினமானதாகும்.
ஈரான் மீது பல்வேறு தடைகளை  விதித்துள்ளது. இதையும் மீறி, இந்த ஆலை பணி முடிந்து திறக்கப்பட்டிருப்பதை வரவேற்கிறேன் என்றார் ஹசன் ரௌஹானி.
பந்தார் அப்பாஸில் உள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை கட்டும் பணி கடந்த 2006ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்த ஆலையில் நாளொன்றுக்கு 4 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை சுத்திகரிப்பு செய்ய முடியும். இது ஈரானின் மொத்த எண்ணெய் சுத்திகரிப்பில் 20 சதவீதம் ஆகும். ஈரான் அணுஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதாக அமெரிக்காவும், மேலைநாடுகளும் ஆரம்பம் முதல் குற்றம்சாட்டி வந்தன. மேலும், ஈரான் மீது அமெரிக்கா உள்ளிட்ட மேலைநாடுகள் பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்தன.
இருப்பினும், ஈரான் மற்றும் மேலைநாடுகள் இடையே சுமூகபேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதன்முடிவில், இருதரப்புக்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம்  கையெழுத்தானது. அதன்படி, தனது அணுஆயுத நடவடிக்கைகளை நிறுத்துவதாக ஈரான்  அறிவித்தது.
அதேநேரத்தில், அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் இருந்து தங்கள் நாடு விலகுவதாக அறிவித்தார். அதேபோல், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை சீனா, இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகள் உடனடியாக நிறுத்த வேண்டும், அல்லது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் எனவும் எச்சரித்தார். ஈரான் மீதும் புதிதாக பொருளாதார தடைகளை டிரம்ப் விதித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com