வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு: ஷாபாஸ் ஷெரீஃப் குற்றவாளி என அறிவித்தது லாகூர் நீதிமன்றம்

வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு செய்த வழக்கில், எதிர்க்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சித் தலைவர் ஷாபாஸ் ஷெரீஃப்பை குற்றவாளி என லாகூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு: ஷாபாஸ் ஷெரீஃப் குற்றவாளி என அறிவித்தது லாகூர் நீதிமன்றம்


வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு செய்த வழக்கில், எதிர்க்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சித் தலைவர் ஷாபாஸ் ஷெரீஃப்பை குற்றவாளி என லாகூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ரூ.1,400 கோடி மதிப்பிலான ஆஷியானா வீடு வழங்கும் திட்டம் கடந்த 2010-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 2013-ஆம் ஆண்டு அந்த மாகாணத்தின் முதல்வராகப் பொறுப்பேற்ற ஷாபாஸ் ஷெரீஃப், இத்திட்டத்துக்கான ஒப்பந்தத்தை வேறொரு நிறுவனத்துக்கு மாற்றி உத்தரவிட்டார்.
இதில், ஷாபாஸ் முறைகேட்டில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை அவர் தொடர்ந்து மறுத்து வந்தார். இதையடுத்து, அந்நாட்டின் ஊழல் தடுப்பு அமைப்பு ஷாபாஸிடம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விசாரணை மேற்கொண்டது. இது தொடர்பான வழக்கு, லாகூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற்றபோது, ஊழல் தடுப்பு அமைப்பு என் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது. எனது அதிகாரத்தை ஒருபோதும் நான் தவறாகப் பயன்படுத்தியதில்லை. நாட்டு நலனைக் காக்கவே ஒப்பந்தத்தை மாற்றி உத்தரவிட்டேன். பொய்யான குற்றச்சாட்டை இந்த நீதிமன்றம் விசாரித்து வருகிறது என்று ஷாபாஸ் தெரிவித்தார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், குற்றச்சாட்டு பொய்யா? இல்லையா? என்பது விசாரணையில் தெரிந்துவிடும் என்று தெரிவித்தனர். மேலும், இந்த வழக்கில் ஷாபாஸ் ஷெரீஃப் குற்றவாளி என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
முன்னதாக உடல்நிலையைக் காரணம் காட்டி, தீர்ப்பை ஒத்திவைக்க முறையிட்ட ஷாபாஸ் ஷெரீஃப்பின் கோரிக்கையை நீதிபதிகள் 
நிராகரித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com