டிரம்ப் - கிம் சந்திப்பு குறித்து வாஷிங்டனில் பேச்சுவார்த்தை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் ஆகியோரிடையிலான 2-ஆவது சந்திப்பு குறித்து


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் ஆகியோரிடையிலான 2-ஆவது சந்திப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்த வட கொரிய உளவு அமைப்பின் தலைவர் கிம் யோங்-சோல் அமெரிக்கா வருகிறார்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுவதாவது: 
வட கொரிய உளவு அமைப்பின் தலைவர் கிம் யாங்-சோல் வெள்ளிக்கிழமை (இந்திய நேரப்படி ஜன.18) அமெரிக்கா வருகிறார்.
தலைநகர் வாஷிங்டனிலுள்ள வெள்ளை மாளிகைக்கு வருகை தரும் அவர், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பேயோவைச் சந்தித்துப் பேசவிருக்கிறார்.
அப்போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும், வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன்னுக்கும் இடையிலான அடுத்த நேரடி பேச்சுவார்த்தை குறித்து இருவரும் விவாதிப்பார்கள்.
பாம்பேயோ மட்டுமன்றி, அமெரிக்க அதிபர் டிரம்ப்பை யும் கிம் யோங்-சோல் சந்தித்துப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com