சிலி கடல்பகுதியில் பயங்கர நிலநடுக்கம்

சிலி நாட்டின் வடக்கு கடல்பகுதியில் அமைந்துள்ள கோகும்பா பகுதியில் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை இரவு 10:32 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 
சிலி கடல்பகுதியில் பயங்கர நிலநடுக்கம்

சிலி நாட்டின் வடக்கு கடல்பகுதியில் அமைந்துள்ள கோகும்பா பகுதியில் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை இரவு 10:32 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.8-ஆகப் பதிவானது.

கோகும்பா பகுதியின் கிழக்கு மற்றும் தென்கிழக்குப் பகுதியிலிருந்து 15.6 கி.மீ. தூரத்திலும், 53 கி.மீ. ஆழத்திலும் இந்த நிலடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சுனாமி ஆபத்து இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 2010-ஆம் ஆண்டு சிலி நாட்டில் 8.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சுனாமி தாக்கியதில் 525 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com