தொழில்முனைவோர்களை ஊக்குவித்த இந்திய}நேபாள அரசுகள்

இந்தியா}நேபாள தொழில்முனைவோர்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டில் சனிக்கிழமை ஒரு நாள் மாநாடு நடைபெற்றது.

இந்தியா}நேபாள தொழில்முனைவோர்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டில் சனிக்கிழமை ஒரு நாள் மாநாடு நடைபெற்றது.
காத்மாண்டில் அந்நாட்டு தொழிலதிபர்கள் ஆலோசனை மையத்துடன் இணைந்து இந்தியத் தூதரகம் ஏற்பாடு செய்த மாநாட்டில், 400 இந்தியத் தொழில்முனைவோர்கள், நேபாளத் தொழில்முனைவோர்கள், முதலீட்டாளர்கள், இருநாடுகளைச் சேர்ந்த அரசு உயரதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
நேபாளத்துக்கான இந்தியத் தூதர் மஞ்சீவ் சிங் புரி பேசுகையில், "நேபாளம் செழிப்புடன் இருக்க கோடிக்கணக்கான இளைஞர்கள் முக்கியப் பங்காற்றுகிறார்கள்' என்றார்.
இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தரப்பில் 6 தொழில் நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன. நேபாளத்திலிருந்து ஐந்தும், இந்தியாவிலிருந்து ஒரு நிறுவனமும் தேர்வு செய்யப்பட்டன. அவர்களின் தொழில் யோசனை ஏற்றுக் கொள்ளப்பட்டு, அந்த நிறுவனங்களில் முதலீடு செய்யுமாறு விழா ஏற்பாட்டாளர்கள் முதலீட்டாளர்களிடம் கோரிக்கை விடுத்தனர்.
புதுமையான சிந்தனைகளால் நேபாளத்தை இளைஞர்கள் அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டு செல்வார்கள் என்று இந்த மாநாட்டில் கலந்துகொண்ட நேபாளப் பிரதமருக்கான தலைமை ஆலோசகர் விஷ்ணு ரிமால் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com