உலகின் மிக வயதான மனிதர் மரணம்

உலகின் மிக வயதான மனிதர் என்ற கின்னஸ் சாதனை படைத்த ஜப்பானின் சாúஸா நொனாகா, ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகின் மிக வயதான மனிதர் என்ற கின்னஸ் சாதனை படைத்த ஜப்பானின் சாúஸா நொனாகா, ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
113 வயதாகும் நொனாகா, கடந்த 1905-ஆம் ஆண்டு பிறந்தவர். ஜப்பானின் ஹாக்கய்டோ தீவைச் சேர்ந்த அவர், உலகின் மிக வயதான மனிதராக கடந்த ஆண்டு ஏப்ரலில் கின்னஸ் அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டார். 
அவரது கொள்ளுப் பேத்தி யுகோ நொனாகோ கூறுகையில், மசாúஸா நொனாகா தூங்கிக் கொண்டிருந்தபோது அவரது உயிர் அமைதியாகப் பிரிந்ததாகத் தெரிவித்தார். மிக வயதானவர்கள் அதிகம் நிறைந்த ஜப்பானில், கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் மாத நிலவரப்படி நூறு வயதைக் கடந்த 69,785 பேர் வசிப்பதாகவும், அவர்களில் 90 சதவீதம் பேர் பெண்கள் எனவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com