உடல் நலக் குறைவு: நவாஸ் ஷெரீஃப் மருத்​து​வ​ம​னை​யில் அனு​மதி

​ஊ​ழல் வழக்​கில் சிறைத் தண்​டனை அனு​ப​வித்து வரும் பாகிஸ்​தான் முன்​னாள் பிர​த​மர் நவாஸ் ஷெரீஃப், உடல் நலக்
உடல் நலக் குறைவு: நவாஸ் ஷெரீஃப் மருத்​து​வ​ம​னை​யில் அனு​மதி


​ஊ​ழல் வழக்​கில் சிறைத் தண்​டனை அனு​ப​வித்து வரும் பாகிஸ்​தான் முன்​னாள் பிர​த​மர் நவாஸ் ஷெரீஃப், உடல் நலக் குறைவு கார​ண​மாக மருத்​து​வ​ம​னை​யில் செவ்​வாய்க்​கி​ழமை அனு​ம​திக்​கப்​பட்​டார்.
இது​கு​றித்து, அவ​ரது மகள் மரி​யம் நவாஸ் செய்​தி​யா​ளர்​க​ளி​டம் கூறி​ய​தா​வது:
எனது தந்தை நவாஸ் ஷெரீஃ​பின் உடல் நிலை மிக​வும் மோச​மாக உள்​ளது. அவர் தற்​போது லாகூ​ரி​லுள்ள பஞ்​சாப் இரு​தய நோய் மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​ம​னை​யில் (பிஐசி) அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளார்.
அவ​ரைக் காண அந்த மருத்​து​வ​ம​னைக்​குச் செல்ல நான் விரும்​பி​னேன். ஆனால், பாது​காப்பு கார​ணங்​க​ளுக்​காக அங்கு வர வேண்​டாம் என்று எனது தந்தை மறுத்​து​விட்​டார்.
அவ​ரது உடல் நிலை குறித்த மருத்​துவ அறிக்கை எங்​க​ளுக்கு தரப்​ப​ட​வில்லை. இது​கு​றித்து சிறைத் துறை அதி​கா​ரி​க​ளி​ட​மும், பஞ்​சாப் மாகாண உள்​துறை அமைச்​ச​கத்​தி​ட​மும் பல முறை கோரிக்கை விடுத்​தும் எந்​தப் பல​னு​மில்லை என்​றார் அவர்.
பனாமா ஆவண முறை​கே​டு​கள் தொடர்​பாக, லண்​டன் அவென்
ஃ​பீல்டு ஊழல் வழக்கு, அல்-​அ​ஜீஸா உருக்​காலை வழக்கு, ஃபிளாக்​ஷிப் இன்​வெஸ்ட்​மென்ட் நிறு​வன வழக்கு ஆகிய மூன்று வழக்​கு​கள் முன்​னாள் பிர​த​மர் நவாஸ் ஷெரீஃப் மீது பதிவு செய்​யப்​பட்​டன.
அவற்​றில், அவென்ஃ​பீல்டு ஊழல் வழக்​கில் அவ​ருக்கு 10 ஆண்​டு​கள் சிறைத் தண்​டனை விதிக்​கப்​பட்டு, அவர் சிறை​யில் அடைக்​கப்​பட்​ட​னர்.
இதன் கார​ண​மாக, கடந்த கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடை​பெற்ற தேர்​த​லில் நவாஸ் ஷெரீஃப் பங்​கேற்க முடி​யாத நிலை ஏற்​பட்​டது.
இந்த நிலை​யில், அவென்ஃ​பீல்டு ஊழல் வழக்​கில் அவ​ருக்கு விதிக்​கப்​பட்​டி​ருந்த சிறைத் தண்​ட​னையை உச்​ச​நீ​தி​மன்​றம் கடந்த செப்​டம்​பர் மாதம் நிறுத்​தி​வைத்​தது. அதை​ய​டுத்து, அவர் ஜாமீ​னில் விடு​விக்​கப்​பட்​டார்.
இந்​தச் சூழ​லில், நவாஸ் மீது ஊழல் தடுப்பு நீதி​மன்​றத்​தில் நடை​பெற்று வந்த அல்-​அ​ஜீஸா முறை​கேடு வழக்​கில் அவ​ருக்கு 7 ஆண்​டு​கள் சிறைத் தண்​டனை விதித்து கடந்த மாதம் 24-ஆம் தேதி தீர்ப்​ப​ளிக்​கப்​பட்​டது.
அதை​ய​டுத்து நவாஸ் ஷெரீஃப் உட​ன​டி​யாக கைது செய்​யப்​பட்டு, லாகூ​ரி​லுள்ள கோட் லக்​பத் சிறை​யில் அடைக்​கப்​பட்​டார்.
இந்த நிலை​யில், சிறைச் சாலை​யில் அவ​ரைப் பரி​சோ​தித்த மருத்​து​வக் குழு வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், நவாஸ் ஷெரீஃ​பின் உடல் நிலை​யில் பல குறை​பா​டு​கள் உள்​ள​தா​கக் குறிப்​பி​டப்​பட்​டுள்​ளது.
10 ஆண்​டு​க​ளுக்​கும் மேலாக நீரி​ழிவு, உயர் ரத்த அழுத்​தம் மற்​றும் இரு​தய நோய்​க​ளால் பாதிக்​கப்​பட்​டுள்ள அவ​ருக்கு, கைக​ளில் வலி, இரவு நேரங்​க​ளில் கால்​கள் மரத்​துப் போவது ஆகிய பிரச்​னை​கள் உள்​ளன.
மேலும், ரத்​தக்​கட்டு ஏற்​ப​டு​வ​தைத் தடுப்​ப​தற்​கான மருந்​து​கள், நோய் எதிர்ப்பு மருந்​து​கள் உள்​ளிட்ட சக்தி வாய்ந்த மருந்​து​கள் அவ​ருக்கு அளிக்​கப்​பட்டு வரு​கின்​றன என்று அந்த அறிக்​கை​யில் குறிப்​பி​டப்​பட்​டி​ருந்​தது.
இந்த நிலை​யில், அவர் தற்​போது பிஐசி மருத்​து​வ​ம​னை​யில் அ​னு​ம​திக்​கப்​பட்​டுள்​ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com