இன அரசியல்-17: செவ்விந்திய, ஆஸ்திரேலிய இனப் படுகொலைகள்

இன அரசியல்-17: செவ்விந்திய, ஆஸ்திரேலிய இனப் படுகொலைகள்

செவ்விந்திய இனப்படுகொலை

உலகில் வெற்றிக்கரமாக நடத்தப்பட்ட, ஒரு இனத்தை அடக்கி ஒடுக்கிய முதல் இனப்படுகொலை ‘செவ்விந்தியர் இனப்படுகொலை’ எனலாம். அமெரிக்க மண்ணின் உண்மையான சொந்தக்காரர்கள் செவ்விந்தியர்கள் தான். பல்லாயிரம் வருடங்களுக்கு முன் அலாஸ்காவும், ஆசியாக் கண்டமும் ஒரே நிலப்பரப்பாக இருக்கும் போது ஆசியாவிலிருந்து இடம் பெயர்ந்து இந்த மக்கள் அலாஸ்கா வழியாக அமெரிக்கா சென்று அமெரிக்க முழுவதும் பரவி ‘ செவ்விந்தியர்கள்’ இனம் உருவானது என்று ஒரு ஆராய்ச்சி குறிப்பு சொல்கிறது.

இன்னொரு குறிப்பில், மெக்சிகோவில் இருந்த இந்திய வம்சாவளிகள் என்று கூறுகிறார்கள். இந்தியாவை கண்டு பிடிக்க கிளம்பிய கொலம்பஸ் அமெரிக்காவை கண்டு பிடித்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த மண்ணின் சொந்தக்காரர்களிடம் கடுமையாக மோதி, சண்டையிட்டு கொடூரமான தாக்குதல் நடத்தினார். தான் கைது செய்த மண்ணின் மைந்தர்களை ‘இந்தியர்கள்’ என்றும், இரத்தக்கரையுடன் காணப்பட்டதால் இவர்களுக்கு ‘செவ்விந்தியர்கள்’ என்று பெயர் வைத்தார் என்று  சொல்லப்படுகிறது.  எப்படியானாலும் இவர்கள் தான் ‘அமெரிக்காவின் பூர்வ குடிமக்கள் ‘ என்பதில் மாற்று கருத்து இல்லை.

இவர்கள் பேசும் மொழிக்கு இன்று வரை பெயரிடப்படவில்லை. ஆனால், செவ்விந்தியர்களுக்கு, இந்தியர்களுக்கு ஒரு ஒற்றுமை இருக்கத்தான் செய்தது. இரண்டு நாட்டு மக்களுமே சுதந்திரமாக திரிந்தார்கள், பிரிட்டன் கண்கள் படும் வரை. ஆனால், நம்மைப் போல் உள் நாட்டுக்காரர்களை காட்டி கொடுத்ததும், பேராசை பிடித்து வெள்ளையனை வணிகம் செய்ய அனுமதித்ததும், அவர்களிடம் சரணடையவும் இல்லை.

மண்ணாசை பிடித்து பிரிட்டன் அமெரிக்காவை முற்றுகையிட்ட போது செவ்விந்தியர்கள் அவர்களை எதிர்த்து கடுமையாக தாக்கினார்கள். பிரிட்டன் அவர்களை அடக்கி, ஒடுக்கி நடத்த முடியவில்லை. முரட்டு தனமாக அவர்கள் தாக்குதல் இருந்தது. கல்லும், விஷ அம்பு தாக்குதலை சமாளிக்க பிரிட்டன் எதிர் தாக்குதல் நடத்தியது. கடும் ஆயுத பலம் கொண்ட பிரிட்டனை எதிர்த்து பூர்வ குடியான செவ்விந்தியர்கள் யுத்தமிட முடியவில்லை. பிரிட்டனின் துப்பாக்கிக்கு லட்சக் கணக்கான செவ்விந்தியர்களை இறையானார்கள். ஏராளமான மரணங்கள் ஏற்பட்டன.

ரத்த நிறத்தில் மாறிய இயற்கை வளங்கள். குழந்தைகள், பெண்கள் என யாரும் பாகுபடில்லை. பல லட்ச உயிர்களில் மேல் தான் பிரிட்டன் தனது அமெரிக்கா மீது சாம்ராஜ்ஜியத்துக்கான உயில் எழுதியது. பலர் இறந்த பிறகு மிச்சம் மீதி இருந்தவர்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள வடப்பகுதியில் கொஞ்சமும், தென் பகுதியில் கொஞ்சமும் பதுங்கி இருந்து வாழ்ந்தார்கள்.

பல வருடங்களாக பிரிட்டன் ஆட்சிக்கு அஞ்சி ஒதுங்கி இருந்து தங்கள் வாழ்க்கை நடத்தினர். நகர வாழ்க்கையில் இருந்து தங்களை தாங்களே தனிமைப்படுத்துக் கொண்டனர். எல்லோரும் சேர்ந்து ஒன்றாக வாழ்ந்தார்கள். எல்லொரும் ஒரு குடும்பமாக எதிரிகளிடம் இருந்து பாதுகாத்துக் கொண்டனர்.

இன்று, அமெரிக்க மக்கள் அந்த முன்னோடியாக இருக்க காரணம் செவ்விந்தியர்கள். இன்று பல செவ்விந்தியர்கள் நாகரிகமடைந்து நகர்ப்புற வாழ்க்கை வாழ்க்கிறார்கள். அவர்கள் வாழ்ந்த இடம் ஒரு நினைவு சின்னமாக இருக்கிறது. அதை சுற்றுலா தளமாக்கி அமெரிக்க அரசு அதிலும் பணம் பார்த்துக் கொள்கிறது. ஆனால், செவ்விந்தியர்களுக்கு சொந்தமாக ஒரு நிலம் கூட இல்லை என்பது தான் உண்மை.

இது இனப்படுகொலையாக இன்று கருதப்படாததற்கு இரண்டு காரணம். ஒன்று, ஆளும் வர்க்கத்தில் அமெரிக்கா இருப்பது. இன்னொன்று இரண்டு நாடுகளுக்குள் நடந்திருக்கும் யுத்தமாக பார்ப்பது. ஒரு நாடு அடிமையாக்கி இன்னொரு நாடு ஆட்சி செய்வது காலனி ஆதிக்கத்தில் காலம் காலமாக நடப்பது தான். இந்தியாவிலும் பிரிட்டன் அப்படி தான் நடந்துக் கொண்டது. கொலையும், கொள்ளையும் காலனி ஆதிக்கத்தில் சகஜம் என இருக்கலாம்.

போரில் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்துவது வேறு. ஒரு இனம், கலாச்சாரம் இருந்த இடம் தெரியாமல் அழித்துவிட்டு ஆட்சி செய்ய நினைப்பது வேறு. தங்கள் நாடு என்ற சொந்தமறியாமல் செவ்விந்தியர் வாழ்ந்து வருகிறார்கள்.

ஆஸ்திரேலிய இனப்படுகொலை

1788, ஜனவரி,26 இல் ஆயிரத்துக்கும் அதிகமான பிரிட்டீஷ் வெள்ளை இன குடியேறிகள் ( அதில் 90 சதவீததுக்கும் அதிகமானவர்கள் குற்றவாளிகள்) ஆஸ்திரேலியாவில் கேப்டன் “ஆர்தர் பிலிப்” தலைமையில் ஆஸ்திரேலியாவின் சிட்னி மாநகரில் இருக்கும் “பொட்டானி” கடற்கரையில் தரையிறங்கினர். அந்த நாளில் இந்த ஆஸ்திரேலிய மண்ணின் பூர்வீக குடிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அநியாயமாக “இனப்படுகொலை” செய்யப்பட்டார்கள்.

ஒரு இனம் படுகொலை செய்யப்பட்ட “இனப்படுகொலை நாளையே” ஆஸ்திரேலிய வெள்ளை இன மக்கள் “ஆஸ்திரேலிய தினமாக” கொண்டாடி மகிழ்வது பிரிட்டீசாருக்கு புதிதல்ல. 1788 இல் வந்திறங்கிய பிரிட்டீஷ் வெள்ளை இன மக்களால் ” சின்னம்மை” எனும் கொடிய நோய் ஆஸ்திரேலிய பழங்குடியினருக்கு பரவியது. சரியான மருந்தும் பராமரிப்பும் இல்லாமல் ஆஸ்திரேலிய மாநகரில் வசித்த “பூர்வீக குடிகளில்” 90% மக்கள்  இறந்துபோனார்கள். இது கூட ஒரு திட்டமிட்ட இன அழிப்புத்தான். 1788 இல் ஆரம்பமாகிய “பூர்வீக குடிகள்” மீதான இன அழிப்பு போர் 150 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்தது. பல பிரிட்டீஷ் படையெடுப்பாளர்கள் “இனப்படுகொலை குற்றவாளிகளாக” அடையாளம் காணப்பட்டும் அவர்கள் தண்டிக்கபடவேயில்லை. 1804 இல் தஸ்மேனியா “ரிட்சன்” மலைக்குகை முனையில் 50 இக்கும் மேற்பட்ட “பூர்வீக குடிகள்” கோரமாக படுகொலை செய்யப்பட்டார்கள்.

அந்த படுகொலை என்பது தஸ்மேனியாவில் வாழ்ந்த பூர்வீக குடிகளுக்கு ஒரு செய்தியை சொன்னது.“போராடினால் அல்லது உரிமைகளுக்காக புரட்சி செய்தால் நீங்கள் படுகொலை செய்யப்படுவீர்கள்”ஆனாலும் அந்த பூர்வீக குடிகள் தொடர்ந்து தங்களின் உரிமைகளுக்காக தங்களின் மண்ணில் போராடினார்கள்.  மேலே உள்ள புகைப்படத்தில் ஒன்பது பூர்வீக குடிகள் இரும்புச்சங்கிலியால் மிருகங்கள் போல கட்டப்பட்டு படுகொலை செய்யப்படுவதற்கு முன் எடுத்த புகைப்படம் இது. அதில் துப்பாக்கியோடு நிற்கும் ஒருவர். அவனும் ஒரு பூர்வீக குடிதான். ஆனால் பணத்துக்கும் வசதிக்கும் வெள்ளையர்களுக்கு விலைபோன இனத்துரோகி.

1838 இல் எழுபதுக்கும் அதிகமான ஆஸ்திரேலிய பூர்வீக குடி மக்கள் கன்பரா மாநகருக்கு அண்மையில் இருக்கும் “வினெகர் மலை” எனும் இடத்தில் படுகொலை செய்யப்பட்டார்கள். அதே வருடம் அதே இடத்துக்கு அண்மையில் “மையெல்” சிற்றோடைக்கு அருகில் 28 பூர்வீககுடிகள் படுகொலை செய்யப்பட்டார்கள். இதில் குழந்தைகள், பெண்கள், வயோதிகர்களும் உள்ளடக்கம். இதுவும் ஒரு திட்டமிட்ட இனப்படுகொலையே.

1928ம் ஆண்டின் இறுதிப்பகுதியில் ஆஸ்திரேலிய மண்ணின் உள்நாட்டு மக்கள் 110 இக்கு பேருக்கும் அதிகமானவர்கள் “கொனிஸ்டன்” (Coniston station) என்ற ஆஸ்திரேலியாவின் வடக்கு மாநகரில் உள்ள ஒரு இடத்தில், பழிவாங்கல் படுகொலை (massacre in revenge) செய்யப்பட்டார்கள். “Frederick Brooks” எனும் வெள்ளை இன வேட்டையாளன் (dingo hunter) ஒருவன் இறப்புக்கு பழிவாங்கும் முகமாக அந்த ”பூர்வீக குடிமக்கள்” கோரமாக படுகொலை செய்யப்பட்டார்கள். இதில் பெண்களும் பச்சிளம் குழந்தைகளும் அதிகம். தஸ்மேனியா பெருநகரில் வாழ்ந்த பூர்வீக குடிமக்கள் திட்டமிட்டே இனவழிப்பு செய்யப்பட்டார்கள்.

1824 இல் 1500 இக்கும் அதிகமான பூர்வீக குடிமக்கள் தஸ்மேனியா பெரு நகரில் வாழ்ந்தார்கள். ஆனால் 7 வருடங்களுக்கும் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக படுகொலை செய்யப்பட்டு 1831 இல் வெறும் 350 பேரே வாழ்ந்ததாக வரலாறு சொல்கிறது.

அந்த மண்ணில் வாழ்ந்த “பூர்வீக குடிகளின்” வாக்குமூலத்தின் படியும் சாட்சியங்களின் படியும் இது ஒரு தெட்டத்தெளிவான ” இனப்படுகொலை” என தெளிவாகிறது. ஆஸ்திரேலிய பூர்வீக மக்களின்(aboriginal flag) கொடி1920 இல் 750,000 ஆக இருந்த பூர்வீக குடிகளின் ஜனத்தொகையானது, 1928 இல் வெறும் 60,000 ஆக குறைந்தது.

தொடரும்...

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com