பஞ்சாங்கம்

திங்கட்கிழமை

20

ஹேவிளம்பி வருடம், கார்த்திகை 4-ம் தேதி

நல்ல நேரம்

காலை 6.30 - 7.30   மாலை 4.30 - 5.30

ராகு காலம்

7.30 - 9.00

எம கண்டம்

10.30 - 12.00

குளிகை

1.30 - 3.00

திதி

துவிதியை

நட்சத்திரம்

கேட்டை

சந்திராஷ்டமம்

பரணி, கார்த்திகை

இன்றைய ராசிபலன்

மேஷம் - உற்சாகம்
ரிஷபம் - இன்சொல்
மிதுனம் - புகழ்
கடகம் - ஆதரவு
சிம்மம் - கவனம்
கன்னி - காரியசித்தி
துலாம் - பக்தி
விருச்சிகம் - ஆர்வம்
தனுசு - களிப்பு
மகரம் - ஜெயம்
கும்பம் - உதவி
மீனம் - தாமதம்

யோகம்: சித்த யோகம் / அமிர்த யோகம்

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

விசேஷம்: திந்திருணீ கௌரி விரதம். சந்திர தரிசனம். திருவெண்காடு, திருக்கழுக்குன்றம், திருவாடானை, திருக்கடவூர் இத்தலங்களில் ஆயிரத்தெட்டு சங்காபிஷேகம்.

கேள்வி - பதில்
 • கடந்த 5 ஆண்டுகளாக என் மகனுக்கு திருமணம் செய்ய முயற்சித்து வருகிறேன். ஆனால் இன்னும் கைகூடவில்லை. நிறைய பரிகாரங்களும் செய்துள்ளோம். திருமணம் எப்போது கைகூடும்? ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? 
  - வாசகர், சிதம்பரம்

 • உங்கள் மகனுக்கு லக்ன சந்தியாக வருகிறது. அதாவது கன்னியா லக்னம் முடிந்து துலா லக்னம் தொடங்கும் தருவாயில் பிறந்துள்ளார். அதனால் அவருக்கு துலாம் லக்னம் என்று கொண்டே பார்க்க வேண்டும். களத்திர ஸ்தானாதிபதி குருபகவான்களுடன் இணைந்திருக்கிறார். அவருக்கு அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் படித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும். மற்றபடி இதுவரை நீங்கள் செய்யுள்ள பரிகாரங்கள் சரியானது மற்றும் போதுமானது.

 • எனது மகனுக்கு திருமணமாகி 9 வருடங்கள் ஆகின்றன. இன்னும் குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. எப்போது புத்திர பாக்கியம் கிட்டும்?
  - வாசகர்

 • உங்கள் மகனுக்கு விருச்சிக லக்னம், கும்ப ராசி. தற்சமயம் சுகஸ்தானத்தைப் பார்வை செய்யும் சுகாதிபதியின் தசையில் குருபகவானின் புக்தி நடக்கிறது. உங்கள் மருமகளுக்கு துலா லக்னம், சிம்ம ராசி. தற்சமயம் பூர்வபுண்ணியாதிபதியுடன் இணைந்திருக்கும் ராகுபகவானின் புக்தி நடக்கிறது. அதனால் உங்களுக்கு அடுத்த ஆண்டு இறுதிக்குள் மழலை பாக்கியம் உண்டாகும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.

 • எனது மகளுக்கும் மருமகனுக்கும் சற்று இணக்கமில்லை. இந்நிலை எப்போது சீராகும்? 
  - வாசகர், திருநெல்வேலி

 • உங்கள் மகள் மற்றும் மருமகனின் ஜாதகங்களின்படி அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குப்பிறகு அவர்களின் வாழ்க்கையில் மலர்ச்சி உண்டாகும். பிரதி புதன் கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

 • என் பெண் வயிற்றுப் பேத்திக்கு திருமணம் எப்போது நடைபெறும்? எத்தகைய வரன், எத்திசையிலிருந்து அமையும்? புத்திர பாக்கியம் எவ்வாறு உள்ளது? ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? 
  - வாசகி, ராஜகீழ்பாக்கம்

 • உங்கள் பேத்திக்கு மேஷ லக்னம், மகர ராசி, உத்திராடம் நட்சத்திரம். களத்திர ஸ்தானாதிபதி பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் பாக்கியாதிபதியுடன் இணைந்திருக்கிறார். இதனால் புத்திர ஸ்தானம் வலுவடைகிறது என்று கூற வேண்டும். சுக ஸ்தானத்தில் புத ஆதித்ய யோகம் உண்டாகிறது. அதோடு சுகாதிபதியும் தொழில் ஸ்தானாதிபதியும் தொழில் ஸ்தானத்தில் இணைந்து சுக ஸ்தானத்தைப் பார்வை செய்வது சிறப்பு., தற்சமயம் பாக்கிய ஸ்தானத்தில் குருபகவானின் பார்வையை பெற்று அமர்ந்திருக்கும் ராகுபகவானின் தசை நடக்கிறது., அவருக்கு அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் படித்த நல்ல உத்தியோகத்தில் உள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். மற்றபடி செவ்வாய் தோஷம் இல்லை. பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும். 

 • எனக்கு தற்சமயம் சனி தசையில் சுக்கிர புக்தி நடைபெறுகிறது. சாப்பாட்டிற்கு குறையில்லை. ஆனால் வாழ்க்கையில் நிம்மதி இல்லை. எப்போது என் கஷ்டங்கள் விலகும்? எனது மகன்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்? 
  - வாசகர், சாத்தூர்

 • உங்களுக்கு ரிஷப லக்னம், சிம்ம ராசி. லக்னாதிபதி குடும்ப ஸ்தானத்தில் ஆட்சி பெற்றுள்ள தன, பூர்வபுண்ணியாதிபதியுடன் இணைந்திருக்கிறார். தர்ம கர்மாதிபதியான சனிபகவான் உச்சம் பெற்று தற்சமயம் தசையை நடத்துகிறார். உங்களுக்கு தற்சமயம் லக்னாதிபதியின் புக்தி நடப்பதால் இப்போது இருக்கும் நிலையிலிருந்து படிப்படியாக மாற்றங்கள் ஏற்படும். ஓரளவுக்கு நல்ல வருமானம் வரத்தொடங்கும். அதாவது இன்னும் இரண்டாண்டுகளுக்குள் உங்கள் பொருளாதார நிலைமை மேம்பட்டுவிடும் . புத்திர ஸ்தானாதிபதி ஆட்சி பெற்று இருப்பதால் குழந்தைகளின் வாழ்க்கையும் சீராக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.

 • எனது மகனுக்கு கடந்த இரண்டு வருடங்களாக திருமண ஏற்பாடுகள் செய்து வருகிறேன். ஆனால் தட்டிக்கொண்டே போகிறது. எப்போது திருமணம் அமையும்? வேலை வாய்ப்பு, பெற்றோரை கவனித்தல், குணநலன்கள் எப்படி உள்ளது? 
  - வாசகர், ராமநாதபுரம்

 • உங்கள் மகனுக்கு மேஷ லக்னம் அல்ல. ரிஷப லக்னம் என்று வருகிறது. அதனால் அவருக்கு களத்திர ஸ்தானாதிபதி பலம் குறைந்து இருக்கிறார் என்று கூற வேண்டும். இதற்கு ஏற்ற சமதோஷம் பார்த்து சேர்க்க வேண்டியது அவசியம். மற்றபடி தர்மகர்மாதிபதியான சனிபகவான் நீர் ராசியில் இருப்பதால் வெளியூர் வெளிநாடு சென்று வசிக்கும் யோகம் உண்டாகும். வேலையில் நல்ல நிலையைமை எட்டி விடுவார். பெற்றோருக்கும் இறுதிவரை ஆதரவாக இருப்பார். அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் திருமணம் கைகூடும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானை வழிபட்டு வரவும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.

 • எனக்கு திருமணம் எப்போது கைகூடும்? உத்தியோக உயர்வு உண்டா? அரசு வேலை கிடைக்குமா? 
  - வாசகர். தூத்துக்குடி

 • உங்களுக்கு துலா லக்னம், கும்ப ராசி. சந்திரபகவான் தொழில் ஸ்தானாதிபதியாகி பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் அரசு கிரகங்களுடன் இணைந்து இருப்பதால் இன்னும் இரண்டாண்டுகளுக்குள் அரசு சம்பந்தப்பட்ட வேலை கிடைத்துவிடும். அடுத்த ஆண்டு இறுதிக்குள் திருமண முயற்சிகளும் வெற்றி பெறும். ஓரளவுக்கு நெருங்கிய உறவில் (ரத்த சம்பந்தமில்லாத) பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரும்.

 • எனக்கு சதாபிஷேகம் செய்ய நாள் குறிப்பிட்டுச் சொல்லவும். வருங்காலம் எப்படி இருக்கும்? எனக்கு விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் செய்ய பிராப்தம் இருக்கிறதா? தற்சமயம் என்ன தசாபுக்தி நடைபெறுகிறது? 
  - வைத்தியநாதன், வேங்கிக்கால்

 • உங்களின் ஜாதகம் சரியாக கணிக்கப்பட்டுள்ளது. நீங்கள் மாலை ஆறரை மணி அளவில் பிறந்திருக்கிறீர்கள் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கு மிதுன லக்னம், அஸ்த நட்சத்திரம் இரண்டாம் பாதம், கன்னி ராசி என்று வருகிறது. 2021 ஆம் ஆண்டு தொடங்கியவுடன் அதாவது தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள காலகட்டத்திற்குள் வளர்பிறையில் உங்கள் நட்சத்திரத்திற்கு உகந்த சுப முகூர்த்தத்தில் சதாபிஷேகம் செய்து கொள்ளலாம். தற்சமயம் லக்ன, தொழில் ஸ்தானாதிபதியான புதபகவானின் தசை நடக்கிறது. புதபகவான் பாக்கியாதிபதியான சுக்கிரபகவானுடன் ஆறாம் வீட்டில் இணைந்து தசையை நடத்துகிறார். இதனால் எதிர்காலம் சிறப்பாக அமையும். ஆன்மிகக் கிரகங்கள் வலுவாக உள்ளதால் ஆலய குடமுழுக்கு செய்யும் பாக்கியமுண்டு. பிரதி தினமும் விநாயகரை வழிபட்டு வரவும்.

 • முதுகலை பட்டப்படிப்பு படித்து வரும் என் மகனுக்கு அரசு வேலை கிடைக்குமா? திருமணம் எப்போது நடைபெறும்? எதிர்காலம் எவ்வாறு அமையும்?
  - வாசகர், பென்னாகரம்

 • உங்கள் மகனுக்கு மீன லக்னம், மீன ராசி. கஜகேசரி யோகம், மாளவிகா யோகம், நீச்சபங்க ராஜயோகம் போன்ற சிறப்பான யோகங்கள் உள்ளன. தற்சமயம் கேது மஹா தசையில் பிற்பகுதி நடக்கிறது. கேதுபகவான் தைரிய ஸ்தானத்தில் அமர்ந்து குருபகவானால் பார்க்கப்படுகிறார். அதனால் படிப்பு முடிந்த உடனேயே தனியார் உத்தியோகம் கிடைத்துவிடும். இன்னும் மூன்றாண்டுகளுக்குப்பிறகு திருணம் கைகூடும். மற்றபடி எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி தினமும் விநாயகப்பெருமானை வழிபட்டு வரவும்.

 • எனது மகன் மருமகள் இருவரும் பல வருடங்களாக பிரிந்து வாழ்கிறார்கள். இருவரும் சேர்ந்து வாழும் பாக்கியம் உண்டா? எதிர்காலம் எவ்வாறு அமையும்? 
  - வாசகி, கோடம்பாக்கம்

 • உங்கள் மகன் மருகள் இருவரின் ஜாதகங்களின்படி அவர்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குப்பிறகு ஒன்றாக இணைவார்கள். மற்றபடி இருவருக்கும் சிறப்பான எதிர்காலம் உள்ளது. 

 • எனது தொழிலில் முன்னேற்றம் கூடுமா? திருமணம் எப்போது நடைபெறும்? 
  - வாசகர், அணுபுரம்

 • உங்களுக்கு கடக லக்னம், மீன ராசி. தற்சமயம் உச்சம் பெற்ற லாபாதிபதியின் தசை நடக்கத்தொடங்கியுள்ளது. லாப ஸ்தானத்தில் தொழில் ஸ்தானாதிபதி அமர்ந்திருக்கிறார். பாக்கிய ஸ்தானம் சுபக்கிரகங்களால் சூழப்பட்டுள்ளதால் செய்தொழிலில் மேன்மை உண்டாகும். அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குப்பிறகு புதிய வேலைகளுக்கு மாறுவீர்கள். அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் திருமணமும் கைகூடும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.

 • என் மகனுக்கு நிரந்தர தொழில், திருமணம் எப்போது கைகூடும்? 
  - வாசகர், மேட்டுப்பாளையம்

 • உங்கள் மகனுக்கு மேஷ லக்னம், தனுசு ராசி, மூல நட்சத்திரம். லக்னாதிபதியும் களத்திர ஸ்தானாதிபதியும் தொழில் ஸ்தானாதிபதியும் நீச்சம் பெற்றிருந்தாலும் நீச்சபங்க ராஜயோகம் பெற்றிருக்கிறார்கள். பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியான சூரியபகவான் சுக ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். பாக்கியாதிபதியான குருபகவான், லக்னம், லாபம் மற்றும் தைரிய ஸ்தானங்களைப் பார்வை செய்கிறார்கள். தற்சமயம் ராகுபகவானின் தசையில் சுயபுக்தி அடுத்த ஆண்டு மே மாதம் வரை நடக்கும். ராகுபகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்து தசையை நடத்துகிறார். அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் அவருக்கு நிரந்தர உத்தியோகம், திருமணம் இரண்டும் அமைந்துவிடும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் மஹாலட்சுமியை வழிபட்டு வரவும். மற்றபடி எதிர்காலம் சிறப்பாக அமையும். 

 • என்னுடைய இரண்டு மகன்களுக்கும் நல்ல உத்தியோகம் எப்போது அமையும்? திருமணம் தாமதமாகிறது. எப்போது கைகூடும்? 
  - வாசகர், ராமநாதபுரம்

 • உங்கள் மூத்த மகனுக்கு சிம்ம லக்னம், மிருகசீரிஷம் நட்சத்திரம், ரிஷப ராசி. லக்னாதிபதி பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் புதபகவானுடன் இணைந்து புத ஆதித்ய யோகத்தைப் பெறுகிறார். பூர்வபுண்ணிய அஷ்டமாதிபதியான குருபகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் அமர்ந்து அஷ்டம ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். அதோடு தற்சமயம் குரு மஹா தசையில் பிற்பகுதி நடப்பதால் இன்னும் ஒன்றரை ஆண்டுகளுக்குள் படித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும். 
  உங்கள் இரண்டாம் மகனுக்கு சிம்ம லக்னம், கடக ராசி, ஆயில்ய நட்சத்திரம். தொழில் ஸ்தானத்தில் சுக பாக்கியாதிபதியான செவ்வாய்பகவான் திக்பலம் பெற்றிருப்பது சிறப்பு. தொழில் ஸ்தானாதிபதி களத்திர, நட்பு ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் உச்சம் பெற்று தற்சமயம் தசையை நடத்துகிறார். அடுத்த ஆண்டு இறுதிக்குள் சிறப்பான நிரந்தர உத்தியோகம் கிடைத்துவிடும். இன்னும் இரண்டாண்டுகளுக்குப்பிறகு திருமணம் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

 • எனக்கு வேலை எப்படி அமையும்? அரசு வேலை கிடைக்குமா? எந்த தசையில் எக்காலத்தில் வீடு அமையும்? 
  - பிரகாஷ், சீர்காழி

 • உங்களுக்கு துலாம் லக்னம், ரிஷப ராசி. லக்னத்திற்கும் ராசிக்கும் சுக்கிரபகவானே அதிபதியாக வருவது சிறப்பு. சுக்கிரபகவான் லக்னத்திற்கு பதினொன்றாம் வீட்டிலும் ராசிக்கு நான்காம் வீட்டிலும் இருக்கிறார். சுக மற்றும் பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானாதிபதியான சனிபகவான் எட்டாம் வீட்டில் உச்சம் பெற்ற சந்திரபகவானுடன் இணைந்திருப்பது சிறப்பு. பாக்கியாதிபதியான புதபகவான் லக்னத்தில் அமர்ந்திருப்பது சிறப்பு. தொழில் ஸ்தானாதிபதி உச்சம் பெற்றிருப்பதால் உத்தியோகத்தில் சிறப்பான வளர்ச்சியை எட்டி விடுவீர்கள். அரசு அல்லது அரசு சம்பந்த்பபட்ட வேலையும் கிடைக்கும். 2019 -ஆம் ஆண்டு தொடங்கியவுடன் சொந்த வீடு கட்டும் வாய்ப்பு கிடைக்கும். வடக்கு, மேற்கு திசையை பார்த்த மனை நன்மை தரும். இன்னும் நான்காண்டுகளுக்குப் பிறகு தொடங்கும் சனிபகவானின் தசையிலிருந்து படிப்படியான வளர்ச்சியை அடைந்து விடுவீர்கள். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும். 

 • நான் சிங்கப்பூரில் நல்ல வேலையில் இருக்கிறேன். நான் தலைமைப் பதவிக்குச் செல்வேனா? கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகங்கள் முழுமையாக பலன் கொடுக்காதா? பாதகாதிபதிக்கு கேந்திராதிபத்ய தோஷம் கிடையாதா? தொழில் ஸ்தானம் பாதிக்குமா? பத்தில் சுக்கிரன் நன்மையல்ல என்று கூறுகிறார்கள். ராகு தசையில் பாதி முடிந்துவிட்டது. இன்னும் இரண்டு பதவி உயர்வு கிடைத்துவிட்டால் தலைமை பதவி கிடைத்துவிடும். ராகு தசையில் வெற்றி கிடைக்குமா? சொந்தமாக தொழில் செய்யலாமா? 
  - வாசகர், சிங்கப்பூர்

 • உங்களுக்கு மீன லக்னம், சிம்ம ராசி, பூரம் நட்சத்திரம். லக்னம் மற்றும் தொழில் ஸ்தானத்திற்கும் அதிபதியான குருபகவான் பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானத்தில் சனிபகவானின் சாரத்தில் (பூசம் நட்சத்திரம்) உச்சம் பெற்று நவாம்சத்தில் கன்னி ராசியை அடைகிறார். 
  குருபகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாமிடத்தையும் லாப ஸ்தானமான பதினொன்றாம் இடத்தையும் லக்னம் மற்றும் உயிர் ஸ்தானமான ஒன்றாமிடத்தையும் பார்வை செய்கிறார். ஒரு ஜாதகத்திற்கு லக்னாதிபதியின் பலம் அடிப்படை பலம் என்று பலமுறை எழுதியிருக்கிறோம். இது கட்டடத்திற்கு அஸ்திவாரம் எந்த அளவிற்கு பலம் பெற்றிருக்க வேண்டுமோ அதுபோல் ஜாதகத்திற்கு லக்னாதிபதியின் பலத்தைக் கூற வேண்டும். 
  லக்னாதிபதி ஆட்சி உச்சம், மூலத் திரிகோணம், நட்பு வீடு ஆகிய இடங்களில் இருந்தால் பலம் பெறுவார் என்று கூறப்பட்டுள்ளது. உங்களுக்கு உச்சம் பெற்றிருப்பது முழு பலம் என்று கூறவேண்டும். குருபகவான் சுபக்கிரகமாக கேந்திர ஸ்தானமான முதல் வீட்டிற்கும் பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்திற்கும் அதிபதியாக வருவதால் கேந்திராதிபத்ய தோஷம் உண்டாகுமா என்றால் இரண்டு வகையில் "இல்லை' என்று கூற வேண்டும். 
  முதலாவதாக, கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகத்துக்கு லக்ன ஆதிபத்யம் வந்தால் கேந்திராதிபத்ய தோஷம் உண்டாகாது என்கிற அடிப்படையிலும் அந்த கிரகம், ஒரு திரிகோண ஸ்தானத்தில் அமர்ந்து இருந்தாலும் கேந்திராதிபத்ய தோஷம் உண்டாகாது என்கிற மற்றொரு அடிப்படையிலும் குருபகவான் முழுபலம் பெற்று சிறப்பாக அமர்ந்து இருக்கிறார் என்று கூற வேண்டும். 
  ஐந்தாம் வீட்டிற்கு அதிபதியான சந்திரபகவான் ருணம் (கடன்) ரோகம் (வியாதி), சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டில் சுக்கிரபகவானின் சாரத்தில் (பூரம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் நீச்சமடைகிறார். தன ஸ்தானம் இரண்டாம் வீட்டிற்கும் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் சுயசாரத்தில் (அவிட்டம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார். 
  தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும்; அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் சுய சாரத்தில் (பூராடம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார். சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும்; களத்திர, நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான் விரய ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் செவ்வாய்பகவானின் சாரத்தில் (அவிட்டம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார். 
  லாப ஸ்தானாதிபதியான பதினொன்றாமதிபதியும் விரய ஸ்தானாதிபதியான பன்னிரண்டாமதிபதியுமான சனிபகவான் ஆறாம் வீட்டில் சுக்கிரபகவானின் சாரத்தில் (பூரம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கன்னி ராசியை அடைகிறார். 
  பாதகாதிபத்ய தோஷம் பெற்ற கிரகங்களுக்கு கேந்திராதிபத்ய தோஷம் நீங்கிவிடுமா என்கிற கேள்வியைக் கேட்டுள்ளீர்கள். அதாவது தனுசு லக்னத்திற்கு புதபகவான் ஏழாம் வீட்டிற்கு அதிபதியாக வருவதால் பாதகாதிபதியாகவும் மற்றும் பத்தாம் வீடான கேந்திரத்திற்கு அதிபதியாக வருவதால் கேந்திராதிபத்ய தோஷத்தையும் பெறுகிறார். 
  இந்த புத, குருபகவான்கள் பத்தாம் வீடுகளான கன்னி, மீன ராசிகளில் அமர்ந்தால் கேந்திராதிபத்ய தோஷம் குறைந்து விடுகிறது என்று கொள்ள வேண்டும். அதேநேரம் கன்னி, மீன லக்ன காரர்களுக்கு புத குருபகவான்கள் பத்தாம் வீட்டில் இருந்தால் அது அவர்களுக்கு சொந்த வீடாகவும் ஆவதால் கேந்திராதிபத்ய தோஷம் உண்டாகாது என்றும் கூற வேண்டும். இப்படி பல கோணங்களில் ஆராய்ந்து கேந்திராதிபத்ய தோஷம் எந்த அளவுக்கு நன்மை செய்யும் என்று சீர்தூக்கி பார்த்து முடிவு செய்ய வேண்டும் என்பதே எங்கள் கருத்தாகும். 
  உங்களுக்கு பத்தாம் வீட்டில் அஷ்டமாதிபதி இருப்பதால் தொழிலில் திடீர் முடக்கம் வருமா என்று கேட்டுள்ளீர்கள். அதாவது " பத்தில் ஒரு பாபி' என்கிற விதி இல்லையே என்றும் கேட்டுள்ளீர்கள். 
  பொதுவாக, பத்தாம் வீட்டில் சுபக்கிரகமோ அல்லது அசுபக்கிரகமோ எது இருந்தாலும் நன்றாக வேலை செய்யும் என்பது அனுபவ உண்மை. அஷ்டமாதிபதி பத்தாம் வீட்டில் இருந்தால் அடுத்தவர் திடீரென்று விட்டுச் சென்ற வேலையை எடுத்து திறம்பட நடத்துவார் என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. 
  அதாவது உங்களுக்கு மேல் வேலை செய்தவர் உங்களுக்கு அதிகாரிகளாக இருந்தவர் திடீரென்று வேலையை விட்டுச் சென்று விட்டால் அந்த வேலை உங்களுக்குக் கிடைத்து அதில் சிறப்பான வெற்றியைப் பெறுவீர்கள் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
  ஆறாம் வீட்டில் ராகுபகவான் இருந்து தசையை நடத்துவது சிறப்பு. பொதுவாக, ஆறாம் வீடு உத்தியோகம் பார்க்கும் வீடு என்று கூறியிருந்தாலும் அந்த ஆறாம் வீட்டில் உள்ள ராகுபகவானின் தசையில் சிலர் சொந்தத்தொழில் தொடங்கி பெரிய வெற்றிகளை அடைந்து விடுகிறார்கள். இவர்களின் ஜாதகத்தில் லக்னாதிபதி மற்றும் பத்தாம் வீட்டின் அதிபதிகளின் பலம் சிறப்பாக இருப்பதைப் பார்க்கிறோம். உங்களுக்கு லக்னம் மற்றும் பத்தாம் வீடுகளுக்கு அதிபதியான கிரகம் உச்சமடைந்திருக்கிறார். 
  ராகுபகவான் ஆறாம் வீட்டில் அமர்ந்து அஷ்டலட்சுமி யோகத்தைப் பெறுகிறார். அவர் அமர்ந்திருக்கும் வீட்டின் அதிபதி ஆறாம் வீட்டைப் பார்வை செய்கிறார். அவர் சந்திர சனி பகவான்களின் பலத்தை கிரகித்துக் கொண்டும் சூரிய, புத, கேது பகவான்களின் பார்வையை பெற்றும் பலன்களைத் தருவார் என்றால் மிகையாகாது. 
  அதனால் நீங்கள் ராகுபகவானின் தசையில் அற்புதமான நிலையை எட்டி விடுவீர்கள். நீங்கள் சார்ந்துள்ள துறையில் சொந்தமாகவும் தொழில் செய்ய வாய்ப்புகள் குருமஹா தசையில் அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும். எதிர்காலம் வளமாக அமையும்.

ராசி பலன்கள்

 • அதிகம்
  படிக்கப்பட்டவை
 • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை