தங்கத்தின் விலை 6 மாதங்களில் இல்லாத சரிவு

சாதகமற்ற சர்வதேச நிலவரங்களால் 10கிராம் தங்கத்தின் விலை கடந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு வியாழக்கிழமை ரூ.29,000-ஆக குறைந்தது. தொடர்ந்து இரண்டாவது நாளாக தங்கத்தின் விலையிலும் சரிவு ஏற்பட்டது.
தங்கத்தின் விலை 6 மாதங்களில் இல்லாத சரிவு

சாதகமற்ற சர்வதேச நிலவரங்களால் 10கிராம் தங்கத்தின் விலை கடந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு வியாழக்கிழமை ரூ.29,000-ஆக குறைந்தது. தொடர்ந்து இரண்டாவது நாளாக தங்கத்தின் விலையிலும் சரிவு ஏற்பட்டது.
சர்வதேச நாடுகளில் நிலவும் நிச்சயமற்ற சூழல் மற்றும் இந்திய ஆபரண தயாரிப்பாளர்களிடையே தேவை சரிவடைந்துள்ளது ஆகியவற்றின் காரணமாக 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.350 குறைந்து ரூ.29,000-ஆக இருந்தது.
ஆலைகள் மற்றும் நாணய தயாரிப்பாளர்கள் கொள்முதல் அளவை கணிசமாக குறைத்ததையடுத்து ஒரு கிலோ வெள்ளியும் ரூ.735 குறைந்து ரூ.40,700-க்கு விற்பனையானது.
நியூயார்க் சந்தையில் புதன்கிழமை ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1.25 சதவீதம் சரிந்து 1,173 டாலருக்கும், ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 0.81 சதவீதம் குறைந்து 16.48 டாலருக்கும் விற்பனையானது.
ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்பைத் தொடர்ந்து பொதுமக்கள் தங்கம் வாங்குவது மிகவும் குறைந்து போயுள்ளதாக இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கவலை தெரிவித்தனர்.
100 டன் தங்கம் இறக்குமதி: உயர்மதிப்பு கரன்ஸி செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட நிதி நெருக்கடியால் ஆபரணங்கள் விற்பனை குறைந்துள்ளபோதிலும், சென்ற நவம்பரில் 100 டன் தங்கம் இறக்குமதியாகியுள்ளது. கடந்த அக்டோபரில் இதன் இறக்குமதி 97 டன்னாக இருந்தது.
திருமண சீஸன் டிசம்பர் மாத மத்தியில் நிறைவுபெறுவதையடுத்து நடப்பு மாதத்தில் அதன் இறக்குமதி பாதியாக குறையும் என்று அகில இந்திய நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் வர்த்தக கூட்டமைப்பின் இயக்குநர் பச்ராஜ் பமல்வா தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com