ஆப்பிள் நிறுவனம் டுபில் ஜம்ப் நிறுவனத்தை விலைக்கு வாங்குகிறது

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் ஆப்பிள் நிறுவனம் தனது செயற்கை

ஹைதராபாத்: உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் ஆப்பிள் நிறுவனம் தனது செயற்கை நுண்ணறிவு துறையை அடுத்த கட்ட வளர்ச்சிக்குக்கொண்டு செல்லும் விதமாக ஹைதராபாத் நகரத்தைத் தலைமையாக கொண்டு இருக்கும் ஸ்டார்ப்-அப் நிறுவனமான டுபில் ஜம்ப் நிறுவனத்தை ஆப்பிள் எவ்விதமான அதிகாரப்பூர்வு அறிவிப்பும் இல்லாம் கைப்பற்ற திட்டமிட்டுள்ளது.
ஆப்பிள், டுலிப் ஜம்ப் நிறுவனத்தின் சேவை, வர்த்தகம், முக்கிய பிரிவு என எதையும் கைப்பற்றாமல் இந்நிறுவனத்தில் பணியாற்றும் 16 ஊழியர்களை மட்டும் ஆப்பிள் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இதற்காக ஆப்பிள் டுலிப் ஜம்ப் நிறுவனத்திற்குக் கொடுத்த தொகை ஒரு ஆண்டுக்கு 20 மில்லியன் அமெரிக்க டாலர்.
ஒரு நிறுவனத்தின் ஊழியர்களை மட்டும் கைப்பற்றும் போது இந்த டீல் மதிப்பை ஊழியர்கள் சில வருடங்களின் சம்பளத்தை வைத்துக் கணக்கிடப்படும். தற்போது இந்நிறுவனத்தில் பணியாற்றும் 16 ஊழியர்களின் ஒரு வருடச் சம்பளம் 4 மில்லியன் டாலராக இருக்கும் நிலையில் ஆப்பிள் நிறுவனம் இவர்களுக்கு 20 மில்லியன் டாலர் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com