பங்கு வெளியீட்டுக்கு அனுமதி கோரியது ஹெச்டிஎப்சி லைஃப்

ஹெச்டிஎப்சி ஸ்டாண்டர்ட் லைஃப் காப்பீட்டு நிறுவனம் பொதுப் பங்கு வெளியீட்டுக்கு செபியிடம் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது.
பங்கு வெளியீட்டுக்கு அனுமதி கோரியது ஹெச்டிஎப்சி லைஃப்

ஹெச்டிஎப்சி ஸ்டாண்டர்ட் லைஃப் காப்பீட்டு நிறுவனம் பொதுப் பங்கு வெளியீட்டுக்கு செபியிடம் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் செபிக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
ஹெச்டிஎப்சி ஸ்டாண்டர்ட் லைஃப் காப்பீட்டு நிறுவனம் பொதுப் பங்கு வெளியீட்டில் களமிறங்க செபியிடம் அனுமதி கோரி முறைப்படி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பங்கு வெளியீட்டின் மூலம் விரிவாக்கத் திட்டங்களுக்குத் தேவையான ரூ.6,500-ரூ7,500 கோடியை திரட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பொதுப் பங்கு வெளியீட்டின் மூலம் ஹெச்டிஎப்சி நிறுவனத்துக்கு சொந்தமான 9.57 சதவீத பங்குகளும், ஸ்டாண்டர்ட் லைஃப் நிறுவனத்துக்குச் சொந்தமான 5.43 சதவீத பங்குகளும் விற்பனை செய்யப்படவுள்ளன.
குறிப்பாக, இந்த இரு நிறுவனங்களிலிருந்தும் ரூ.10 முகமதிப்பு கொண்ட மொத்தம் 29,98,27,818 பங்குகள் பொதுப் பங்கு வெளியீட்டின் மூலம் விற்பனை செய்யப்படவுள்ளன.
இதில், கோரிக்கை அடிப்படையிலான பங்கு விற்பனையின் மூலம் ஹெச்டிஎப்சியின் 19,12,46,050 பங்குகளும், ஸ்டாண்ர்ட் லைஃப்பின் 10,85,81,768 பங்குகளும் விற்பனை செய்யப்படும் என ஹெச்டிஎப்சி லைஃப் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com